சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நை | ஓர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஐ) ; ஓர் இகழ்ச்சிக்குறிப்பு . |
நைக்காட்டுதல் | கேலிகாட்டுதல் . |
நைகரம் | துன்பம் ; குறைவு . |
நைச்சி | காக்கை ; பாம்பு . |
நைச்சிகம் | தாழ்வு ; இழிதன்மை ; தன்வயப்படுத்துகை . |
நைச்சியம் | தாழ்வு ; இழிதன்மை ; தன்வயப்படுத்துகை . |
நைசர்க்கிகம் | இயற்கையாகத் தோன்றியது . |
நைசிகம் | காண்க : நையம் . |
நைசியம் | காண்க : நையம் . |
நைட்டிகப்பிரமசாரி | திருமணஞ் செய்யாமல் சாகும்வரை மாணவம் பூண்டிருப்பவன் . |
நைட்டிகம் | ஆயுள் முழுதும் மாணவம் பூண்டொழுகும் நிலை . |
நைட்டிகன் | காண்க : நைட்டிகப்பிரமசாரி . |
நைத்தல் | நசுக்குதல் ; எரித்தல் ; அழித்தல் . |
நைத்திகம் | நித்தியத்துவம் , என்றும் உளவாயிருக்கை . |
நைத்தியம் | நித்தியத்துவம் , என்றும் உளவாயிருக்கை . |
நைதல் | இரங்குதல் ; நிலைகெடுதல் ; கெடுதல் ; தளர்தல் ; நசுங்குதல் ; சுருங்குதல் ; மாத்திரையிற் குறைதல் ; வாடுதல் ; மனம்வருந்தல் ; தன்வயப்படாமை . |
நைதிகை | காண்க : ஊசிமல்லிகை . |
நைதெனல் | இரக்கக்குறிப்பு ; மெலிதற் குறிப்பு ; மனநோதற்குறிப்பு . |
நைநையெனல் | இகழ்ச்சிக்குறிப்பு ; குழந்தை விடாது அழுதற்குறிப்பு . |
நைபடுதல் | நசுக்கப்படுதல் . |
நைபத்தியம் | நடிப்பவன் கொள்ளும் வேடம் . |
நைபாலி | அடுக்குமல்லிகை . |
நைபாலிகம் | செம்பு ; பித்தளை . |
நைமிசம் | நைமிசம் என்னும் காடு ; திருமால் திருப்பதி . |
நைமித்திகம் | சிறப்பு வழிபாடு . |
நைமித்தியம் | சிறப்பு வழிபாடு . |
நையநருக்குதல் | பொடியாக்குதல் ; நையப்புடைத்தல் . |
நையப்புடைத்தல் | நன்றாக அடித்தல் . |
நையம் | மூக்கிலிடும் மருந்து ; காக்கை . |
நையல் | மெலியச்செய்யும் நோய் ; அம்மை நோய் . |
நையாண்டி | கேலிப்பேச்சு ; சிரிப்புப்பேச்சு ; நாடோடிப் பாட்டுவகை . |
நையாயிகன் | அறநூல் கற்றோன் . |
நைராக்கியம் | எள்ளிநகையாடல் , பரிகாரம் . |
நைராசியம் | நம்பிக்கையின்மை . |
நைருதி | தென்மேற்றிசை . |
நைலம் | கடற்பாசி மருந்து . |
நைவருதல் | வருந்துதல் ; இரங்குதல் . |
நைவளம் | பாலைப் பண்வகை ; குறிஞ்சியாழ்த்திறம் . |
நைவனம் | நடனம் ; வீரன் . |
நைவு | வாடினது ; மிகப் பழுக்கை ; வருந்துகை ; நோய் . |
நைவேத்தியம் | கடவுளுக்குப் படைக்கும் உணவு . |
நைவேதனம் | படைத்தல் ; காண்க : நைவேத்தியம் . |
நைவேதித்தல் | கடவுளுக்கு உணவு முதலியன படைத்தல் . |
![]() |