சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நொ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஒ) ; துன்பம் ; நோய் ; மென்மை . |
நொக்கு | வெடிப்பு . |
நொக்குதல் | உண்டு குறைத்தல் ; அடித்தல் ; மிகுதியாகத் திட்டுதல் . |
நொக்கென | உடனே . |
நொங்கு | நுங்கு . |
நொங்குதல் | விழுங்குதல் ; மெலிதல் . |
நொச்சி | கருநொச்சி ; வெண்ணொச்சி ; காண்க : நொச்சித்திணை : ஒரு புறத்துறை ; எயில் காத்தல் ; மதில் ; சிற்றூர் . |
நொச்சித்திணை | நொச்சிமாலை சூடி வீரர் எயில் காத்தலைக் கூறும் புறத்திணை . |
நொசி | வருத்தம் ; நுண்மை . |
நொசித்தல் | வருத்துதல் . |
நொசிதல் | நுண்மையாதல் ; அருமையாதல் ; வருந்தல் ; வளைதல் ; நைதல் ; குறைவுறுதல் . |
நொசிப்பு | மனத்தை ஒருவழிச் செலுத்துதலாகிய சமாதி . |
நொசிவு | நுண்மை ; வருத்தம் ; வளைந்த நிலை . |
நொட்டாங்கை | இடக்கை . |
நொட்டு | புணர்ச்சி . |
நொட்டுதல் | புணர்தல் ; ஏமாற்றுதல் . |
நொட்டை | சுவைமிகுதியால் அண்ணத்தில் நாவைச் சேர்த்துக் கொட்டுதல் . |
நொட்டைச்சொல் | குறைச்சொல் . |
நொடி | கைந்நொடிப்பொழுது ; சொல் ; முதுமொழி ; செய்யுள் ; ஓசை ; வண்டிப்பாதைகளில் ஏற்படும் பள்ளம் ; புதிர் ; நோய்த்துன்பம் . |
நொடிக்கதை | விடுகதை ; மிகச் சுருக்கமாக அமையும் கதை . |
நொடிசொல்லுதல் | புதுச்செய்தி கூறுதல் ; விடுகதை சொல்லுதல் ; எள்ளிநகையாடல் . |
நொடித்தல் | சொல்லுதல் : சொடக்குதல் ; இங்கிதத்தாலழைத்தல் ; கோள்சொல்லுதல் ; பழித்தல் ; அழித்தல் ; காண்க : நொடிசொல்லுதல் : கட்டுக்குலைதல் ; நடக்கும்போது கால் சிறிது வளைதல் ; ஒடித்தல் ; உறுப்பாட்டுதல் ; பால் முதலியன சுரத்தல் ; இழப்படைதல் . |
நொடித்தான்மலை | அழிப்புத் தலைவனான சிவனின் கைலாயமலை . |
நொடித்துப்போதல் | நிலைகுன்றுதல் ; வறுமையடைதல் . |
நொடிதல் | சொல்லுதல் ; ஒடிதல் . |
நொடிப்பு | கையால் நொடித்தல் நேரம் , கணப்பொழுது . |
நொடிபயிற்றுதல் | பேச்சுக் கற்பித்தல் . |
நொடிபோக்குதல் | தாளத்திற்கியையக் கையை நொடித்தல் . |
நொடிவரை | விரைவில் . |
நொடிவிழுதல் | பாதையில் குழிப்பள்ளம் விழுதல் ; கோணலாதல் . |
நொடுக்குநொடுக்கெனல் | ஒலிக்குறிப்பு ; பாதக்குறட்டினொலி ; படபடத்தற்குறிப்பு . |
நொடுத்தல் | விற்றல் . |
நொடுநொடுத்தல் | துடித்தல் ; துடுக்காயிருத்தல் . |
நொடுநொடெனல் | படபடத்தற்குறிப்பு ; துடுக்காயிருத்தற்குறிப்பு . |
நொடை | விலை ; விற்கை ; பலபண்டம் . |
நொடைமை | விலை . |
நொண்டல் | நொண்டுதல் ; நுகர்தல் ; முகத்தல் . |
நொண்டி | முடமான ஆள் அல்லது விலங்கு ; முடம் ; காண்க : நொண்டிநாடகம் . பொய்க்காலால் நடப்போன் . |
நொண்டிக்கால் | முடக்கால் ; பொய்க்கால் . |
நொண்டிநாடகம் | கள்வனொருவன் படையிலுள்ள குதிரையொன்றைத் திருட முயன்றபோது கால்தறியுண்டு பின் நல்வழிபெற்ற செய்தியைச் சிந்துச்செய்யுளால் புனைந்து கூறும் நாடகநூல் . |
நொண்டுதல் | காலை ஊன்றாமல் கிந்தி நடத்தல் . |
நொதல் | துன்புறுத்தல் . |
நொதி | அருவருக்கத்தக்க சேறு . |
நொதித்தல் | கொப்புளித்தல் ; புளித்த மா முதலியன பொங்குதல் ; ஈரமாதல் ; நீர் முதலியவற்றில் ஊறிப்போதல் ; நுரைத்தல் . |
நொதுக்கல் | இளக்கமுள்ளது . |
நொதுத்தல் | அழித்தல் ; தளர்தல் . |
நொதுநொதுத்தல் | குழைதல் ; சீழ்கட்டுதல் ; ஈரமாதல் ; நுரைத்தல் . |
நொதுநொதெனல் | புளித்த மா முதலியன பொங்குதற்குறிப்பு ; நெகிழ்தற்குறிப்பு . |
நொதுமல் | அயல் ; புறக்கணிப்பு ; மென்மை ; அன்பிலார் கூற்று . |
நொதுமலர் | அயலார் . |
நொதுமலாளர் | அயலார் ; புறங்கூறுவோர் . |
நொதுமெனல் | விறைவுக்குறிப்பு . |
நொந்தகைமை | வறுமை . |
நொந்தலை | வலுவின்மை ; வருமை . |
நொந்தலைமை | வலுவின்மை ; வருமை . |
நொந்தன்னம் | நீர்விடாமையாற் பதனழிந்த சோறு . |
நொந்தார் | பகைவர் . |
நொந்துதல் | அழிதல் ; தூண்டுதல் . |
நொப்பம் | திறமை . |
நொப்பு | தடைசெய்கை ; குட்டி பால் குடியாமலிருக்க ஆட்டின் முலையிற் சுற்றும் ஓலை ; வெள்ளப்பெருக்கில் மிதந்துவரும் செத்தை முதலியன . |
நொம்பலம் | துன்பம் ; நோவு . |
நொய் | குறுநொய் ; இலேசு ; மென்மை ; நுண்மை . |
நொய்தல் | நுண்மை . |
நொய்து | மெல்லியது ; இழிவானது ; விரைவு . |
நொய்தெனல் | விரைவுக்குறிப்பு . |
நொய்ப்பம் | திறமை ; இலேசு . |
நொய்ம்மை | கனமின்மை ; மென்மை ; நேர்த்தி ; உறுதியின்மை ; குற்றம் ; நுண்மை ; தளர்ச்சி ; மனத்திடமின்மை ; மன உருக்கம் ; இழிவு . |
நொய்ய | அற்பமான ; வலியற்ற ; நுட்பமான ; மென்மையான ; கடுமையாக . |
நொய்யசொல் | வசைச்சொல் . |
நொய்யரிசி | குறுநொய் . |
நொய்யவன் | வறியவன் ; இழிஞன் ; எளியவன் ; வலுவில்லான் . |
நொய்யெனல் | நுண்மைக்குறிப்பு . |
நொய்வு | காண்க : நொய்ம்மை ; மனவருத்தம் . |
நொரு | பயிரினடியில் முளைப்பது ; காய்ப்பு மாறினபின் அரும்பும் பிஞ்சு . |
நொருக்குதல் | காண்க : நொறுக்குதல் . |
![]() |
![]() |