சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கெட்டிவாத்தியம் | தாலி கட்டுகை முதலிய காலங்களில் முழங்கும் அனைத்து வாத்தியம் . |
கெட்டு | பக்கக்கிளை . |
கெட்டுப்போதல் | அழிதல் ; அழுகிப்போதல் ; ஒழுக்கங்கெடுதல் ; வறுமையுறுதல் ; காணாமற்போதல் . |
கெட்டுப்போனவள் | கற்பழிந்ததனாற் சாதியினின்று விலக்கப்பட்டவள் . |
கெட்டுவிடுதல் | அழிதல் ; அழுகிப்போதல் . |
கெட்டுவைத்தல் | கிளைவிடுதல் . |
கெட்டேன் | இரக்கக் குறிப்பு . |
கெடலணங்கு | மூதேவி . |
கெடலூழ் | தீவினை . |
கெடவரல் | மகளிர் விளையாட்டு ; மகளிர் கூட்டம் . |
கெடி | நிறைவேறிவருஞ் செயல் ; அதிகாரம் ; மலைக்கோட்டை ; ஊர் ; வல்லமை ; புகழ் ; அச்சம் . |
கெடிமாடு | நீண்ட பயணத்தின் இடையிடையே வண்டியில் மாற்றிப் பூட்டும் எருது . |
கெடிலம் | ஆழமான ஓடை ; கடலூர்க்கருகிலோடும் ஓர் ஆறு ; ஒடுங்கிய வழி . |
கெடிறு | காண்க : கெளிறு . |
கெடு | கேடு ; வறுமை ; தவணை ; எல்லை . |
கெடுகாலம் | அழிவுகாலம் . |
கெடுகிடுதல் | கெட்டொழிதல் . |
கெடுகுறி | கேட்டிற்கு அறிகுறி , உற்பாதம் . |
கெடுத்தல் | அழித்தல் ; பழுதாக்குதல் ; ஒழுக்கங்கெடுத்தல் ; அவமாக்குதல் ; செயலைத் தடை செய்தல் ; இழத்தல் ; நீக்குதல் ; நஞ்சு முதலியவற்றை முறியச் செய்தல் ; முறியடித்தல் ; காணாமற் போகுதல் . |
கெடுதல் | அழிதல் ; பழுதாதல் ; வறுமையடைதல் ; ஒழுக்கங்கெடுதல் ; உருவழித்தல் ; தோற்றோடுதல் ; விபத்து ; தீங்கு ; விகாரத்தால் எழுத்துக் கெடுதல் ; வழிதவறிப்போதல் . |
கெடுதலை | அழிவு ; பழுது . |
கெடுதி | அழிவு ; இழப்பு ; இழந்த பொருள் ; ஆபத்து ; துன்பம் ; தீமை . |
கெடுநினைவு | தீயபுத்தி . |
கெடுப்பினை | வங்கமணல் . |
கெடுபடுதல் | விபத்தடைதல் . |
கெடுபிடி | தடபுடல் ; விரைவு . |
கெடுபுத்தி | கெடுநினைவு . |
கெடும்பு | கெடுநினைவு ; கேடு . |
கெட்டிமேளம் | தாலி கட்டுகை முதலிய காலங்களில் முழங்கும் அனைத்து வாத்தியம் . |
கெ | ஓர் உயிர்மெய்யெழுத்து (க்+எ) . |
கெக்கட்டம் | பெருஞ்சிரிப்பு . |
கெக்கரித்தல் | கொக்கரித்தல் , ஆரவாரித்தல் ; மிக இனித்தல் . |
கெக்கலி | மகிழ்ச்சியாற் கைகொட்டிச் சிரித்தல் ; குலுங்கச் சிரித்தல் . |
கெக்கலிகொட்டுதல் | மகிழ்ச்சியாற் கைகொட்டிச் சிரித்தல் ; குலுங்கச் சிரித்தல் . |
கெக்கலித்தல் | குலுங்கச் சிரித்தல் ; மகிழ்தல் . |
கெக்கலிப்படுதல் | குலுங்கச் சிரித்தல் ; மகிழ்தல் . |
கெக்களம் | அதிகச் சிரிப்பு . |
கெக்களித்தல் | நெளித்தல் ; துருத்துதல் ; தோல்விகாட்டல் . |
கெங்காதீரம் | கங்கைக்கரை . |
கெச்ச | போ . |
கெச்சக்காய் | கழற்சிக்காய் . |
கெச்சங்கெட்டவன் | நாணமில்லாதவன் . |
கெச்சம் | முல்லைக்கொடி ; அரசமரம் ; காற்சதங்கை . |
கெச்சிதம் | கெற்சிதம் , முழக்கம் ; பெருமிதம் , கம்பீரம் ; குணமடைந்துவருகை . |
கெச்சை | காற்சதங்கை . |
கெச்சைநடை | பெருமிதநடை . |
கெச்சைமிதி | கூத்தின் விரைந்த நடை ; குதிரை விரைந்து செல்லும் நடைவகை ; பெருமிதநடை . |
கெசக்கன்னி | வெருகங்கிழங்கு . |
கெசகன்னம் | காண்க : கசகர்ணம் . |
கெசம் | யாணை ; இரண்டு முழ அளவு . |
கெசமாமுட்டி | எட்டிமரம் . |
கெசாசைநா | கையாந்தகரைப்பூடு . |
கெஞ்சிக்கேட்டல் | தாழ்ந்த குரலுடன் வேண்டுதல் . |
கெஞ்சுதல் | இரந்து வேண்டுதல் , வருந்திக் கேட்டல் , மன்றாடுதல் . |
கெட்ட | அழிந்த ; தீய . |
கெட்டகேடு | தாழ்ந்த நிலையைக் குறிக்கும் ஓர் இழிச்சொல் . |
கெட்டணை | இறுகும்படி கெட்டிக்கை . |
கெட்டதனம் | தீயொழுக்கம் . |
கெட்டநடந்தை | தீயொழுக்கம் . |
கெட்டம் | தாடி . |
கெட்டலைதல் | நிலைகெட்டுத் திரிதல் . |
கெட்டவன் | தீயவன் , தீயொழுக்கமுள்ளவன் . |
கெட்டவியாதி | கொடிய நோய் ; ஆண்பெண் குறிகளில் உண்டாகும் நோய் . |
கெட்டவேளை | பொல்லாத காலம் , தீயநேரம் ; சமயமல்லாத சமயம் . |
கொட்டாகெட்டி | மிகுந்த திறமை ; மிக்க திறமையுள்ளவன் . |
கெட்டாரகெட்டி | மிகுந்த திறமை ; மிக்க திறமையுள்ளவன் . |
கெட்டி | உறுதி ; இறுக்கம் ; திறமை ; திறமையுடையவன் ; உரத்த குரல் ; அழுத்தம் ; மிக நன்று . |
கெட்டிக்காப்பு | உட்குழலில்லாத இந்தியக் காப்பு என்னுங் கையணி . |
கெட்டிக்காரன் | திறமையுடையவன் ; அறிவு மிக்கவன் . |
கெட்டிக்கொலுசு | உட்குழலில்லாத கொலுசு . |
கெட்டிச்சாயம் | அழுத்தமான சாயம் . |
கெட்டித்தல் | உறுதிப்படுத்துதல் . |
கெட்டித்தனம் | திறமை ; செட்டு . |
கெட்டிபண்ணுதல் | பலப்படுத்தல் ; உறுதியாக்குதல் . |
கெட்டிமூங்கில் | கல்மூங்கில் . |
![]() |
![]() |