சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஞஃகான் | 'ஞ' என்னும் எழுத்து . |
ஞஞ்சை | மயக்கம் . |
ஞஞ்ஞையெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
ஞண்டு | நண்டு ; கற்கடகராசி . |
ஞத்துவம் | அறியுந்தன்மை . |
ஞமகண்டன் | யமகண்டன் . |
ஞமர்தல் | பரத்தல் ; தங்குதல் ; முற்றுதல் ; ஒடிதல் ; நெரிதல் . |
ஞமலி | நாய் ; மயில் ; கள் . |
ஞமன் | யமன் ; துலாக்கோலின் சமன்வாய் . |
ஞயம் | நயம் ; இனிமை . |
ஞரல்தல் | ஒலித்தல் ; முழங்குதல் . |
ஞரலுதல் | ஒலித்தல் ; முழங்குதல் . |
ஞரிவாளை | ஒரு பூடுவகை ; ஒரு மரவகை . |
ஞலவல் | கொசுவகை ; மின்மினிப்பூச்சி . |
ஞவல் | கொசுவகை ; மின்மினிப்பூச்சி . |
ஞறா | மயிலின் குரல் . |
![]() |