சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நி | ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+இ) ; இன்மை , மறுதலை , மிகுதி , அண்மை , உறுதி , வன்மை , விருப்பம் இவற்றைக் காட்டும் வடமொழி முன்னொட்டு ; நிடாதம் எனப்படும் தார இசையின் எழுத்து . |
| நிக்கந்தத்தேவர் | பற்றற்றவனாகிய அருகன் . |
| நிக்கந்தன் | பற்றற்றவனாகிய அருகன் . |
| நிக்கா | முகமதியர் கலியாணம் ; கைம்பெண் மணம் . |
| நிக்கிரகத்தானம் | வாதிகள் தோல்வியுறுதற்கு ஏதுவாகியது . |
| நிக்கிரகம் | அழிக்கை ; அடக்குதல் ; தண்டனை ; வெறுப்பு ; வாதத் தோல்வி ; எல்லை . |
| நிக்கிரகித்தல் | கொல்லுதல் ; அடக்குதல் ; கை விடுதல் ; ஒறுத்தல் . |
| நிக்கிரானுக்கிரகம் | ஒறுத்தலும் அருளுதலும் . |
| நிக்குரோதம் | ஆலமரம் ; காட்டாமணக்கு . |
| நிகசலாகம் | தனியிடம் . |
| நிகடம் | அண்மை . |
| நிகண்டவாதம் | நிகண்டவாதியின் கொள்கை . |
| நிகண்டவாதி | சமணருள் ஒரு பகுதியார் . |
| நிகண்டவாய்ச்சொல்லுதல் | உண்மை கூறுதல் . |
| நிகண்டாயிருத்தல் | உண்மையாதல் . |
| நிகண்டு | சொற்பயன் விளக்கும் நூல் ; அகரமுதலி , அகராதி ; படலம் ; உறுதி வேதச்சொற்றொகுதி . |
| நிகண்டுபேசுதல் | எல்லாந் தெரிந்ததுபோற் பேசுதல் . |
| நிகணம் | வேள்விப் புகை . |
| நிகதம் | பேச்சு . |
| நிகதி | காண்க : நியதி . |
| நிகப்பிரபை | இருள் . |
| நிகம் | ஒளி . |
| நிகமம் | முடிவு ; வேதம் ; நகரம் ; நெடுந்தெரு ; கடைவீதி ; வாணிகம் ; வாணிகக் கூட்டம் . |
| நிகமனம் | அனுமான உறுப்பு ஐந்தனுள் இறுதியானது . |
| நிகர் | ஒப்புமை ; சமானம் ; ஒளி ; போர் . |
| நிகர்த்தல் | ஒத்தல் ; மாறுபடுதல் ; விளங்குதல் ; போர் . |
| நிகர்தி | இருப்புலக்கை . |
| நிகர்ப்பு | ஒப்பு ; போர் . |
| நிகர்ப்புதம் | நூறுகோடி . |
| நிகர்பக்கம் | காண்க : சுபக்கம் . |
| நிகர்வம் | செருக்கின்மை . |
| நிகர்வி | செருக்கில்லாதவன்(ள்) . |
| நிகர்வு | ஒப்பு . |
| நிகர | ஓர் உவம உருபு . |
| நிகரம் | கூட்டம் ; குவியல் ; மொத்தம் ; பொருள் ; கொடை ; விழுங்குதல் ; ' நி ' என்னும் எழுத்து . |
| நிகரார் | பகைவர் . |
| நிகரிடுதல் | ஒப்பிடுதல் . |
| நிகருவம் | அடக்கம் . |
| நிகலம் | பிடரி . |
| நிகழ்காலம் | தொழில் நடைபெறும் காலம் . |
| நிகழ்ச்சி | சம்பவம் ; நிலைமை ; செயல் ; தற்காலம் . |
| நிகழ்த்துதல் | நடப்பித்தல் ; சொல்லுதல் . |
| நிகழ்தல் | நடத்தல் ; நடந்துவருதல் ; செல்லுதல் , தங்குதல் ; நிறைவேறுதல் ; விளங்குதல் . |
| நிகழ்வு | நடக்கை ; காண்க : நிகழ்காலம் ; நிலைமை . |
| நிகளம் | நீளம் ; யானைக் காற்சங்கிலி ; விலங்கு ; தளை ; கடப்பமரவகை . |
| நிகற்பம் | பத்துஇலட்சங் கோடி . |
| நிகாசம் | உவமை . |
| நிகாதம் | நரகம் . |
| நிகாதன் | வஞ்சகன் . |
| நிகாயம் | கூட்டம் ; இடம் ; வீடு ; நகரம் . |
| நிகாயன் | வடிவமற்ற கடவுள் . |
| நிகாரணம் | கொலை ; காரணமற்றது . |
| நிகாரணன் | காண்க : நிசாரணன் . |
| நிகாரம் | அவமரியாதை ; தவறு ; பணி ; தூற்றுதல் ; விழுங்குதல் . |
| நிகிதம் | படை ; இதமின்மை . |
| நிகிர்தம் | காண்க : பிசி . |
| நிகிருட்டம் | இழிவு . |
| நிகிருதி | வறுமை ; பொல்லாங்கு ; நிந்தை . |
| நிகிலம் | எல்லாம் . |
| நிகீயெனல் | குதிரையின் கனைப்புக் குறிப்பு . |
| நிகீனன் | கீழ்மகன் . |
| நிகு | மஞ்சள் ; அறியுங் கருவி . |
| நிகுஞ்சம் | புதர்வீடு ; குகை ; சிறு குடிசை . |
| நிகுஞ்சனம் | கொலை ; கூத்தின் உடற்செய்கைகளுள் ஒன்று . |
| நிகுட்டம் | தொனி . |
| நிகுத்தை | கதவு . |
| நிகுதி | காண்க : நியதி ; வரி . |
| நிகுநிகுவெனல் | மினுமினுத்தற் குறிப்பு . |
| நிகும்பம் | நேர்வாளக்கொட்டை . |
| நிகூடம் | ஆழம் ; மறைவு . |
| நிகேதம் | வீடு ; கோயில் ; நகரம் . |
| நிகேதனம் | வீடு ; கோயில் ; நகரம் . |
| நிகோதம் | விலங்கினம் : கொடிய நரகவகை . |
| நிச்சம் | காண்க : நிச்சயம் ; எப்பொழுதும் . |
| நிச்சயதாம்பூலம் | பெண்ணை மணஞ்செய்து தருவதற்கு உறுதிப்படுத்த மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்குத் தரும் வெற்றிலைபாக்கு . |
|
|