சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சோ | ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஒ) ; உமை ; அரண் ; வாணாசுரண் நகர் ; வியப்புப் பொருளைத் தரும் ஓர் இடைச்சொல் . |
சோகநீக்கி | மாதவிக்கொடி . |
சோகம் | துன்பம் ; சோர்வு ; காமனது ஐந்தம்புகளால் ஏற்படும் துன்பநிலையுள் ஒன்றான உணவில் வெறுப்புண்டாகச் செய்யும் மிகு துன்பம் ; சோம்பல் ; திரள் ; ஒட்டகம் ; துடை ; கடவுளும் ஆன்மாவும் ஒன்றெனப் பாவிக்கை ; அசோகமரம் ; கூம்புகை ; கடுகுரோகிணிப்பூண்டு ; உருண்டை . |
சோகம்பாவனை | ஆன்மாவும் கடவுளும் ஒன்றெனப் பாவித்தல் . |
சோகரிகன் | வேட்டைக்காரன் . |
சோகாத்தல் | துன்பமடைதல் ; வருந்துதல் . |
சோகாப்பு | துன்பம் . |
சோகாரி | காண்க : கடம்பு . |
சோகி | பலகறை ; பாம்புப்பிடாரன் . |
சோகித்தல் | துன்பமடைதல் ; மயங்குதல் . |
சோகு | பேய் . |
சோகை | இரத்தக் குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை . |
சோங்கம் | அகில்மரம் ; காண்க : கிச்சிலிக்கிழங்கு . |
சோங்கு | மறதி ; துப்பாக்கிக்கட்டை ; மரக்கலம் ; கானாறு சூழந்து விளங்கும் மலைச்சோலை ; நாரை ; கோங்கிலவுமரம் . |
சோங்குதல் | சரிவாதல் . |
சோச்சி | சோறு . |
சோச்சிபாச்சி | சோறும் பாலும் . |
சோச்சியகன் | கீழ்மகன் . |
சோசம் | தென்னை . |
சோசனம் | வெள்ளை வெங்காயம் . |
சோசித்தல் | வற்றுதல் ; துன்பப்படுதல் ; சோர்வடைதல் . |
சோசியம் | காண்க : சோதிடம் . |
சோசியன் | காண்க : சோதிடன் . |
சோட்டா | சிறுகழி ; இலேசான ; சிறிய ; தடிக்கம்பு . |
சோட்டை | பேராவல் ; அன்பு . |
சோட்டைப்பண்டம் | விருப்பவுணவு . |
சோடசம் | பதினாறு . |
சோடசோபசாரம் | பதினாறுவகைப் போற்றுகை ; அவை : தாம்பூலமளித்தல் , அமுதம் ஏந்தல் , வாய் கொப்புளிக்க நீர் தருதல் , ஆடை சாத்தல் , கருப்பூர தீபம் ஏந்துதல் ; கால் கழுவ நீர்தரல் , இருக்கை யளித்தல் , சந்தனம் பூசல் ; நறும்புகை காட்டல் ; நீராட்டுதல் , மஞ்சளரிசி தூவுதல் , மந்திரமலரால் வழிபடல் , பூச்சாத்துதல் , முப்புரிநூல் தரல் , விளக்கேற்றல் . |
சோடணம் | உலர்த்துதல் ; உலர்தல் . |
சோடல் | புடைவை . |
சோடன் | சோம்பன் ; மூடன் ; கீழ்மகன் . |
சோடனை | அலங்கரிக்கை ; அழகு ; ஏறிட்டுக் கற்பிக்கை . |
சோடி | இரட்டை ; ஒப்பு ; பட்டாவுரிமையை நீக்குகை ; வரிவகை ; உசிலம்பொடி . |
சோடிசேர்த்தல் | பொலிகாளையோடு பசுவைப் புணரவிடுதல் ; மாட்டிற்கு இணைசேர்த்தல் . |
சோடித்தல் | அலங்கரித்தல் ; கற்பித்தல் ; புனைந்து பேசுதல் . |
சோடிப்பு | அலங்கரிக்கை ; கற்பனை . |
சோடு | காலுறை ; கவசம் ; இரட்டை ; பறவை முதலியவற்றின் ஆண்பெண் இரட்டைகளுள் ஒன்று ; மிதியடிவகை ; ஒரிணை வரிசை ; ஒப்பு ; ஓர் எடை ; ஓரளவு ; சுவடு . |
சோடுகட்டுதல் | இணைசேர்த்தல் ; இரட்டையாக்குதல் . |
சோடை | வறட்சி ; காய்ந்துபோன மரம் ; காரியக்கேடு ; ஒரு நோய்வகை ; சோர்வு ; அறிவிலி ; விருப்பம் ; மகிழ்ச்சி ; தொழில் ; கோடைகாலத்தில் வயல்வழிப் பாதையில் வண்டி சென்ற தடம் ; சுவடு . |
சோடையன் | வலுவற்றவன் . |
சோணகிரி | திருவண்ணாமலை . |
சோணங்கி | மெலிந்தவர் ; ஒரு நாய்வகை . |
சோணசைலம் | காண்க : சோணகிரி . |
சோணம் | சிவப்பு ; ஒர் ஆறு ; பொன் ; இரத்தம் ; கடல் ; செங்கரும்பு ; செந்தூரம் ; தீ . |
சோணாகம் | பெருவாகைமரம் . |
சோணாடு | சோழநாடு . |
சோணி | பலகறை ; இரத்தம் . |
சோணிதக்கட்டு | சூதகக்கட்டு . |
சோணிதம் | இரத்தம் ; சிவப்பு ; காண்க : சுரோணிதம் ; மஞ்சள் ; வாதநோய்வகை . |
சோணேசன் | திருவண்ணாமலையிற் கோயில் கொண்ட சிவபெருமான் . |
சோணை | காதின் அடித்தண்டு ; புகையிலை முதலியவற்றின் காம்பினடி ; சோணையாறு ; திருவண்ணாமலை ; திருவோணநாள் ; மண் வெட்டியில் காம்பு செருகும் அடிப்பகுதி ; கைப்பிடிச் சுவர் . |
சோணைக்காது | அடிபெருத்த காது . |
சோத்தம் | இழிந்தார் செய்யும் வணக்கம் . |
சோத்தாள் | வேலை செய்யாத சோம்பேறி . |
சோத்தி | புலன்கள் செயலற்று உறங்கும் நிலை ; நடுஇரவு . |
சோத்தியம் | வியப்பு ; வியக்கத்தக்கது ; ஆராயத்தக்கது ; குறறச்சாட்டு ; தவறு ; கழிக்கப்படுந்தொகை ; வினா ; நடுஇரவு . |
சோத்திரம் | காது ; கேள்வி . |
சோத்திரியம் | வேதம்வல்ல பார்ப்பனர் முதலியோர்க்கு ஆதியில் விடப்பட்ட இறையிலிநிலம் ; அரசாங்க ஊழியம் செய்தவர்க்கு விடப்பட்ட இறையிலி நிலம் . |
சோத்திரியர் | வேதாத்தியயனம் செய்த பார்ப்பனர் . |
சோத்தும் | காண்க : சோத்தம் . |
சோதகம் | தூய்மை செய்தல் ; ஆய்வு ; கழிக்கும் தொகை ; தலைப்பெயல் மழை ; மழைமுடிவில் விழுந்தூறல் . |
சோதகன் | கல்விமான் . |
சோதம் | தூய நீர் . |
சோதரன் | உடன்பிறந்தான் . |
சோதரி | சோதித்தல் ; உலோகங்களின் தரத்தை ஆய்தல் ; உலோகங்களைப் புடமிடுகை ; நிமித்தம் . |
சோதரை | சோதித்தல் ; உலோகங்களின் தரத்தை ஆய்தல் ; உலோகங்களைப் புடமிடுகை ; நிமித்தம் . |
சோதனி | துடைப்பம் ; செத்தை . |
சோதனை | ஆராய்ச்சி ; ஆராய்வு , பரீட்சை ; தெய்வசோதனை ; உலோகங்களின் தரத்தைச் சோதிக்கை ; குறிப்பு ; முகத்தலளவு ; தீமைசெய்யத் தூண்டுகை ; பேதிமருந்து . |
சோதி | கடவுள் ; சூரியன் ; ஒளி ; அருகன் ; சிவன் ; திருமால் ; கதிர் ; தீ ; நட்சத்திரம் ; விளக்கு ; கருப்பூரதீபம் ; சாதிலிங்கம் ; ஞானம் ; பூநாகம் ; சுவாதிநாள் ; சுவர் முதலியவற்றில் காணும் வெடிப்பு . |
சோதிக்குண்மணி | முத்து ; வெள்ளொளியால் சூழ்ந்த மணி . |
சோதிடநூல் | வானவியல் ; கோள்களின் பலன்களை அறிவிக்கும் நூல் ; நிமித்தம் . |
சோதிடம் | வானவியல் ; கோள்களின் பலன்களை அறிவிக்கும் நூல் ; நிமித்தம் . |
சோதிடர் | சோதிடம் கூறுவோர் ; சந்திரன் , சூரியன் , கோள் , மீன் முதலிய வானமண்டலங்கள் . |
சோதிடவர் | சோதிடம் வல்லவர் . |
சோதிடன் | சோதிடம் கூறுவோன் . |
![]() |
![]() |