சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| காகி | விளாமரம் . |
| காகித்தம் | குறிஞ்சாக்கொடி . |
| காகித்திரம் | குறிஞ்சாக்கொடி . |
| காகிதம் | தாள் , கடுதாசி ; கடிதம் |
| காகு | கூறப்படாத பொருளைத் தரக்கூடிய சொல்லின் ஒசை வேறுபாடு . |
| காகுத்தன் | ககுத்த வமிசத்தில் தோன்றிய இராமன் . |
| காகுளி | பேய்போலக் கத்திப் பாடுதல் ; தொண்டையில் உண்டாகும் மந்தவோசை ; இசை ; தவிசு . |
| காகூவெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| காகொடி | எட்டிமரம் . |
| காகோடகி | வாலுளுவை என்னும் மருந்து . |
| காகோடி | காண்க : காகொடி . |
| காகோடியன் | கழைக்கூத்தன் . |
| காகோதம் | பாம்பு . |
| காகோதரம் | பாம்பு . |
| காகோலம் | காண்க : காகாலன் . |
| காகோளி | அசோகமரம் ; கொடியரசமரம் ; தேட்கொடுக்கிமரம் . |
| காங்கி | பேராசைக்காரன் ; வேலையாளர் தொகுதி . |
| காங்கிசை | விருப்பம் . |
| கா | ஓர் உயிர்மெய்யெழுத்து(க்+ஆ) ; சோலை ; கற்பகமரம் ; பாதுகாப்பு ; காவடித்தண்டு ; துலாக்கோல் ; ஒரு நிறையளவு ; தோட்சுமை ; பூ முதலியன இடும் பெட்டி ; அசைச்சொல் ; கலைமகள் . |
| காக்கட்டான் | ஒரு கொடிவகை , கொடிக் காக்கட்டான் . |
| காக்கணம் | காக்கட்டான்கொடி |
| காக்கத்துவான் | கிளிவகை . |
| காக்கம் | காக்குறட்டைச்செடி ; கோவைக்கொடி . |
| காக்கன்போக்கன் | தீநெறியில் நடப்போன் ; ஊர்பேர் தெரியாதவன் . |
| காக்காச்சி | ஒரு கடல்மீன்வகை ; ஒருவகைக் கிளிஞ்சில் . |
| காக்காந்தோல் | குதிகாலில் உண்டாகும் கொப்புளவகை . |
| காக்காய் | காகம் . |
| காக்காய்க்கால் | காய்ந்த வயலிற் காணும் வெடிப்பு ; காகத்தின் கால்போற் காணும் வயிரக் குற்றவகை ; எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி . |
| காக்காய்கொல்லி | ஒருவகைச் செடி . |
| காக்காய்ச்சோளம் | கருஞ்சோளம் . |
| காக்காய்ப்பொன் | போலிப் பொன் ; ஒருவகை வண்ணத்தகடு . |
| காக்காய்வலிப்பு | கால் கை வலிப்பு நோய்வகை . |
| காக்காரர் | தோட்சுமைக்காரர் ; பல்லக்குக் காத்தண்டுகளைச் சுமப்போர் . |
| காக்காவெனல் | காக்கையின் ஒலிக்குறிப்பு . |
| காக்குறட்டை | காக்கணங்கொடிவகை . |
| காக்கை | காகம் ; அவிட்டநாள் . |
| காக்கைக் கண்ணன் | மாறுகண்ணன் . |
| காக்கைக்குணம் | மடியின்மை ,கலங்காமை , நெடுகக் காண்டல் , பொழுது இறவாது இடம் புகுதல் , மறைந்த புணர்ச்சி ஆக ஐந்தும் காக்கையின் தன்மைகள் . |
| காக்கைக்கொடியாள் | மூதேவி . |
| காக்கைப்பொன் | காண்க : காக்காய்ப்பொன் . |
| காக்கைமல்லி | நுணாமரம் . |
| காக்கைவலி | காண்க : காக்காய்வலிப்பு . |
| காக்கைவேலி | உத்தாமணி , வேலிப்பருத்தி . |
| காகச்சிலை | காந்த சக்தியுள்ள ஒருவகை இரும்புக்கட்டி . |
| காகத்துரத்தி | ஆதொண்டைக்கொடி . |
| காகதாலியம் | காகம் பனையில் உட்காரப்பழம் விழுதல் இயல்பாக நடைபெறும் செயலை ஒருவன் தன்மேலேற்றிக்கொள்ளும் நெறி . |
| காகதால¦யம் | காகம் பனையில் உட்காரப்பழம் விழுதல் இயல்பாக நடைபெறும் செயலை ஒருவன் தன்மேலேற்றிக்கொள்ளும் நெறி . |
| காகதாளி | கருங்காலி . |
| காகதாளீயம் | காண்க : காகதாலியம் . |
| காகதுண்டம் | அகில் . |
| காகதுண்டி | ஒருவகைப் பித்தளை ; கஞ்சாப்பூண்டு . |
| காகதுவசம் | வடவைத் தீ , ஊழித் தீ . |
| காகதேரி | மணித்தக்காளிச்செடி . |
| காகந்தி | காவிரிப்பூம்பட்டினம் . |
| காகநதி | அகத்திய முனிவர் கமண்டல நீரைக் காகம் கவிழ்த்ததால் வந்த ஆறு , காவேரி ஆறு . |
| காகநாசம் | நரிமுருங்கை . |
| காகப்புள் | காக்கை ; அவிட்டநாள் . |
| காகபதம் | ஒரு காலவளவு , 65 ,536 கணங்கொண்ட காலவகை . |
| காகபலம் | வேம்பு ; எலுமிச்சமரம் . |
| காகபலி | பகலில் உணவு கொள்ளுவதற்கு முன்பு காகத்துக்கு இடும் உணவு . |
| காகபாதம் | வயிரக்குற்றங்களுள் ஒன்று . |
| காகபிந்து | கரும்புள்ளி . |
| காகபீலி | குன்றிக்கொடி . |
| காகம் | காக்கை ; அவிட்டநாள் ; கீரி ; கற்பகம் . |
| காகமாசி | மணித்தக்காளி . |
| காகரி | திப்பிலி . |
| காகரூடி | பன்றி . |
| காகல¦ரவம் | குயில் . |
| காகலூகம் | ஆந்தை . |
| காகவாகனன் | காக்கையை ஊர்தியாகவுடைய சனி . |
| காகளம் | எக்காளம் , ஒருவகை வாத்தியம் . |
| காகாபிசாசு | இரத்தமுண்ணும் வௌவால் . |
| காகாரி | ஆந்தை . |
| காகாலன் | அண்டங்காக்கை . |
| காகாவிரிச்சி | காண்க : காகாபிசாசு . |
|
|