சொல்
|
அருஞ்சொற்பொருள் |
செ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ச்+எ) . |
செக்கச்சிவத்தல் | மிகச் சிவத்தல் . |
செக்கச்செவேரெனல் | மிகவுஞ் சிவந்திருத்தற் குறிப்பு . |
செக்கடி | எண்ணெயாட்டும்இடம் . |
செக்கடித்தல் | செக்கில் எள் , வேர்க்கடலைக் கொட்டை , தேங்காய்க் கொப்பரை முதலியவற்றை ஆட்டுதல் . |
செக்கணி | ஒரு கூத்துவகை . |
செக்கம் | சிவப்பு ; கோபம் ; இறப்பு . |
செக்கர் | சிவப்பு ; செவ்வானம் . |
செக்கர்ச்சிவப்பு | மிகு சிவப்பு . |
செக்கர்வானிறத்தன் | செவ்வானம்போல் செந்நிறமுள்ள சிவன் ; வீரபத்திரன் . |
செக்கல் | செவ்வானம் ; மாலைநேரம் . |
செக்கவுரி | ஒருசெடிவகை . |
செக்காட்டி | எண்ணெயின்பொருட்டுச் செக்கு ஆட்டுபவன் ; வாணியன் . |
செக்காடுதல் | செக்கில் அரைபடுதல் ; எண்ணெய்யூற்றுதல் ; காற்றிலும் மழையிலும் செடிகள் வேர்பறிந்து நிற்றல . |
செக்கான் | செக்காட்டும் வாணியன் . |
செக்கில்வைத்தாட்டுதல் | மிகத் துன்புறுத்துதல் ; செக்கிலே வைத்துத் திரித்தல் . |
செக்கிலிட்டுத்திரித்தல் | மிகத் துன்புறுத்துதல் ; செக்கிலே வைத்துத் திரித்தல் . |
செக்கு | எண்ணெய் ஆட்டும் எந்திரம் ; சதயநாள் ; உண்டியல் . |
செக்குமேடு | எண்ணெய் ஆடும் செக்குள்ள மேட்டிடம் . |
செக்குரல் | செக்கின் அடிப்பகுதி . |
செக்குலக்கை | செக்குரலில் எள் முதலியவற்றை ஆட்டும் பருத்த மரத்துண்டு ; மிக்க வலிமையுள்ளவன் . |
செகச்சாலம் | மாயவித்தை ; பேரொளி , செகசோதி . |
செகதம் | அழித்தல் ; கெடுத்தல் . |
செகநாதன் | உலகிற்கு இறைவனாகிய கடவுள் . |
செகம் | உலகம் . |
செகன் | உலகம் . |
செகரிகம் | நாயுருவிச்செடி . |
செகன்மோகினி | உலகனைத்தையும் மயக்கும் பேரழகி . |
செகில் | தோளின் மேற்புறம் ; சிவப்பு . |
செகிள் | கனித்தோல் ; கேழ்வரகின் கப்பி ; மீன்செதிள் . |
செகுத்தல் | வெல்லுதல் ; கொல்லுதல் . |
செங்கட்டி | காவிக்கல் ; சாதிலிங்கம் ; செங்கல்லின் துண்டு . |
செங்கடம்பு | ஒரு கடப்பமரவகை . |
செங்கண் | சிவந்த கண் ; ஒருகடல்மீன்வகை . |
செங்கண்ணன் | சிவந்த கண்களையுடைய ஒர் எலிவகை . |
செங்கண்ணி | சிவந்த கண்களையுடைய ஒருமீன்வகை ; ஒருசெந்நெல்வகை . |
செங்ண்மா | சிவந்த கண்ணுடைய கரடி ; ஒருநகரம் . |
செங்கண்மாரி | காமாலை . |
செங்கண்மால் | சிவந்த கண்ணுடைய திருமால் . |
செங்கணான் | திருமால் ; ஒரு சோழ அரசன் . |
செங்கதிர் | சிவந்த கதிர்களையுடைய சூரியன் . |
செங்ககிர்நாள் | சூரியனை அதிதேவதையாகக் கொண்ட உத்தரநாள் . |
செங்கதிரோன் | சிவந்த கதிர்களையுடைய சூரியன் . |
செங்கமலம் | செந்தாமரை . |
செங்கமலவல்லி | செந்தாமரை மலரில் வாழும் கொடியாகிய திருமகள் . |
செங்கமலை | செந்தாமரை மலரில் வாழும் கொடியாகிய திருமகள் . |
செங்கயல் | ஒரு மீன்வகை . |
செங்கரடு | செம்மண்குன்று . |
செங்கரப்பான் | எயிற்றுப்புண் . |
செங்கருங்காலி | ஒரு மரவகை . |
செங்கரும்பு | செந்நிறமுள்ள கரும்புவகை . |
செங்கல் | சுட்ட மண்கல் ; காவிக்கல் ; மாணிக்கம் . |
செங்கல்வராயன் | செங்கல்வகிரி என்னும் திருத்தணிகைமலைத் தலைவனான முருகக் கடவுள் . |
செங்கல்வரை | திருத்தணிகைமலை . |
செங்கலங்கல் | செந்நிறமான கலங்கல் புது வெள்ளநீர் . |
செங்கலம் | செந்தாமரை . |
செங்கழுநீர் | கொடிவகை ; செங்குவளை ; செவ்வாம்பல் . |
செங்களம் | இரத்தத்தால் சிவந்த இடம் ; போர்க்களம் . |
செங்களி | செம்பஞ்சுக்குழம்பு ; பாக்கு ஊறவைக்குஞ் சாயக்குழம்பு . |
செங்கற்கட்டளை | செங்கல் அறுத்தற்குரிய அச்சு . |
செங்கற்றலை | ஒரு மீன்வகை . |
செங்கனல் | கொழுந்துவிட்டெரியும் தீ ; கனிந்துகொண்டிருக்கும் அழல் . |
செங்காகம் | செம்போத்துப் பறவை . |
செங்காடு | திருச்செங்காட்டங்குடி என்னும் ஒரு சிவதலம் ; சிவந்த காட்டுநிலம் . |
செங்காந்தள் | செந்நிறமுள்ள படர்கொடிவகை . |
செங்காய் | பழுக்கும் பருவத்துள்ள காய் . |
செங்காய்ப்புண் | பழுக்காத புண் . |
செங்கார் | ஒரு கார்நெல்வகை . |
செங்காரணி | கருஞ்சிவலையான பசு முதலிய விலங்கு . |
செங்காரி | கருஞ்சிவலையான பசு முதலிய விலங்கு . |
செங்காரித்தல் | கோபம் , வெயில் , கடுமை இவற்றால் முகஞ் சிவந்துகாட்டுதல் ; மழையின்றிப் பயிர்கள் கதிர்வாங்காது செந்நிறமாதல் . |
செங்காலி | செங்கருங்காலிமரம் . |
செங்காவி | செங்கழுநீர் ; குங்குமக்காவி . |
செங்கானாரை | சிவந்த காலையுடைய நாரை வகை . |
செங்கிடை | ஒரு முட்செடிவகை . |
![]() |
![]() |