சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சூ | ஓர்உயிர்மெய்ழுத்து (ச்+ஊ) ; நாயை ஏவும் ஓலிக்குறிப்பு ; வியப்புச்சொல் ; வாணவகை ; சுளுந்து . |
சூக்கம் | நுண்மை ; தூலப்பொருளிள் நுண்ணிய உருவம் ; நுண்ணிய பொருள் ; கூர்மை . |
சூக்காட்டுதல் | நாயை ஏவுதல் ; சூவென்று சத்தமிட்டு வெருட்டுதல் . |
சூக்காய் | நண்டுவகை . |
சூக்கீடம் | கம்பளிப்பூச்சி . |
சூக்குமசரீரம் | காண்க : சூட்சுமசரீரம் . |
சூக்குமதண்டுலம் | திப்பிலி . |
சூக்குமதாரி | வஞ்சகன் . |
சூக்குமதேகம் | காண்க : சூட்சுமசரீரம் . |
சூக்குமபத்திரம் | கடுகு ; கொத்துமல்லி ; சீரகம் ; செங்கரும்பு . |
சூக்குமபுத்தி | கூர்மையான அறிவு . |
சூக்குமம் | நுண்மை ; பருப்பொருளின் நுண்ணியவடிவம் ; காண்க : சீந்தில் ; ஏலம் ; சிவாகமம் . |
சூக்குமாலங்காரம் | ஒருகருத்தைக் குறிப்பினால் உணர்த்தும் அணி . |
சூக்குமித்தல் | நுட்பமாதல் . |
சூக்குமில் | சிலந்திக்கூடு . |
சூக்குளி | வெற்றிலை . |
சூக்கொட்டுதல் | சூவொலியிட்டுச் சம்மதங் காட்டுதல் ; வெறுப்புக்குறி காட்டுதல் . |
சூகம் | தாமரைக்கொடி ; ஊர்வன ; நெல்வால் ; அம்பு ; இரக்கம் ; காற்று ; சுனை . |
சூகரம் | பன்றி ; மான்வகை . |
சூகரை | குளத்தில் உடைப்புநீர் வெளிப் போகாதபடி இடும் அணை , அடைகரை . |
சூகை | தலைசுற்றல் ; வீட்டின் பின்புறம் ; கரிய சிற்றெறும்புவகை ; யானை . |
சூகைக்கண் | அண்மைப்பார்வை . |
சூகையாடுதல் | தலைசுற்றுதல் . |
சூங்குமம் | வேலிப்பருத்தி . |
சூச்சான் | கிட்டிப்புள் விளையாட்டு . |
சூச்சூவெனல் | சத்தத்தை அடக்குங் குறிப்பு ; நாயை எவுதற்குறிப்பு . |
சூசகம் | அறிகுறி ; தருப்பை . |
சூசகவாயு | காண்க : சூதகவாயு . |
சூசகன் | ஒற்றன் ; ஆசிரியன் ; பின்பற்றத்தக்கவன் முன்மாதிரியான நடத்தையுடையவன் . |
சூசம் | செம்மறியாட்டுக்கடா . |
சூசனம் | குறிப்பிக்கை ; குறிப்பு ; திட்டம் ; கூர்மை . |
சூசனை | குறிப்பிக்கை ; குறிப்பு ; திட்டம் ; கூர்மை . |
சூசி | ஊசி ; ஊசிமுனைபோல் அமைக்கும்படை வகுப்புவகை ; மெல்லிய கரையுள்ள துணிவகை ; காண்க : சூசிக்கை ; அட்டவணை . |
சூசிக்கல் | ஊசிக்காந்தம் . |
சூசிக்கை | நடுவிரலும் பெருவிரலுஞ் சேர்ச்சுட்டுவிரல் நிமிர மற்றை இருவிரல்களும் முடங்கிநிற்கும் இணையாவினைக்கைவகை . |
சூசிகம் | ஒரு வாத்தியவகை . |
சூசிகன் | தையற்காரன் . |
சூசிகாதரம் | துதிக்கையைக் கொண்டிருப்பதாகிய யானை . |
சூசிகாபாணம் | ஒரு கூரிய அம்புவகை . |
சூசிகாமுகம் | ஊசிபோன்ற கூர்வாயுடையசங்கு . |
சூசிகாவாயு | காண்க : சூதகவாயு . |
சூசிகாவியூகம் | ஊசி முனைபோல் முனைசிறுத்து வர அமைக்கும் படைவகுப்புவகை . |
சூசிகை | ஊசி ; குறிப்பு ; யானைத்துதிக்கை . |
சூசித்தல் | சுருக்குதல் ; குறிப்பித்தல் . |
சூசிப்பித்தல் | குறிப்பித்தல் ; சுருங்கச்சொல்லல் . |
சூசிபத்திரம் | பொருளட்டவணை . |
சூசீபத்திரம் | பொருளட்டவணை . |
சூசியம் | சூட்டிறைச்சி . |
சூசுகம் | முலைக்கண் . |
சூட்சக்காரன் | கூர்மையுள்ளவன் ; தந்திரமுள்ளவன் . |
சூட்சி | வஞ்சகம் ; ஆலோசனை சூழ்ச்சி . |
சூட்சித்தல் | ஆராய்ந்தறிதல் . |
சூட்சியன் | மந்திரி ; ஆலோசனை வல்லவன் . |
சூட்சுமசரீரம் | நுண்ணிய உடல் . |
சூட்சுமபுத்தி | நுண்ணிறிவு ; அறிவுக்காட்சி . |
சூட்சுமம் | நுண்மை ; பொருளின் நுண்ணியவடிவம் ; திறமை ; இழிந்தது ; அறிவுநுட்பம் ; சூழ்ச்சி ; சுருக்கம் ; செட்டு ; சுருக்கவழி ; எச்சரிக்கை ; நுட்பமான கூறு . |
சூட்டடுப்பு | அடுப்புவகை . |
சூட்டாணி | காண்க : சூட்டுக்கோல் . |
சூட்டிக்கை | கூரியவறிவு ; சுறுசுறுப்பு . |
சூட்டிஞ்சி | ஏவறைகளைக்கொண்ட மதில் . |
சூட்டிவிடுதல் | பெண்ணை மணஞ்செய்து கொடுத்தல் ; நியமித்தல் ; ஒப்படைத்தல் . |
சூட்டிறைச்சி | சுட்ட இறைச்சி . |
சூட்டு | தரித்தல் ; மாலை ; நுதலணி மாலை ; நெற்றிப்பட்டம் ; கோழி , மயில் முதலியவற்றின் உச்சிக்கொண்டை ; பாம்பின் படம் ; வண்டிச் சக்கரத்தின் விளிம்பில் வைத்த வளைந்த மரம் , வட்டகை ; ஏவறை ; சுடப்பட்டது ; தீவட்டிவகை . |
சூட்டுக்கோல் | சூடு இடுதற்குரிய கம்பி . |
சூட்டுதல் | அணிவித்தல் ; ஒருவரை பாட்டால் புனைதல் ; பட்டம் முதலியன கொடுத்தல் ; முடிபுனைதல் ; ஆணை முதலியன செலுத்துதல் ; பரப்புதல் ; சுமத்துதல் ; சூட்டிவிடுதல் . |
சூட்டுமாலை | தோளணிமாலை . |
சூட்டுமிதி | நெல் முதலியவற்றின் சூட்டைக் கடாவிட்டு உழக்குகை . |
சூட்டுவலி | சூட்டினால் உடம்பில் ஏற்படும் நோவு ; மகப்பேற்றுவலி . |
சூட்டெண்ணெய் | உடற்சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும் எண்ணெய் ; வேப்பெண்ணெய் . |
சூட்டோடுசூடாய் | உடன்தொடர்ச்சியாக . |
சூடகம் | கைவளை ; கிணறு ; சடை . |
சூடங்கெட்டுப்போதல் | நிலைகெட்டு முடிவாதல் . |
சூடடித்தல் | காண்க : சூட்டுமிதி . |
சூடம் | கருப்பூரம் ; தலையுச்சி ; சீழ்க்கை . |
சூடன் | கருப்பூரவகை ; மீன்வகை . |
![]() |
![]() |