சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தே | ஒர் உயிர்மெய்யெழுத்து (த்+ஏ) ; தெய்வம் ; கொள்ளுகை ; தலைவன் ; மாடு துரத்தும் ஒலிக்குறிப்பு . |
தேஎம் | தேயம் , நாடு ; இடம் . |
தேக்கம் | தேங்குகை ; நீரோட்டத்தின் தடை ; நிறைவு ; மனக்கலக்கம் ; ஏப்பம் ; தடை ; அச்சம் . |
தேக்கர் | மிகுதி . |
தேக்கிடுதல் | ஏப்பமிடுதல் ; நிரம்பி வழிதல் ; உணவின் மிகுதியால் அதனில் வெறுப்புநிலை அடைதல் . |
தேக்கு | தேக்குமரம் ; கமுகமரம் ; தெவிட்டு ; ஏப்பம் ; காண்க : சம்பகம் . |
தேக்குதல் | நீர் முதலியவற்றை ஒரிடத்தில் தேங்குமாறு கட்டுதல் ; தடைபண்ணுதல் ; நிரம்பப் பருகுதல் ; நிறைதல் ; தெவிட்டுதல் ; ஏப்பம்விடுதல் . |
தேக்கெறிதல் | தெவிட்டுதல் ; ஏப்பமிடுதல் ; நிறைதல் ; நிரம்பவுண்ணுதல் . |
தேக்கொக்கு | தேமா . |
தேகக்கூறு | உடலின் இயல்பாயுள்ள நிலை . |
தேககாங்கை | உடற்சூடு . |
தேககாந்தி | உடல் ஒளி , மேனியின் பளபளப்பு . |
தேககோசம் | தோல் . |
தேகசம்பந்தம் | புணர்ச்சி ; உறவு . |
தேகசாரம் | மூளை . |
தேகசுத்தி | உடலின் தூய்மை ; உடல் தூய்மை செய்யும் சடங்கு . |
தேகத்தடிப்பு | கரப்பான்வகை . |
தேகதாரகம் | எலும்பு . |
தேகதிடம் | உடல்வலிமை . |
தேகபந்தம் | உடல்மேல் வைக்கும் பற்று . |
தேகம் | உடம்பு ; கமுகு . |
தேகயாத்திரை | உடலோம்புதல் ; இறப்பு . |
தேகரசம் | வியர்வை . |
தேகராசம் | காண்க : கையாந்தகரை . |
தேகவியோகம் | உடலிலிருந்து நீங்குதலாகிய சாவு . |
தேகளி | இடைகழி . |
தேகளீதீபநியாயம் | இடைகழியில் வைத்த விளக்கு இருபுறமும் ஒளிவீசுதல்போல ஒரு பொருள் இடையிலிருந்து இரண்டிடத்தும் பயின்றுவரும் நெறி . |
தேகனி | மஞ்சள் . |
தேகாத்துமவாதம் | உடம்பே ஆன்மா என்று கூறும் சாருவாகமதம் . |
தேகாந்தம் | உடலின் இறுதியாகிய இறப்பு . |
தேகாபிமானம் | உடம்பினிடத்து வைக்கும் பற்று . |
தேகி | ஆன்மா ; புல்லுருவி . |
தேகியெனல் | ஈ என இரத்தற்குறிப்பு . |
தேங்காய் | தெங்கங்காய் ; இனிய காய் . |
தேங்காய்க்கண் | தேங்காயின் மேலிடத்துள்ள முக்கண் . |
தேங்காய்த்தண்ணீர் | முற்றின தேங்காயின் நீர் . |
தேங்காய்த்துருவல் | தேங்காய்ப்பருப்பின் துருவிய பூ . |
தேங்காய்துருவி | தேங்காய்ப்பருப்புத் துருவும் கருவி . |
தேங்காய்நெய் | தேங்காய்ப்பாலினின்றும் காய்ச்சி எடுக்கப்படும் எண்ணெய் ; கொப்பரையைச் செக்கிலிட்டு ஆட்டி எடுக்கும் எண்ணெய் . |
தேங்காய்ப்பால் | தேங்காய்த் துருவலினின்று பிழிந்த பால் ; தேங்காய்ப்பாலுடன் சருக்கரையிட்டு ஆக்கும் குடிநீர்வகை . |
தேங்காய்ப்பூ | காண்க : தேங்காய்த்துருவல் . |
தேங்காய்மரம் | தென்னைமரம் ; கத்தூரிமண மரவகை . |
தேங்காய்முறி | இரண்டாக உடைந்த தேங்காயில் பாதி . |
தேங்காய்மூடி | இரண்டாக உடைந்த தேங்காயில் பாதி . |
தேங்காய்மூரி | தேங்காயின் நரம்பு . |
தேங்காய்வழுக்கை | தேங்காயின் முற்றாத உள்ளீடு . |
தேங்காயெண்ணெய் | காண்க : தேங்காய்நெய் . |
தேங்காயெறிதல் | சிதறுதேங்கா யுடைத்தல் . |
தேங்குதல் | நிறைதல் ; தங்குதல் ; மிகுதல் ; மனங்கலங்குதல் ; அஞ்சுதல் ; தாமதித்தல் ; கெடுதல் . |
தேங்குழல் | முறுக்குவகை . |
தேசகன் | நாடாள்வோன் . |
தேசகாலம் | இடமும்பொழுதும் ; கால நிகழ்ச்சி . |
தேசத்தொண்டு | நாட்டிற்குழைத்தல் . |
தேசப்படம் | நாட்டு அமைப்பைக் காட்டும் படம் . |
தேசப்பழமை | காண்க : தேசவழக்கம் . |
தேசபரிச்சேதம் | இடத்தால் அளவிடுகை . |
தேசம் | நாடு ; இடம் ; ஒளி . |
தேசமுகி | அரசிறை அதிகாரி . |
தேசலம் | மாமரம் . |
தேசவழக்கம் | நாட்டுவழக்கம் . |
தேசவளமை | நாட்டுவழக்கம் . |
தேசவாசி | நாட்டில் வாழ்வோன் ; கண்டபடி அலைவோன் ; நாட்டுநடப்பு அறிபவன் . |
தேசவியவகாரம் | நாட்டுவழக்கம் . |
தேசன் | ஒளிமயமாயுள்ளவன் ; பெரியோன் . |
தேசனம் | திருத்தம் ; மூங்கில் . |
தேசனி | மருள் ; மஞ்சள் . |
தேசா | ஒரு பண்வகை . |
தேசாக்கிரி | பாலை யாழ்த்திறவகை . |
தேசாசாரம் | காண்க : தேசவழக்கம் . |
தேசாட்சரி | உச்சிவேளையில் பாடப்படுவதாகிய ஒரு பண்வகை . |
தேசாதிபத்தியம் | நாடாளும் தலைமை . |
தேசாதிபதி | நாடோள்வோன் . |
தேசாதேசம் | பற்பல நாடு . |
தேசாந்தரம் | அயல் நாடு . |
தேசாந்தரி | அயல்நாட்டான் ; பயணிகளை உண்பிக்கும்பொருட்டு ஏற்பட்ட கோயிற் கட்டளை . |
![]() |
![]() |