தூ முதல் - தூடியம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தூ ஓர் உயிர்மெய்யெழுத்து(த்+ஊ) ; தூயது ; தூய்மை ; வெண்மை ; பற்றுக்கோடு ; வலிமை ; பகை ; இறைச்சி ; பறவையின் இறகு ; இகழ்ச்சிக் குறிப்பு .
தூக்கணக்கயிறு ஆழமான நீருள் முக்குளிப்பவனை முக்குளிக்கும் காலத்துக் கட்டியிருக்கும் கயிறு .
தூக்கணங்குரீஇ தொங்குங் கூடு கட்டும் குருவிவகை .
தூக்கணங்குருவி தொங்குங் கூடு கட்டும் குருவிவகை .
தூக்கணம் தொங்கல் ; உறி ; காண்க : தூக்கணங்குருவி ; தூக்கணக்கயிறு .
தூக்கணாங்கயிறு எருதுக்கு இடும் மூக்குக்கயிறு .
தூக்கணாங்குருவி காண்க : தூக்கணங்குருவி .
தூக்கம் உறக்கம் ; அயர்வு ; சோம்பல் ; வாட்டம் ; முகச்சோர்வு ; காற்று முதலியவற்றின் தணிவு ; விலையிறக்கம் ; ஆபரணத்தொங்கல் ; காதணி ; அலங்காரத் தொங்கல் ; காண்க : தூக்கணங்குருவி ; கால நீட்டிக்கை ; நிறுப்பு ; விலையேற்றம் ; உயரம் .
தூக்கம்விடுதல் உறக்கம் ; நீங்குதல் ; அலங்காரத் தொங்கல் கட்டுதல் .
தூக்கல் விலை முதலியவற்றின் ஏற்றம் ; ஆராய்தல் ; உயரம் .
தூக்கிப்பிடித்தல் எடுத்து நிறுத்துதல் ; நுணுகிக் குற்றம் காணுதல் ; உலோபங் காட்டுதல் .
தூக்கிப்போடுதல் வெளியேயெறிதல் ; திடுக்கிடுமாறு செய்தல் ; சண்டைமூட்டுதல் ; மரணதண்டனையாகத் தூக்கிலிடுதல் .
தூக்கியடித்தல் உயர்த்தி மோதுதல் ; மற்போரில் எளிதாகத் தோற்கச்செய்தல் ; தான் மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச் செய்தல் ; மறுத்தல் .
தூக்கியெறிதல் ஏற்றுக்கொள்ள மறுத்தல் ; அக்கறைகாட்டாதிருத்தல் ; தான் மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச்செய்தல் .
தூக்கிரி ஊர்காவற்காரன் .
தூக்கிரிமேரை களத்தில் அளிக்கப்படும் ஊர் காவற் சுதந்தரம் .
தூக்கிரும்பு இரும்புத்துறட்டி .
தூக்கிலி ஆராயுந் திறனற்றவன் .
தூக்கிலிடுதல் மரணதண்டனையாகத் தூக்கிலே போடுதல் .
தூக்கிவிடுதல் மேலுயர்த்தல் ; தூண்டிவிடுதல் ; உதவிபுரிந்து காத்தல் ; காண்க : தூக்கிலிடுதல் .
தூக்கு தொங்கவிடும் பொருள் ; உறி ; உயர்ச்சி ; நிலைகோல் ; துலாராசி ; ஐம்பது பலமுள்ள நிறை ; பாட்டு ; கூத்து ; இசை ; பாக்களைத் துணித்து நிறுக்கும் செய்யுளுறுப்பு ; ஆராய்ச்சி ; காண்க : தூக்கணங்குருவி ; வாரடை ; கனம் .
தூக்கு (வி) ஆராய் ; உயர்த்து ; நிறுத்து .
தூக்குக்கோல் நிறுக்கும் தராசுவகை .
தூக்குணி தூக்குண்டவன் ; மானமற்றவன் ; தூக்குக்கு அஞ்சாதவன் ; சாப்பாட்டுக்குத் தொங்குகிறவன் .
தூக்குத்தூக்கி சுவடித் தூக்கைத் தூக்குபவன் .
தூக்குதல் உயர்த்துதல் ; நிறுத்தல் ; ஆராய்தல் ; ஒப்புநோக்குதல் ; மனத்திற்கொள்ளுதல் ; தொங்கவிடுதல் ; காண்க : தூக்கிலிடுதல் ; உதவிசெய்தல் ; நங்கூரம் வலித்தல் ; அசைத்தல் ; ஒற்றறுத்தல் .
தூக்குநூல் சுவரின் ஒழுங்கை அறியத் தொங்கவிடும் கயிறு .
தூக்குமரம் தூக்குத்தண்டனைக்கமைந்த மரம் .
தூக்குமாலை ஊர்தியில் தொங்கவிடும் மாலை .
தூக்குவிளக்கு தொங்குவிளக்கு .
தூகம் காண்க : புளிநரளை .
தூகுதல் குப்பை முதலியவற்றைக் கூட்டித் தள்ளுதல் , திருவலகிடுதல் .
தூகை பாளை .
தூங்கணம் தொங்கல் ; காண்க : தூக்கணங்குருவி .
தூங்கமளி ஊஞ்சற்கட்டில் .
தூங்கமுட்டு கோரைக்கிழங்குவகை .
தூங்கல் தொங்கல் ; தராசு ; தாழ்கை ; நெருங்குகை ; உறக்கக்கலக்கம் ; சோம்பல் ; சோர்தல் ; ஓரிசை ; வஞ்சிப்பா ஓசை ; கூத்து .
தூங்கல்வண்ணம் வஞ்சி ஓசை பயின்றுவரும் சந்தவகை .
தூங்கலன் சோம்பன் .
தூங்கலாளி மந்தன் , சுறுசுறுப்பில்லாதவன் ; சீமைவாகை ; காண்க : கரிசலாங்கண்ணி .
தூங்கலோசை வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை .
தூங்காமை செயலில் சோர்வில்லாமை .
தூங்காவிளக்கு எப்போதும் அணையாது எரியும் விளக்கு .
தூங்கானைமாடம் யானையின் முதுகுபோன்று அமைக்கப்பட்ட கோயில் ; தென்னார்க்காட்டு மாவட்டத்துள்ள பெண்ணாகடச் சிவன் கோயில் .
தூங்கிசை செய்யுளுக்குரிய நால்வகை ஒசையுள் ஒன்று .
தூங்கிசைச்செப்பல் இயற்சீர் வெண்டளையால் மாமுன் நிரையும் விளமுன் நேருமாக வரும் வெண்பாவுக்குரிய ஓசை .
தூங்கிசைத்துள்ளல் கலிப்பாவுக்குரிய ஓசை .
தூங்கிசையகவல் நிரையொன்றாசிரியத் தளையான் வரும் அகவற்பாவுக்குரிய ஓசை .
தூங்கிருள் செறிந்த இருள் , மிகுந்த இருள் .
தூங்குகட்டில் தொங்கியாடும் கட்டில் .
தூங்குதல் அசைதல் ; தொங்குதல் ; ஊசல் முதலியவற்றில் ஆடுதல் ; சோம்பலாயிருத்தல் ; வாடுதல் ; சாதல் ; இடையறாது விழுதல் ; ஒலித்தல் ; நிலையாகத் தங்குதல் ; மெத்தென நடத்தல் ; செறிதல் ; கூத்தாடுதல் ; துயிலுதல் ; தாமதித்தல் ; அழுந்துதல் ; மிகுதல் .
தூங்குதோல் பாம்பின் சட்டை .
தூங்குமஞ்சம் தொங்கி ஆடும் கட்டில் .
தூங்குமூஞ்சி மந்தன் ; சீமைவாகைமரம் ; காண்க : கரிசலாங்கண்ணி .
தூங்கெயில் சோழன் ஒருவனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆகாயக்கோட்டை .
தூசக்குடிஞை கூடாரம் .
தூசம் யானையின் கழுத்திலிடுங் கயிறு .
தூசர் வண்ணார் ; படைவீரர் .
தூசரம் சாம்பல் நிறம் .
தூசரன் எண்ணெய் வாணிகன் .
தூசறுத்தல் அடியோடு அழித்தல் .
தூசனம் நிந்தைச்சொல் .
தூசி குதிரை ; கொடிப்படை ; போர் ; உச்சி ; கூத்துத் தொழில்வகை ; மிகச் சிறிது ; புழுதி .
தூசிகம் காண்க : புளியாரை .
தூசிதாங்கி அழுக்குத் தாங்க உடையின் மேலேகட்டுந் துண்டுப் புடைவை ; மேல்மறைப்பு .
தூசிப்படை கொடிப்படை .
தூசியம் கூடாரம் .
தூசு ஆடை ; பஞ்சு ; முன்னணிப்படை ; சித்திரைநாள் ; யானைக் கழுத்திடுகயிறு ; புழுதி ; மிகச் சிறிது ; தூய்மை .
தூசுப்பு தண்ணீர்விட்டான்கொடி .
தூட்டி ஆடை .
தூட்டிகம் காண்க : தும்பை .
தூடணம் நிந்தை ; நிந்தைச்சொல் ; கண்டனம் .
தூடணை நிந்தை ; நிந்தைச்சொல் ; கண்டனம் .
தூடிதம் கெடுக்கப்பட்டது .
தூடியம் கூடாரம் .