கௌ முதல் - கௌளிபாத்திரம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கௌணப்பொருள் இலக்கணை வகையாற் கொள்ளும் பொருள் .
கௌணம் முக்கியமல்லாதது .
கௌணியர் திருஞானசம்பந்தர் ; பூமியிலுள்ளோர் .
கௌத்துவக்காரன் வஞ்சகன் .
கௌத்துவம் அத்தநாள் ; திருமால் மார்பில் அணியும் பணி ; பதுமராகம் ; வஞ்சனை .
கௌதகம் போதிகை .
கௌதம் சிச்சிலிக்குருவி ; கட்டுமானவகை .
கௌதமன் ஒரு முனிவன் ; புத்தன் ; நியாயஞ்செய்த அக்கபாதர் ; கிருபாசாரியார் .
கௌதமி கோரோசனை ; கோதாவரி ஆறு .
கௌதமிமை கோரோசனை ; கோதாவரி ஆறு .
கௌதாரி ஒரு பறவை .
கௌதுகம் மகிழ்ச்சி ; சால விளையாட்டு ; காப்பாக மணிக்கட்டில் கட்டும் நூல் ; தாலி .
கௌதூகலம் மிதிபாகல் .
கௌந்தி சமணப் பெண்துறவி ; வால்மிளகு ; கடுக்காய்வேர் .
கௌபீனசுத்தம் பிற பெண்களைச் சேராதிருக்கும் தூயதன்மை .
கௌபீனசுத்தன் பிற பெண்களைச் சேராதவன் .
கௌபீனம் காண்க : கோவணம் , கச்சைச்சீலை .
கௌமாரம் இளம்பருவம் ; முருகக்கடவுளே பரம்பொருள் என்று வழிபடுவோரின் சமயம் .
கௌமாரி ஏழு மாதர்களுள் ஒருத்தி ; மாகாளி .
கௌமுதி திருவிழா ; நிலவு .
கௌமோதகி திருமாலின் தண்டாயுதம் .
கௌரம் வெண்மை ; பொன்னிறம் .
கௌரவம் மேன்மை , பெருமிதம் .
கௌரவர் குருகுல வேந்தனான திருதராட்டிரன் மக்கள் , துரியர் .
கௌரி பார்வதி ; காளி ; எட்டு அல்லது பத்து ஆண்டுப் பெண் ; பொன்னிறம் ; கடுகு ; புளி நறளைச் செடி ; துளசி ; பூமி ; ஒரு பண்வகை .
கௌரிகேணி வெள்ளைக் காக்கணங்கொடி .
கௌரிசங்கம் இரட்டை உருத்திராட்சம் .
கௌரிசங்காமணி இரட்டை உருத்திராட்சம் .
கௌரிசிப்பி சங்கு வடிவுடைய பாண்டம் .
கௌரிபாத்திரம் சங்கு வடிவுடைய பாண்டம் .
கௌரிமைந்தன் பார்வதி புதல்வனாகிய முருகன் ; விநாயகன் .
கௌரியம் கருவேம்பு .
கௌரியன் பாண்டியன் பட்டப்பெயர் .
கௌரிவிரதம் ஐப்பசி மாதத்தில் கௌரியை நோக்கிப் புரியும் நோன்பு .
கௌல் தீநாற்றம் ; நிலக்குத்தகை உடன் படிக்கை .
கௌவியம் பசுக் கொடுக்கும் பொருள்களான பால் , தயிர் , நெய் , மூத்திரம் , சாணம் ஆகியவற்றின் சேர்க்கை .
கௌவுகன் கீழ்ப்பார்வை .
கௌவுதடி கவைத்தடி .
கௌவுதல் வாயால் பற்றுதல் ; கவர்தல் .
கௌவை ஒலி ; வெளிப்பாடு ; பழிச்சொல் ; துன்பம் ; கள் ; எள்ளிளங்காய் ; ஆயிலியநாள் ; செயல் .
கௌளம் ஒரு பண்வகை .
கௌளி பல்லி ; நூறு வெற்றிலைகொண்ட கட்டு ; ஒரு பண்வகை .
கௌளிக்காதல் நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச் சத்தம் .
கௌளிச்சொல் நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச் சத்தம் .
கௌளிப்பாத்திரம் வெள்ளை வெற்றிலைவகை .
கௌளிபந்து ஒரு பண்வகை .
கௌளிபாத்திரம் மஞ்சள்நிறக் காய்காக்கும் தென்னைவகை ; தேங்காயோட்டினால் செய்யப்பட்டுத் துறவியர் உணவுகொள்ளப் பயன்படுத்தும் பாத்திரம் .
கௌ ஓர் உயிர்மெய்யெழுத்து (க்+ஔ) ; கொள்ளு .
கௌசல்யம் திறமை .
கௌசலம் திறமை ; சூழ்ச்சி ; ஒரு நாடு .
கௌசனம் காண்க : கோவணம் .
கௌசனை உறை ; குதிரை முதலியவற்றின் மேற் போடும் மெத்தை .
கௌசிகபலம் தேங்காய் .
கௌசிகம் கூகை ; பட்டாடை ; ஒரு பண் வகை ; விளக்குத்துண்டு ; பாம்பு ; வியாழன் ; சோகி .
கௌசிகன் குசிக மரபினன் , விசுவாமித்திரன் ; இந்திரன்
கௌசிகை கிண்ணம் ; விசுவாமித்திரன் ; உடன்பிறந்தாள் .
கௌசுகம் குங்கிலியம்
கௌஞ்சம் கிரவுஞ்சம் ; அன்றிற்பறவை .
கௌஞ்சிகன் பொன்வினைஞன் .
கௌடநெறி செறிவு முதலிய வைதருப்ப நெறிக்குரிய குணங்கள் நிரம்பிவாராமல் சொற்பெருகத் தொடுக்கும் செய்யுள்வகை .
கௌடம் வங்கத்தில் உள்ள ஓர் இடம் ; கௌடநெறி ; ஒரு மூலிகைவகை .
கௌடி ஒரு பண்வகை .
கௌடிலம் வளைவு .