சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஞா | ஒர் உயிர்மெய்யெழுத்து (ஞ்+ஆ) ; கட்டு ; பொருந்து . |
ஞாங்கர் | இடம் ; பக்கம் ; மேல் ; அங்கே ; முன் ; இனி ; வேற்படை . |
ஞாஞ்சில் | கலப்பை ; மதிலுறுப்பு . |
ஞாட்பு | போர் ; போர்க்களம் ; படை ; கூட்டம் ; கனம் ; வலிமை . |
ஞாடு | நாட்டுப்பகுதி . |
ஞாண் | கயிறு ; வில்லின் நாண் . |
ஞாத்தல் | கட்டுதல் ; பொருந்துதல் . |
ஞாதம் | அறியப்பட்டது ; அறிபவன் . |
ஞாதவ்வியம் | அறியவேண்டியது . |
ஞாதா | ஞானவான் ; அறிகிறவன் . |
ஞாதி | பங்காளி , தாயாதி ; சுற்றம் ; தொலையுறவினர் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் . |
ஞாதிரு | அறிபவன் ; ஆன்மா . |
ஞாதுரு | அறிபவன் ; ஆன்மா . |
ஞாதுருத்துவம் | அறிகிறவனான தன்மை . |
ஞாதேயம் | உறவு ; உறவுத்தன்மை . |
ஞாபகக்கருவி | அறிதற்கு உதவுங் கருவி . |
ஞாபகக்குறி | நினைவூட்டுவதற்கு அடையாளமாக வைத்த பொருள் . |
ஞாபகக்குறிப்பு | நினைவூட்டுவதற்குரிய சீட்டு . |
ஞாபகக்குறை | நினைவின்மை . |
ஞாபகங்கூறல் | குறித்த பொருளை நேரே கூறாது வேறு வகையில் நினைவுபடுத்தும் ஒருவகைத் தந்திரவுத்தி . |
ஞாபகசக்தி | நினைவாற்றல் . |
ஞாபகப்படுத்துதல் | நினைப்பூட்டுதல் ; நினைவிற் கொள்ளுதல் . |
ஞாபகம் | நினைவு ; அறிவு ; குறிப்பிப்பது ; நற்பொருள் ; மேற்கோள் இலக்கியம் ; குறிப்பு . |
ஞாபகம்பண்ணுதல் | காண்க : ஞாபகப்படுத்துதல் ; மனப்பாடம் பண்ணுதல் . |
ஞாபகமறதி | நினைவின்மை . |
ஞாபகவேது | அறிவிற்குக் காரணமாயது . |
ஞாபித்தல் | நினைப்பூட்டுதல் . |
ஞாய் | தாய் ; உன் தாய் . |
ஞாயம் | காண்க : நியாயம் . |
ஞாயில் | கோட்டையின் ஏவறை . |
ஞாயிறு | சூரியன் ; ஞாயிற்றுக்கிழமை ; சௌரமாதம் . |
ஞாயிறுதிரும்பி | காண்க : சூரியகாந்தி . |
ஞாயிறுபோது | உச்சிப்போது . |
ஞாயிறுவணங்கி | ஒரு செடிவகை . |
ஞாலம் | உலகம் , பூமி , நிலம் ; உயர்ந்தோர் ; மாயவித்தை . |
ஞாலமாது | ஊமத்தை ; நிலமகள் . |
ஞாலித்தட்டு | சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்தில் அணியும் அணிகலவகை . |
ஞாலுத்தட்டு | சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்தில் அணியும் அணிகலவகை . |
ஞாலுதட்டு | சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்தில் அணியும் அணிகலவகை . |
ஞாலுதல் | தொங்குதல் ; பொழுதுசாய்தல் . |
ஞாழ் | யாழ் . |
ஞாழல் | காண்க : புலிநகக்கொன்றை ; மயிற் கொன்றைமரம் ; பொன்னாவிரை ; குங்குமமரம் ; கோங்குமரம் ; மரவயிரம் ; ஆண்மரம் ; மல்லிகைவகை . |
ஞாழல்மாது | காண்க : ஊமத்தை . |
ஞாழி | வள்ளைக்கொடி . |
ஞாளம் | தண்டு . |
ஞாளி | நாய் ; கள் . |
ஞாளிதம் | காண்க : ஞாழி . |
ஞாளியூர்தி | நாயை ஊர்தியாக உடைய வைரவன் . |
ஞாற்சி | தொங்குகை . |
ஞாற்று | தொங்குகை . |
ஞாற்றுதல் | தொங்கவிடுதல் . |
ஞாறுதல் | மணம்வீசுதல் ; தோன்றுதல் . |
ஞான்றஞாயிறு | சூரியன் மறையும் நேரம் . |
ஞான்று | நாள் ; காலத்தில் ; ஓர் இடைச்சொல் . |
ஞான்றுகொள்ளுதல் | கழுத்திற் சுருக்கிட்டுச் சாதல் . |
ஞான்றை | காலம் . |
ஞானக்கண் | அறிவாகிய பார்வை . |
ஞானக்கந்தம் | காண்க : விஞ்ஞானம் . |
ஞானக்காட்சி | இறையறிவு ; காண்க : ஞானதிருட்டி . |
ஞானக்கூத்தன் | ஞானத்தில் கூத்தாடும் சிவன் . |
ஞானக்கை | பரஞானமாகிய முத்திசாதனம் . |
ஞானகிருதம் | தெரிந்து செய்த பாவம் . |
ஞானசத்தி | முத்தி எய்துமாறு செய்யும் சிவபிரானது சத்தி . |
ஞானசபை | ஞானம் விளங்கும் சிதம்பரத்தில் உள்ள சிற்சபை . |
ஞானசமாதி | துறவிகள் நிட்டையின்பொருட்டு நேராக நிமிர்ந்திருக்கும் நிலை . |
ஞானசரிதன் | ஞானநெறியில் ஒழுகுபவன் . |
ஞானசரீரம் | அறிவுமயமான உடம்பு . |
ஞானசாதகன் | மோட்சசாதன முறையில் ஞானநெறி அடையவேண்டி முயல்பவன் . |
ஞானசாதனம் | மோட்சசாதன முறையில் ஞானநெறி அடைதற்கு வேண்டும் பயிற்சி . |
ஞானசாதனை | மோட்சசாதன முறையில் ஞானநெறி அடைதற்கு வேண்டும் பயிற்சி . |
ஞானசித்தன் | அறிவு கைவரப்பெற்றவன் . |
ஞானசுகம் | இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் பேரின்ப மகிழ்ச்சி . |
ஞானசூனியன் | அறிவற்றவன் . |
ஞானத்தாளன் | காண்க : ஞானி . |
ஞானத்தில் ஞானம் | ஞானநிட்டை கூடுகை . |
![]() |
![]() |