சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஔதா | அம்பாரி , யானைமேற் பீடம் . |
ஔதாரியம் | பெருந்தன்மை , உதாரத்துவம் , உதாரகுணம் . |
ஔபசாரிகம் | உபசாரமான வார்த்தை ; ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது . |
ஔபாசனம் | வேள்வித் தீயோம்புகை ; இல்லறத்தார் காலையிலும் மாலையிலும் செய்யும் வேள்விச் சடங்கு . |
ஔபாசனை | வைதிகச் சடங்கு நடத்தல் . |
ஔரசபுத்திரன் | குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் ; தான் பெற்ற பிள்ளை ; உரிமை மகன் . |
ஔரசன் | குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் ; தான் பெற்ற பிள்ளை ; உரிமை மகன் . |
ஔரதன் | குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் ; தான் பெற்ற பிள்ளை ; உரிமை மகன் . |
ஔலியா | இசுலாமிய அடியார்கள் . |
ஔவித்தல் | பொறாமைப்படுதல் ; அழுக்காறு கொள்ளல் . |
ஔவியம் | அழுக்காறு ; பொறாமை ; தேவர்களுக்குச் செய்யும் சடங்கு . |
ஔவுதல் | வாயால் பற்றுதல் ; கடித்துப்பிடித்தல் ; அழுந்தியெடுத்தல் . |
ஔவை | தவப்பெண் , ஆரியாங்கனை ; தாய் ; ஔவையார் . |
ஔவைநோன்பு | செவ்வாய்க் கிழமையில் பெண்கள் நோற்கும் ஒரு நோன்பு . |
ஔ | பன்னிரண்டாம் உயிரெழுத்து ; தாரவிசையின் எழுத்து ; பூமி ; அநந்தன் என்னும் பாம்பு ; விளித்தல் ; அழைத்தல் ; வியப்பு ; தடை இவற்றைக் காட்டும் ஒரு முன்னொட்டு . |
ஔக்குறுக்கம் | ஔகாரக் குறுக்கம் ; ஔகாரம் தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலித்தல் . |
ஔகம் | இடைப்பாட்டு . |
ஔகாரம் | ஔ' என்னும் எழுத்து . |
ஔசனம் | உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று . |
ஔசித்தியம் | தகுதி , உசிதமாந்தன்மை . |
ஔசீரம் | இருக்கை ; ஆசனம் ; கவரிமான் மயிர் ; படுக்கை . |
ஔடணம் | மிளகுசாறு . |
ஔடதம் | மருந்து ; மாற்று மருந்து . |
ஔடதவாதி | மூலிகையிலிருந்து உயிர் உற்பத்தியாயிற்று என்று கூறுவோன் . |
ஔடவம் | ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண் . |
ஔடவராகம் | ஐந்து சுரமட்டும் பயன்படுத்தப்படும் பண் . |
ஔத்தமர்ணிகம் | வட்டியோடு தருவதாக வாங்கிய பொருள் . |
ஔத்தாலகம் | புற்றுத்தேன் . |
ஔத்தாலிகம் | புற்றுத்தேன் . |
ஔத்திரி | சிவதீட்சை ஏழனுள் ஒன்று . |
ஔத்திரிதீட்சை | சிவதீட்சை ஏழனுள் ஒன்று . |
ஔதசியம் | பால் . |
ஔதநிகன் | சமையற்காரன் . |
![]() |