சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சே | ஓர் உயிர்மெய்யெழுத்து (ச் + ஏ) ; காளை ; இடபராசி ; சிவப்பு ; சேமரக்கோட்டை ; அழிஞ்சில்மரம் ; வெருட்டுங்குறி ; வெறுப்புக்குறி . |
சேக்கரித்தல் | கொக்கரித்தல் . |
சேக்காளி | தோழமையுள்ளவன்(ள்) . |
சேக்கிழார் | தொண்டைநாட்டு வேளாளரின் குடிப்பெயருள் ஒன்று ; பெரியபுராணம் இயற்றிய ஆசிரியர் . |
சேக்கு | முலைப்பால் ; கன்னக்குடுமி ; துருப்புச்சீட்டு . |
சேக்குப்புள்ளி | உறவினர் அற்றுத் தனித்தவன் . |
சேக்கை | கட்டில் முதலிய மக்கட்படுக்கை ; விலங்கின் படுக்கை ; தங்குமிடம் ; பறவைக்கூடு ; வலை ; முலை ; உடற்றழும்பு ; கடகராசி ; நண்டு ; சிவப்பு ; செம்பசளைக்கீரை . |
சேக்கைப்பள்ளி | படுக்கை . |
சேக்கோள் | பகைவரது ஆநிரை கவர்தல் . |
சேகண்டி | காவலாளர் உறைவிடம் ; கோல்கொண்டு அடிக்கும் வட்டமணிவகை . |
சேகம் | மரவயிரம் . |
சேகரக்காரன் | பண்டங்களைச் சேகரிப்பவன் . |
சேகரஞ்செய்தல் | சித்தஞ்செய்தல் . |
சேகரத்தார் | கூட்டத்தார் . |
சேகரம் | சம்பாத்தியம் ; தயாரிப்பு ; கூட்டம் ; பிரதேசம் ; இனவழி ; மணிமுடி ; தலை ; தலையில் அணிவது ; அழகு ; மாமரம் . |
சேகரன் | சிறந்தோன் . |
சேகரி | நாயுருவிச்செடி . |
சேகரித்தல் | தயார்செய்தல் ; சம்பாதித்தல் ; ஒன்றுசேர்த்தல் ; சிறந்திருத்தல் . |
சேகன் | சேவகன் ; வேலையில் ஆற்றலுடையவன் . |
சேகில் | சிவந்த எருது . |
சேகிலி | வாழைமரம் . |
சேகு | காண்க : சேகம் ; சிவப்பு ; திண்மை ; குற்றம் ; ஐயம் ; தழும்பு . |
சேகை | சிவப்பு . |
சேங்கன்று | ஆண்கன்று . |
சேங்கோட்டை | சேமரக்கொட்டை ; சேமரம் . |
சேங்கோட்டைமரம் | ஒரு மரவகை . |
சேச்சே | அருவருப்புக் குறிப்பு ; அமர்த்துங்குறிப்பு . |
சேசே | வெறுப்புக் குறிப்பு ; மாடு முதலியன ஓட்டுதற்குறிப்பு ; கூட்டத்தின் ஒலிக்குறிப்பு . |
சேட்சி | தொலைவு . |
சேட்டம் | அழகு ; ஆனிமாதம் ; செழிப்பு ; மேன்மை ; வலிமை . |
சேட்டன் | தமையன் ; மூத்தவன் ; உருத்திரர்களுள் ஒருவன் ; பெரியோன் . |
சேட்டனம் | முயற்சி . |
சேட்டாதேவி | மூதேவி . |
சேட்டி | அக்காள் ; தொழிற்படுத்துவோள் . |
சேட்டித்தல் | தொழிற்படுதல் ; தொழிற்படுத்துதல் . |
சேட்டிதன் | தொழிற்படுத்துவோன் . |
சேட்டுக்குழி | சேற்றுக்குழி . |
சேட்டுமம் | கபம் . |
சேட்டை | குறும்புச்செய்கை ; குதிப்பு முதலிய செயல்கள் ; மூத்தவள் ; மூதேவி ; பெருவிரல் ; கேட்டைநாள் ; விசாகநாள் ; முறம் ; உறுப்புப் புடைபெயர்க்கை ; செய்கை . |
சேட்டைக்காரன் | குறும்புசெய்பவன் ; தந்திரவேலை செய்பவன் ; காமக் குறிப்பு காட்டுவோன் . |
சேட்படுதல் | எதிர்ப்படுதல் ; தொலைவாதல் ; நெடுங்காலத்ததாதல் . |
சேட்படை | தொலைவிலிருத்தல் ; தலைவன் தலைவியோடு சேராது தோழி தடுத்தல் . |
சேட்புலம் | தொலைவிடம் . |
சேடக்கிரியை | ஈமக்கடன் , இறுதிக்கடன் . |
சேடக்குடும்பி | கோயில் அருச்சகன் . |
சேடக்கோல் | தூக்குக்கோல் . |
சேடகப்பிண்டி | கேடகம் பிடிக்கை . |
சேடகம் | கேடகம் . |
சேடகவட்டம் | கேடகம் . |
சேடசேடிபாவம் | ஆண்டான் அடிமைத்திறம் . |
சேடம் | மிச்சப்பொருள் ; கழிந்தமீதி ; எச்சில் ; இறைவனுக்குப் படைக்கும் பொருள் ; அடிமை ; சிலேட்டுமம் . |
சேடல் | காண்க : பவழமல்லிகை ; உச்சிச்செலுந்தில்மரம் . |
சேடவட்டில் | உண்கலம் . |
சேடன் | ஆதிசேடன் ; நாகலோகவாசி ; நெசவுச்சாதியார் ; அடிமைக்காரன் ; கட்டிளமையோன் ; பெரியோன் ; தோழன் ; காதலுக்குத் துணைபுரிபவன் ; கடவுள் . |
சேடி | தோழி ; ஏவல்செய்வோள் ; இறையவள் ; தெருச் சிறகு ; வித்தியாதர உலகம் . |
சேடிகை | பணிப்பெண் ; கன்னியாராசி . |
சேடித்தல் | எஞ்சுதல் ; குறைத்தல் . |
சேடியம் | ஊழியம் . |
சேடு | அழகு ; பெருமை ; திரட்சி ; நன்மை ; இளமை . |
சேடை | மணமக்கள்மீது அரிசியிடும் மணச்சடங்கு ; சேடையரிசி ; தொளி உழவுக்காக நீர் கட்டப்பட்ட வயல் ; சேறு . |
சேடைபாய்ச்சுதல் | வயலில் நீர் பாய்ச்சுதல் . |
சேடைபாய்தல் | வயலில் தானே நீர்பாய்கை . |
சேடையரிசி | மணமக்களை வாழ்த்தி இடும் அரிசி . |
சேடைவைத்தல் | நிலத்தைச் சேறாக்குதல் . |
சேண் | அகலம் ; நீளம் ; சேய்மை ; உயரம் ; மலையினுச்சி ; வானம் ; தேவருலகம் ; நெடுங்காலம் . |
சேண்டிரவர் | சேணியர் . |
சேண | உயர . |
சேணம் | மெத்தை ; கலணை . |
சேணவி | அறிவு . |
சேணாடர் | வானோர் . |
சேணாடு | துறக்கம் . |
சேணி | ஏணி ; முறை ; குழு ; செடி . |
சேணியர் | வித்தியாதரர் ; ஆடை நெய்வோர் . |
சேணியன் | இந்திரன் ; ஆடை நெய்வோன் . |
சேணை | காண்க : சேணவி . |
![]() |
![]() |