நீ முதல் - நீதக்கேடு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நீ ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+ ஈ) ; முன்னிலை ஒருமைப் பெயர் .
நீக்கம் நீங்குகை ; பிளப்பு ; நீளம் ; முடிவு ; தறுவாய் ; இடைப்பட்ட இடம் .
நீக்கல் நீக்குதல் ; அழிக்கை ; மாறுபாடு ; தையல் இணைப்பு ; துளை .
நீக்கு விலக்கு ; கழிவு ; பிளப்பு ; மீதி ; காண்க : நீக்கம் .
நீக்குதல் ஒழித்தல் ; விடுவித்தல் ; கழித்தல் ; ஒதுக்குதல் ; அழித்தல் ; அகற்றுதல் ; பிரித்தல் ; திறத்தல் ; மாற்றுதல் ; கைவிடுதல் .
நீக்குப்போக்கு இணக்கம் ; மரியாதை ; உதவி ; சாக்குப்போக்கு ; வழிவகை ; இடைவெளி ; இளைப்பாறுகை ; செயல்முறைமை .
நீகம் தவளை ; மேகம் .
நீகாசம் ஒப்பு ; உண்மை ; உறுதி .
நீகாமன் காண்க : நீகான் .
நீகாரம் பனி ; காண்க : ஆணவமலம் ; அவமதிப்பு
நீகான் மாலுமி .
நீங்கல் விலகுகை ; பிளப்பு ; புறம்பு .
நீங்கள் முன்னிலைப் பன்மைப்பெயர் .
நீங்குதல் பிரிதல் ; ஒழித்தல் ; கடத்தல் ; மாறுதல் ; விடுதலையாதல் ; தள்ளுண்ணுதல் ; நடத்தல் ; ஒழிதல் ; நீந்துதல் ; பிளவுபடுதல் ; விரிந்து அகலுதல் ; சிதறுதல் .
நீச்சல் நீந்துகை ; வெள்ளம் ; கோவணம் .
நீச்சு நீந்துதல் ; நீந்தக்கூடிய ஆழம் ; வெள்ளம் ; மீன்நாற்றம் .
நீச்சுத்தண்ணீர் நீந்தக்கூடிய ஆழமுள்ள நீர் .
நீசக்கிரகம் இராகுகேதுக்கள் ; நீசத்தானத்தில் இருக்கும் கோள் .
நீசகம் நீர் .
நீசசாதி இழிந்த குலம் .
நீசத்தானம் ஒரு கோளின் உச்சத்திற்கு ஏழாமிடம் .
நீசப்படுதல் ஈனப்படுதல் ; நீசத்தானமுறுதல் .
நீசம் இழிவு ; பள்ளம் ; தாழ்ச்சி ; கோளின் உச்சத்திற்கு ஏழாமிடம் ; கொடுமை ; பொருத்தமில்லாத ஆண்பெண்களின் புணர்ச்சி ; மஞ்சள் .
நீசவாகனம் கழுதை .
நீசன் இழிந்தோன் ; நீசத்தானத்தில் இருக்கும் கோள் ; அறிவில்லாதவன் .
நீசாரம் கம்பளிப்புடைவை ; திரைச்சீலை .
நீஞ்சுதல் காண்க : நீந்துதல் ; பெருஞ்செயல்களை முடிக்கப் பெருமுயற்சிசெய்தல் ; மிகுதியாகக் குடித்தல் .
நீட்சி நீளம் ; ஓசையின் நீட்சி ; நீட்டுகை ; தாமதம் .
நீட்சிமை நீளம் ; ஓசையின் நீட்சி ; நீட்டுகை ; தாமதம் .
நீட்டம் நீளம் ; ஓசையின் நீட்சி ; நீட்டுகை ; தாமதம் .
நீட்டல் நீட்டுதல் ; குற்றுயிரை நெட்டுயிராக இசைக்கும் செய்யுள் விகாரவகை ; காண்க : நீட்டலளவு(வை) ; சடையை நீட்டி வளர்த்தல் ; பெருங்கொடை .
நீட்டலளவு அளவை நான்களுள் நீட்டியளக்கும் முழம் காதம் போன்ற அளவு .
நீட்டலளவை அளவை நான்களுள் நீட்டியளக்கும் முழம் காதம் போன்ற அளவு .
நீட்டாணம் குழம்பு .
நீட்டாள் நெடியவன் ; வேலையாள் .
நீட்டித்தல் நீளச்செய்தல் ; காண்க : நீட்டிப்பேசுதல் ; காலந்தாழ்த்துதல் ; முடித்தல் ; நெடுங்காலம் நிலைத்தல் .
நீட்டிநடத்தல் எட்டி நடத்தல் ; மெல்ல நடத்தல் .
நீட்டிப்பேசுதல் விரித்துச் சொல்லுதல் ; சொற்களை நீட்டி உச்சரித்துப் பேசுதல் .
நீட்டிப்போடுதல் காலை எட்டிவைத்தல் ; காலந் தாழ்த்துதல் .
நீட்டியளத்தல் ஓரிடத்தையேனும் பொருளையேனும் கோல் முதலிய கருவிகொண்டு அளக்கை .
நீட்டு நீளம் ; தூரம் ; திருமுக ஓலை .
நீட்டுதல் நீளச்செய்தல் ; முடக்காது நேர் நிறுத்தல் ; நைவேத்தியம் முதலியவை அளித்தல் ; கொடுத்தல் ; செருகுதல் ; நீளப்பேசுதல் ; இசை முதலியவற்றில் காலம் நீட்டித்தல் ; தாமதித்தல் .
நீட்டுப்போக்கு நீளவாட்டு ; திறமை ; உயரம் .
நீட்டுமுடக்கு கொடுக்கல்வாங்கல் ; உதவுங்குணம் ; தெம்பு , ஆற்றல் .
நீட்டோலை திருமுகவோலை .
நீட்பம் நீளம் .
நீடசம் குருவி .
நீடம் பறவைக்கூடு ; இருப்பிடம் .
நீடாணம் காண்க : நீட்டாணம் .
நீடி எங்கும் பரவியிருக்கும் தன்மை .
நீடித்தல் நீளுதல் ; நிலைநிற்றல் .
நீடு நெடுங்காலம் ; நிலைத்திருக்கை .
நீடுதல் நீளுதல் ; பரத்தல் ; செழித்தல் ; மேம்படுதல் ; நிலைத்தல் ; இருத்தல் ; தாமதித்தல் ; கெடுதல் ; தாண்டுதல் ; பொழுதுகடத்துதல் ; தேடுதல் ; பெருகுதல் .
நீடுநினைந்திரங்கல் கூட்டம் பெறாமல் காலம் நீட்டிக்கவே தலைவியை மிக நினைந்து தலைவன் இரங்கல் .
நீடுநீர் தீர்த்தநீர் .
நீடூழி நெடுநாள் ; நெடுங்காலம் .
நீடூழிகாலம் நெடுநாள் ; நெடுங்காலம் .
நீடோடநடத்தல் நெடுங்காலம் நிகழ்தல் .
நீண்டவன் வாமனாவதாரம் எடுத்து வளர்ந்த திருமால் .
நீண்டாயம் நீளம் .
நீண்முடி நண்டமுடிதரித்தவனான அரசன் .
நீண்மை பழைமை .
நீண்மொழி சூளுரை ; வீரனொருவன் செய்த வஞ்சினம் கூறும் புறத்துறை .
நீணாளம் நீண்ட புகைக்குழாய் .
நீணிதி பெருஞ்செல்வம் .
நீணிலை ஆழம் ; நீர்மடு .
நீணுதல் நெடுந்தொலைவு செல்லுதல் ;
நீணெறி நீண்ட வழி ; இடைவிடா இன்பத்துக்குரிய நெறி .
நீத்தம் வெள்ளம் ; ஆழம் ; கடல் ; மிகுதி ; தண்ணீர்விட்டான்செடி .
நீத்தல் பிரிதல் ; துறத்தல் ; தள்ளுதல் ; இழித்தல் ; வெறுத்தல் ; விடுதல் ; நீங்குதல் .
நீத்தவன் அருகன் ; துறவி .
நீத்தார் முனிவர் ; துறவியர் .
நீத்திடுதல் பெருக்கிடுதல் ; மிகுத்திடுதல் ; விட்டுவிடுதல் ; துறந்துவிடுதல் .
நீத்து நீந்துதல் ; நீந்தக்கூடிய ஆழமுடைய நீர் ; வெள்ளம் .
நீதக்கேடு காண்க : நீதிக்கேடு .