சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தௌ | ஓர் உயிர்மெய்யெழுத்து(த்+ஔ) . |
| தௌகித்திரன் | மகளுக்கு மகன் . |
| தௌகித்திரி | மகளுக்கு மகள் . |
| தௌசாரம் | குளிர் ; பனி . |
| தௌத்தியம் | தூது ; துதி ; ஒருத்தியைக் கூட்டிவிடுகை . |
| தௌதசிலம் | பளிங்கு . |
| தௌதம் | வெள்ளி ; துவைத்த ஆடை ; குளியல் . |
| தௌதிகம் | முத்து . |
| தௌர்ப்பல்லியம் | வலுவின்மை . |
| தௌர்ப்பாக்கியம் | நற்பேறின்மை . |
| தௌரிதகம் | விரைவு ; குதிரைநடை . |
| தௌரிதம் | விரைவு ; குதிரைநடை . |
| தௌரீதகம் | விரைவு ; குதிரைநடை . |
| தௌலம் | துலாக்கோல் . |
| தௌலிகன் | வன்னக்காரன் , ஓவியன் . |
| தௌலேயம் | ஆமை . |
| தௌவல் | கேடு . |
| தௌவாரிகன் | வாயில் காப்போன் . |
| தௌவுத்தல் | கெடுதல் ; தத்துதல் . |
| தௌவை | காண்க : தவ்வை . |
|