சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சௌ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ச்+ஔ) ; சிறுமி ; சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்னும் சொல்லின் முதலெழுத்துக் குறிப்பு . |
| சௌக்கம் | பண்டங்களின் மலிவு . |
| சௌக்கியம் | ஆரோக்கியம் ; காண்க : சௌகரியம் ; மலங்கழிக்கை . |
| சௌகதன் | சூனியவாதி ; புத்தன் . |
| சௌகந்தம் | நறுமணம் . |
| சௌகந்தி | ஒரு மாணிக்கவகை ; கந்தக பாடாணம் . |
| சௌகந்திகம் | வெள்ளாம்பல் ; காண்க : சௌகந்தி ; நீலோற்பலம் ; செங்குவளை . |
| சௌகந்திகை | நறுமணமுடையது ; ஒருவகைத் தாமரை . |
| சௌகம் | நான்கு . |
| சௌகரியம் | ஏந்து ; வசதி ; மலிவு . |
| சௌசம் | தூய்மை ; கால்கழுவுதல் . |
| சௌசன்னியம் | அன்பு , இனிய குணம் , ஒற்றுமை . |
| சௌசிகன் | தையற்காரன் . |
| சௌசேயன் | வண்ணான் . |
| சௌடால் | காண்க : சவடால் . |
| சௌடு | வண்டல் . |
| சௌண்டி | காண்க : திப்பிலி . |
| சௌண்டிகன் | கள் விற்போன் . |
| சௌத்தி | சக்களத்தி . |
| சௌத்திராந்திகம் | புத்தசமய வகையுள் ஒன்று . |
| சௌத்திராமணி | ஒரு வேள்விவகை . |
| சௌதம் | அரண்மனை ; சாலை ; வெள்ளி ; மலிவு . |
| சௌதாயம் | மகளுக்குக் கொடுக்கும் சீர்வரிசை ; நன்கொடை . |
| சௌந்தரம் | அழகு . |
| சௌந்தரன் | அழகன் ; சிவன் . |
| சௌந்தரி | அழகி ; பார்வதி . |
| சௌந்தரியம் | அழகு ; சாந்தம் . |
| சௌந்திரியவதி | அழகுள்ளவள் . |
| சௌந்தரீகம் | பேரழகு . |
| சௌந்தரேசன் | மதுரைச் சொக்கநாதர் . |
| சௌப்திகம் | துயில்வோரை எதிர்த்துக் கொல்லுகை . |
| சௌபஞ்சனம் | புனல்முருங்கைமரம் . |
| சௌபன்னம் | சுக்கு ; மரகதம் . |
| சௌபாக்கியம் | மிகுபேறு ; யோகத்துள் ஒன்று ; உபநிடதத்துள் ஒன்று . |
| சௌபாக்கியவதி | சிறு பெண்கள் ; சுமங்கலிகளின் பெயர்க்கு முன் வழங்கப்படும் ஒரு மங்கலச்சொல் . |
| சௌபானம் | படிக்கட்டு . |
| சௌமன் | சந்திரன் மகனான புதன் . |
| சௌமாரம் | இளமை . |
| சௌமிய | அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்து மூன்றாம் ஆண்டு . |
| சௌமியத்துவம் | அழகு ; சாந்தம் ; மனவொடுக்கம் . |
| சௌமியதாது | கோழை . |
| சௌமியம் | அழகு ; சாந்தம் . |
| சௌமியவாரம் | புதன்கிழமை . |
| சௌமியன் | சாந்தமுள்ளவன் ; புதன் ; சிவன் ; அருகன் ; சமணத்துறவி . |
| சௌமேசகம் | பொன் . |
| சௌமேருகம் | பொன் . |
| சௌரகன் | நாவிதன் . |
| சௌரசனம் | சூரசேனி என்னும் பாகதமொழி . |
| சௌரப்பியன் | குபேரன் . |
| சௌரம் | சூரிய சம்பந்தம் ; சூரியனை வழிபடுஞ் சமயம் ; ஓர் உபபுராணம் ; மயிர்மழிக்கை . |
| சௌரமாதம் | சூரிய கதியினால் ஏற்படும் மாதம் . |
| சௌரமானம் | சூரியகதியைக்கொண்டு காலம் கணிக்கும் முறை . |
| சௌரன் | கள்ளன் ; சனி ; சூரியன் ; சோமன் . |
| சௌராட்டிரம் | ஒரு நாடு ; ஒரு பண்வகை . |
| சௌரி | திருமால் ; சனி ; யமன் ; கன்னன் ; யமுனையாறு ; கவரிமான் மயிரால் அமைந்த அரச சின்னம் . |
| சௌரியம் | களவு ; வீரம் ; ஏந்து ; வசதி . |
| சௌரியலட்சுமி | வெற்றித் திருமகள் . |
| சௌரியன் | வீரன் . |
| சௌரியவான் | வீரன் . |
| சௌரு | கொச்சை நாற்றத்தோடுகூடிய சுவை ; உவர்ப்பு . |
| சௌலப்பியம் | எளிவந்த தன்மை . |
| சௌவீரகம் | இலந்தைமரம் . |
| சௌவீரம் | ஒரு மருந்துவகை ; இலந்தைமரம் . |
| சௌளம் | மயிர்களைதல் ; குடுமிவைத்தல் . |
| சௌளாம்பரம் | பட்டாடை . |
| சௌனிகன் | ஊன் விற்போன் . |
|