சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சை | ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஐ) ; இகழ்ச்சிக் குறிப்பு . |
சைக்கினை | காண்க : சைகை . |
சைகதம் | மணல் ; மணற்கரை . |
சைகதவுண்டை | மணல்மலை . |
சைகை | சமிக்கை ; சாடை . |
சைங்கிகேயன் | இராகு . |
சைசவம் | இளமை ; பதினாறு வயதிற்கு உட்பட்ட பருவம் . |
சைத்தான் | பிசாசு . |
சைத்தியம் | பௌத்தராலயம் ; குளி£ச்சி ; இறப்புக் கல்வெட்டு ; பலிபீடம் . |
சைத்தியன் | சுக்கிரன் . |
சைத்திரகம் | சித்திரை மாதம் ; ஓவிய வேலை ; வெற்றி . |
சைத்திரம் | சித்திரை மாதம் ; ஓவிய வேலை ; வெற்றி . |
சைத்திரரதம் | குபேரனின் நந்தவனம் . |
சைத்திராவலி | சித்திரை மாதத்து முழுநிலவு . |
சைத்திரி | சித்திரை மாதத்தில் நடைபெறும் வேள்வி . |
சைத்திரியஞானம் | கடவுள் உயிர்களைப்பற்றிய அறிவு . |
சைத்திரியம் | தெளிவு ; மனத்திட்பம் . |
சைத்திரோற்சவம் | சித்திரையில் நிகழும் கோயில் திருவிழா . |
சைதன்னியதரிசனம் | தானுந் தலைவனும் ஒன்றெனக் காண்டல் . |
சைதனம் | சீவான்மா . |
சைதனியம் | அறிவு ; சீவான்மா ; பரமான்மா . |
சைதனியவான் | அறிவுள்ளவன் . |
சைந்தவம் | இந்துப்பு ; குதிரை ; தலை ; சிந்துநதி ; சிந்துநேசம் . |
சைந்தவி | ஒரு பண்வகை . |
சைமானம் | அன்பளிப்பு . |
சையகம் | படுக்கை . |
சையத்திருத்தல் | நல்ல நிலையில் இருத்தல் . |
சையம் | கல் ; குடகுமலை ; மலை ; நியமம் . |
சையமினி | யமனது நகரம் . |
சையானம் | காண்க : சையகம் . |
சையெனல் | இகழ்ச்சிக்குறிப்பு . |
சையை | காண்க : சைகை . |
சையொத்திருத்தல் | இணக்கமாக இருத்தல் . |
சையோகசம்பந்தம் | இரண்டு பொருள்கள் கூடியிருத்தலாகிய தொடர்பு . |
சையோகம் | கலக்கை ; காண்க : யோகசம்பந்தம் . |
சையோகித்தல் | புணர்தல் ; கலத்தல் . |
சையோத்தி | இணக்கம் . |
சையோத்தியம் | இணக்கம் . |
சைரிகம் | கலப்பை . |
சைரிகன் | உழவன் ; ஏர்மாடு . |
சைரிபம் | எருமை . |
சைலகம் | மலையிருவேலிப்புல் ; சாம்பிராணி . |
சைலதரன் | மலையைத் தாங்கியவனான கண்ணபிரான் . |
சைலபதி | மலைகளுக்குத் தலைவன் எனப்படும் இமயமலை . |
சைலபித்தி | கல்லுளி |
சைலம் | மலை ; சேலை . |
சைலாந்திரம் | மலைக்குகை . |
சைவசித்தாந்தம் | சைவசமயத் தெளிவுண்மை . |
சைவம் | சிவசமயம் ; ஆகமம் ; சிவபுராணம் ; இளமை ; புலால் தின்னாமலிருக்கை . |
சைவர் | சிவசமயத்தார் ; ஊன் உண்ணாதார் . |
சைவரல் | இகழுதல் . |
சைவலம் | ஒரு பாசிவகை . |
சைவவாதி | சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன் . |
சைவன் | சிவனை வழிபடுவோன் ; சிவன் ; புலால் உண்ணாதவன் . |
சைனம் | சமணமதம் . |
சைனன் | அருகன் ; புத்தன் ; அருக சமயத்தவன் . |
சைனியம் | சேனை . |
![]() |