நு முதல் - நுதம்பு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நு ஒர் உயிர்மெய்யெழுத்து (ந் + உ) ; ஆயுதப் பொது ; தியானம் ; தோணி ; நிந்தை ; நேரம் ; புகழ் .
நுக்காங்குலை காய்கள் விழுந்த பனங்குலைத் தண்டு .
நுக்கு பொடித்துண்டு ; எட்டிமரம் .
நுக்குடம் எட்டிமரம் .
நுக்குதல் பொடியாக்கல் ; புடைத்தல் ; அழித்தல் ; மிகுதியாய்ப் பெய்தல் .
நுகக்கால் நுகத்தடி ; காண்க : ஏர்க்கால் .
நுகக்காற்குச்சி நுகத்து முளைக்குச்சி .
நுகத்தடி காளையின் கழுத்தில் பூட்டப்படும் மரத்தடி .
நுகத்தாணி காண்க : பகலாணி .
நுகத்துளை நுகத்தடியின் இருமுனைகளிலும் உள்ள துளை .
நுகம் எருதுகளின் கழுத்தில் பூட்டும் மரம் , நுகத்தடி ; காண்க : நுகத்தாணி ; பாரம் ; வலிமை ; சோதிநாள் ; மகநாள் ; கதவின் கணையமரம் .
நுகம்புரட்டி கட்டுக்கமையாத எருது ; ஒழுங்கு தவறுகிறவன் .
நுகம்வைத்தல் நல்ல நாளில் முதன்முறையாக எருதின் கழுத்தில் நுகத்தைப் பூட்டுதல் .
நுகர்ச்சி அனுபவம் ; உண்ணுதல் ; காண்க : வேதனை .
நுகர்தல் அருந்துதல் ; செய்தல் ; துய்த்தல் .
நுகர்வு காண்க : நுகர்ச்சி .
நுகும்பு பனை , வாழை முதலியவற்றின் மடல் விரியாத குருத்து ; பனையோலை .
நுகைத்தல் இளகச்செய்தல் ; தளரச்செய்தல் .
நுகைதல் தளர்தல் ; இளகுதல் .
நுகைவு தளர்வு ; தளர்ந்தது ; மென்மை ; தணிவு ; பொருளுதவி ; மனக்கனிவு .
நுங்கள் உங்கள் ; நீங்கள் .
நுங்கு பனையிளங்காய்க்குள்ளிருக்கும் இளம் பருப்பு ; பனஞ்சுளை ; நுங்குக்காய் .
நுங்குக்குவளை நுங்கு எடுத்துப் போட்ட பனங்காய் .
நுங்குதல் விழுங்குதல் ; ஆரப்பருகுதல் ; கைக்கொள்ளுதல் ; கெடுதல் .
நுங்குப்பாக்கு இளம்பாக்கு .
நுங்கை உம் தங்கை ; உம் தாய் .
நுசுப்பு இடை , மருங்குல் .
நுசை சிவதைவேர் .
நுட்பக்காரன் புத்திக்கூர்மையுள்ளவன் .
நுட்பம் நுண்மை ; நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பெற்ற உரை ; நுட்பம் ; பொருளின் நுட்பம் ; காலநுட்பம் ; கரந்துறை கோள்களுள் ஒன்று ;ஓரணி .
நுடக்கம் அசைவு ; துவளுதல் ; தள்ளாட்டம் ; கூத்து ; வளைவு .
நுடக்கு அசைவு .
நுடக்குதல் கழுவுதல் ; துவட்டுதல் ; மாய்த்தல் ; கரைத்தல் ; மடக்குதல் .
நுடங்கு அசைவு ; நுட்பம் .
நுடங்குதல் அசைதல் ; துவளுதல் ; தள்ளாடுதல் ; ஆடுதல் ; வளைதல் ; நுட்பமாதல் ; அடங்குதல் ; ஈடுபடுதல் ; மெலிதல் .
நுண்டுகில் பட்டாடைவகை .
நுண்டொடர் காண்க : நேர்ஞ்சங்கிலி .
நுண்ணறிவு நுண்ணிய புத்தி .
நுண்ணாக்கை நுண்ணுடல் ; சூக்கும உடல் .
நுண்ணிச்சிறை ஒரு சிறுகுருவிவகை .
நுண்ணிமை காண்க : நுண்மை .
நுண்ணியான் கூரிய அறிவுடையோன் ; அமைச்சன் .
நுண்ணுணர்வு கூரிய அறிவு .
நுண்ணுருக்குதல் கரையவுருக்குதல் .
நுண்ணேலம் ஒரு மணப்பண்டவகை .
நுண்பொருள் நுட்பமான கருத்து ; நுண்ணிய பொருள் .
நுண்மணல் சிறுமணல் .
நுண்மை கூர்மை ; நுட்பம் ; மிகுதி ; வேலைத் திறம் ; அறிவுநுட்பம் ; பொருள் நுட்பம் ; சிற்றுண்டி ; கமுக்கம் .
நுணக்கம் கூர்மை ; வாட்டம் ; அசைதல் ; மெல்லியதாதல் .
நுணங்கியோர் நுணுகிய அறிவுடையோர் .
நுணங்கு நுண்மை ; நுடக்கம் ; தேமல் .
நுணங்குதல் அசைதல் ; மெல்லிதாதல் ; நுட்பமாதல் ; வளைதல் ; துவளுதல் ; செறிதல் ; வாடுதல் .
நுணல் தவளை ; கடல்மீன்வகை .
நுணலை தவளை ; கடல்மீன்வகை .
நுணவம் நுணாமரம் .
நுணவு நுணாமரம் , ; தணக்கமரம் ; கட்டில் .
நுணவை எள்ளுருண்டை ; அரிசி முதலியவற்றின் மா ; நுணாமரம் .
நுணா நுணாமரம் ; மஞ்சள்நாறிமரம் ; தணக்கமரம் .
நுணாவுதல் தடவித்தெரிதல் ; நாவால் தடவியுணர்தல் .
நுணி நுனி .
நுணித்தல் கூர்மையாக்குதல் ; பொடியாக்குதல் ; நுணுகி ஆராய்தல் .
நுணிதல் தேய்தல் .
நுணுக்கம் நண்மை ; கூர்மை ; கூரறிவு ; வேலைத்திறம் ; பொருளடக்கம் ; யாழின் உள்ளோசை ; காலநுட்பம் ; இவறல் ; பொன் .
நுணுக்கம்பார்த்தல் சிறுசிறு செயல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொள்ளல் ; ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்தல் .
நுணுக்கு நுண்மை ; நுட்பமானது ; பொடியெழுத்து .
நுணுக்குதல் நுண்மையாக்குதல் ; பொடியாக்குதல் ; அரைத்தல் ; சிதைத்தல் ; சிறிதாய் எழுதுதல் ; ஒன்றும் கொடாமை ; யாழில் இன்னிசையெழுப்புதல் ; கூர்மையாக்குதல் ; புத்தியைக் கூர்மையாக்குதல் ; நுண்ணிதாக வேலை செய்தல் .
நுணுக்கெழுத்து பொடியாக எழுதும் எழுத்து .
நுணுகு காண்க : நுண்மை .
நுணுகுதல் நுட்பமாதல் ; மெலிதல் ; கூர்மையாதல் .
நுணுங்கு நுண்மை ; பொடி .
நுணுங்குதல் நுட்பமாதல் ; பொடியாதல் ; மெல்லப் பாடுதல் .
நுணை கோட்சொல் .
நுணைத்தல் தடவித்தெரிதல் ; நாவால் தடவியுணர்தல் .
நுதம் நீராடுந்துறை .
நுதம்பு கள் ; சோறு .