தா முதல் - தாட்டி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தா ஒர் உயிர்மெய்யெழுத்து ( த் + ஆ) வலிமை ; வருத்தம் ; கேடு ; குற்றம் ; பகை ; பாய்கை ; குறை .
தா (வி) தா என்னும் ஏவல் ; ஒத்தவர் தமக்குள் ஒன்றை வேண்டிச் சொல்லும் சொல் .
தாஅம் பரக்கும் .
தாஅயது தாவியது ; கடந்தது .
தாஅவண்ணம் இடையிட்டு வரும் எதுகையுடைய சந்தம் .
தாஅனாட்டித் தனாஅது நிறுப்பு எழுவகை மதங்களுள் தானே ஒரு பொருளைப் புதிதாய் எடுத்துக்கூறி அதனை நிலைநிறுத்துகை .
தாக்கடைப்பன் மாட்டுநோய்வகை .
தாக்கணங்கு தீண்டி வருத்துந் தெய்வம் ; காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம் ; திருமகள் ; உமாதேவியாரின் பரிவாரப் பெண் பூதங்களுள் ஒருவகை .
தாக்கணித்தல் மெய்ப்பித்துக் காட்டல் .
தாக்கம் தாக்கு ; எதிர்தாக்குகை ; வேகம் ; கனத்திருக்கை ; மிக்கிருக்கை ; வீக்கம் ; முதற்கொண்டு .
தாக்கல் எதிர்த்தல் ; பாய்ந்து மோதுகை ; பதிகை ; தகவல் ; சுவாதீனப்படுத்துகை ; செய்தி ; சம்பந்தம் .
தாக்காட்டுதல் நாட்கடத்தி ஏமாற்றுதல் ; பராக்குக்காட்டல் ; உதவிசெய்தல் ; தந்திரமாய் வயப்படுத்தல் .
தாக்காயணி தக்கன் மகளாகிய உமாதேவி .
தாக்கீது ஆணை .
தாக்கு அடி ; போர் ; படை ; வேகம் ; பாதிக்கை ; சாதனை ; குறுந்தடி ; இடம் ; பெருக்கல் ; நெல்வயல் ; பற்று ; வளமை ; ஆணை ; நிலவறை ; மிகு சுமை ; எதிர்க்கை ; எதிரெழுகை .
தாக்குதல் எதிர்த்தல் ; மோதுதல் ; முட்டுதல் ; பாய்தல் ; தீண்டுதல் ; அடித்தல் ; வெட்டுதல் ; பற்றியிருத்தல் ; எண்கூட்டிப் பெருக்கல் ; குடித்தல் ; சரிக்கட்டுதல் ; உறைத்தல் ; கடுமையாதல் ; பழிவாங்குதல் ; தலையிட்டுக்கொள்ளுதல் ; பலித்தல் ; பெருகுதல் ; பாரமாதல் ; நெளித்துப்போதல் .
தாக்கோல் காண்க : தாட்கோல் .
தாகசாந்தி நீர்வேட்கையைப் போக்குதல் .
தாகசுரம் நீர்வேட்கையை உண்டுபண்ணும் ஒரு சுரநோய்வகை .
தாகம் நீர்வேட்கை ; ஆசை ; காமம் .
தாகமடக்கி புளியாரை என்னும் பூண்டுவகை .
தாகமெடுத்தல் நீரில் விருப்பங்கொள்ளுகை .
தாகீது காண்க : தாக்கீது .
தாகித்தல் நீர்வேட்கை உண்டாதல் .
தாங்கல் தாங்குகை ; உட்கிடைக் கிராமம் ; மனக்குறை ; துன்பம் ; சகிப்பு ; பூமி ; நீர்நிலை ; பாசனத்துக்குப் பயன்படும் இயற்கை ஏரி ; தயக்கம் ; தூக்குகை .
தாங்கள் மரியாதையுடன் கூடிய முன்னிலைப் பன்மைச் சொல் .
தாங்கி ஆதாரம் ; தாங்குபவன் ; ஒரு பொருளைத் தாங்கிநிற்கும் கருவி ; பூண் ; பணிகளின் கடைப்பூட்டு ; யானைக் கொம்பில் அணியும் கிம்புரி ; கப்பல் முதலியவற்றிலுள்ள நீர்நிலை ; காண்க : மலைதாங்கி .
தாங்கித்தடுக்கிடுதல் மிகுந்த உபசாரம் செய்தல் .
தாங்கிப்பேசுதல் பரிந்துபேசுதல் ; ஒருவர் சொன்னதை ஆதரித்துப் பேசுதல் .
தாங்கு தாங்கல் ; ஆதாரம் ; ஈட்டிக்காம்பு .
தாங்குகோல் தோணியை ஊன்றித் தள்ளும் கோல் ; உதவி .
தாங்குசுவர் முட்டுச்சுவர் .
தாங்குதல் சுமத்தல் ; புரத்தல் ; ஆதரித்தல் ; தடுத்தல் ; பொறுத்தல் ; தோணி தள்ளுதல் ; வருந்துதல் ; மனத்திற் கொள்ளுதல் ; அன்பால் நடத்தல் ; தாமதித்தல் ; நிறுத்துதல் ; குதிரை முதலியவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்துதல் ; நொண்டுதல் ; இளைப்பாற்றுதல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; அணிதல் ; சிறப்பித்தல் ; அழுத்துதல் ; பிடித்துக்கொள்ளுதல் .
தாங்குநன் காப்பாற்றுவோன் .
தாச்சா முந்திரிகை .
தாச்சி கருவுற்றிருப்பவள் ; தாய்ப்பால் கொடுப்பவள் ; விளையாட்டில் ஒரு கட்சியிலுள்ள தலைவன் ; விளையாட்டில் தொடவேண்டுமிடம் ; சோனைப்புல்வகை .
தாசத்துவம் அடிமைத்தன்மை .
தாசநம்பி பூணூல் அணியாத வைணவரின் பட்டப்பெயர் ; பூணூல் தரியாத வைணவன் .
தாசநெறி அடிமைநெறி ; சிவனை உருவத் திருமேனியாகக் கோயிலில் வைத்து வழிபடுகை .
தாசமார்க்கம் அடிமைநெறி ; சிவனை உருவத் திருமேனியாகக் கோயிலில் வைத்து வழிபடுகை .
தாசரதி தசரதன் மகனான இராமன் .
தாசரி தாதன் ; மலைப்பாம்பு ; பாம்புப் பிடாரன் .
தாசன் ஊழியக்காரன் ; அடிமை ; பக்தன் ; வைணவர் கூறும் வணக்கச்சொல் .
தாசனாப்பொடி பற்பொடி .
தாசி தோழி ; தொண்டுபுரிபவள் ; அடிமைப்பெண் ; விலைமகள் ; பரணிநாள் ; மருதோன்றிமரம் .
தாசியநாமம் சமய உண்மை தெரிவிக்கும் சடங்கில் ஞானாசாரியன் கொடுக்கும் அடிமைப்பெயர் .
தாசியம் அடிமைத்தன்மை .
தாசினாப்பொடி காண்க : தாசனாப்பொடி .
தாசு நாழிகைவட்டில் ; இரண்டரை நாழிகை கொண்ட ஒருமணி நேரம் ; சூதாடுகருவி .
தாசுவம் கொடை .
தாசேரகம் ஒட்டகம் .
தாசேரம் ஒட்டகம் .
தாசோகம் நான் அடியேன் ' என்று பொருள்படும் வணக்கச்சொல் ; வீரசைவர்களின் மாகேசுர பூசை .
தாட்கம் கொடிமுந்தரிகை .
தாட்கவசம் செருப்பு .
தாட்கூட்டு மகளிர் கையணிவகை .
தாட்கோரை கோரைப்புல்வகை .
தாட்கோல் தாழ்ப்பாள் ; திறவுகோல் .
தாட்சண்ணியம் காண்க : தாட்சிண்ணியம் .
தாட்சணம் காண்க : தாட்சிண்ணியம் .
தாட்சணியம் காண்க : தாட்சிண்ணியம் .
தாட்சணை காண்க : தாட்சிண்ணியம் .
தாட்சம் கொடிமுந்தரிகை ; பல்லாங்குழி விளையாட்டில் காய்கள் இல்லாதிருக்கும் குழி .
தாட்சன் கருடன் .
தாட்சாயணி தக்கன் மகளாகத் தோன்றிய உமாதேவி ; இருபத்தேழு நட்சத்திரப் பொது ; உரோகிணிநாள் .
தாட்சி தாமதம் ; இழிவு ; தாழ்ந்து பணிகை .
தாட்சிண்ணியம் இரக்கம் கண்ணோட்டம் ; ஒருதலைச் சார்பு ; மரியாதை .
தாட்சிணியம் இரக்கம் கண்ணோட்டம் ; ஒருதலைச் சார்பு ; மரியாதை .
தாட்சிணை இரக்கம் கண்ணோட்டம் ; ஒருதலைச் சார்பு ; மரியாதை .
தாட்டன் பெருமைக்காரன் ; தலைமை ஆண் குரங்கு ; போக்கிரி ; ஒருவனை இகழ்ச்சி தோன்றக் குறிக்கும் சொல் .
தாட்டாந்தம் எடுத்துக்காட்டு ; உபமேயம் .
தாட்டாந்திகம் எடுத்துக்காட்டு ; உபமேயம் .
தாட்டான் தலைவன் ; கணவன் .
தாட்டானை கிழக்குரங்கு .
தாட்டி திறமை ; தடவை ; துணிவு ; தடையின்மை ; பெருமிதம் ; கெட்டிக்காரி ; அகலம் ; ஆண்தன்மை வாய்ந்தவள் ; வைப்பாட்டி .