நோ முதல் - நோனார் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நோ ஓர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஓ) ; வலி ; துன்பம் ; நோய் ; சிதைவு ; வலுவின்மை .
நோக்க ஓர் உவமவுருபு .
நோக்கம் கண் ; பார்வை ; கிரகநோக்கு ; தோற்றம் ; உயர்ச்சி ; அழகு ; காவல் ; கருத்து ; அறிவு ; கவனம் ; விருப்பம் ; குறிப்பு .
நோக்கர் கழைக்கூத்தர் ; பார்வையாளர் .
நோக்கல் பார்த்தல் ; காத்தல் ; தேடுதல் .
நோக்கனோக்கம் மனத்தால் நோக்கும் நோக்கம் .
நோக்காடு நோவு ; இராசநோக்காடு ; மனநோவு ; நோய் ; வறுமை .
நோக்காலுரைத்தல் பார்வையால் உணர்த்துதல் .
நோக்கியநோக்கம் கண்களால் நோக்குகை .
நோக்கு கண் ; பார்வை ; அழகு ; கருத்து ; அறிவு ; பெருமை ; விருப்பம் ; கதி ; விநோதக் கூத்துக்களுள் ஒன்று ; ஒருவகைச் செய்யுளுறுப்பு ; ஓர் உவமவுருபு .
நோக்குடைப்பொருள் குறிப்புப் பொருள் ; குறிப்பு ; மொழிகளால் அமைந்த சுவையுடைய பொருள் .
நோக்குதல் பார்த்தல் ; கருதுதல் ; கவனித்தல் ; திருத்துதல் ; பாதுகாத்தல் ; அருளுதல் ; ஒத்தல் ; ஒப்பிட்டுப் பார்த்தல் ; படித்தல் ; விரும்புதல் ; கண்காணித்தல் .
நோக்குவித்தை கண்கட்டுவித்தை .
நோக்கெதிர்நோக்குதல் தலைவன் நோக்கியவிடத்துத் தலைவி எதிர்நோக்குதல் .
நோஞ்சல் மெலிவு .
நோஞ்சான் நோய் முதலியவற்றால் மெலிந்தவன் .
நோஞ்சி நோய் முதலியவற்றால் மெலிந்தவன் .
நோஞ்சை நோய் முதலியவற்றால் மெலிந்தவன் .
நோட்டக்காரன் நாணயம் பரிசோதிப்போன் ; நாணயம் , பொன் , மணி முதலியவற்றின் தன்மைகளை அறிந்தவன் .
நோட்டம் நாணயசோதனை ; கணக்கு ; விலை ; மதிப்பு ; பொன் ; மணி முதலியவற்றின் சோதனை ; பார்வை ; போட்டி ; வெல்ல முயலுகை .
நோட்டம்பார்த்தல் தகுதியறிதல் ; மதித்தல் ; மிகக் கண்டிப்பாயிருத்தல் .
நோடாலம் உள்ளக்களிப்பு , உல்லாசம் ; அதிநாகரிகம் ; பரிகாசம் ; புதுமை .
நோண்டுதல் கிளறுதல் ; முகத்தல் ; குடைந்தெடுத்தல் ; துருவி விசாரித்தல் ; சிறுகத் திருடுதல் ; பயிரைக் கிள்ளுதல் ; ஒரு தொழிலைச் சிறிது சிறிதாகச் செய்தல் .
நோணாவட்டம் சிறுகுற்றங்கள் காணுந்தன்மை .
நோதல் பூடு முதலியவற்றிற்கு வரும் கேடு ; துன்புறுதல் ; நோயுறல் ; வருந்துதல் ; வறுமைப்படுதல் ; பதனழிதல் ; எழுத்து முதலியவற்றின் மழுங்கல் ; சாயம் சிதறுகை ; வறுமை ; வெறுத்தல் .
நோதலை வறுமை ; பூடு முதலியவற்றிற்கு வரும் கேடு .
நோதிறம் முல்லை பாலைகட்குரிய அவலப்பண்வகை .
நோப்படுதல் நோய்ப்படுதல் ; மெலிதல் .
நோப்பாளம் சினம் .
நோம்பு காண்க : நோன்பு :
நோம்புக்கயிறு காண்க : காப்புநாண் .
நோம்புதல் காண்க : நேம்புதல் .
நோய் துன்பம் ; வருத்தம் ; பிணி ; குற்றம் ; அச்சம் ; நோவு .
நோய்ச்சல் நோய்கொள்ளல் ; மெலிந்தவர் ; நோய் .
நோய்ஞ்சல் மெலிந்தவர் ; நோய் .
நோய்ஞ்சி காண்க : நோயாளி .
நோய்த்தல் பிணியால் வருந்துதல் ; மெலிதல் ; வாடுதல் ; சாரமற்றுப்போதல் .
நோய்முகன் சனி .
நோய்விழுதல் செடிகளில் பூச்சிபிடிக்கை .
நோயாளி பிணியாளன் .
நோயுள்ளதீட்டு நோவோடு கூடிய மாதவிடாய் .
நோல் நோன்புக்கிரியை .
நோல்தல் நோற்றல் ; பொறுத்தல் .
நோலாமை செய்த பாவத்திற்கு வருந்தாமை .
நோலுதல் காண்க : நோல்தல்
நோலை எள்ளுருண்டை ; எட்கசிவு .
நோவல் அப்பம் .
நோவாளி நோவுள்ளான் ; வறிஞன் .
நோவு நோய் ; துன்பம் ; மகப்பேற்றுவலி ; வலி ; இரக்கம் .
நோவுசாத்துதல் பெரியோர் நோய்வாய்ப் படுதல் .
நோவெடுத்தல் மகப்பேற்றுவலி உண்டாதல் .
நோழிகை நெசவுநூலின் தாறு .
நோளை பிணியுண்ட நிலை .
நோற்பார் தவம்செய்பவர் .
நோற்பாள் சமணப் பெண்துறவி .
நோற்பு பொறுமை ; தவஞ்செய்கை .
நோற்றல் பொறுத்தல் ; விரதமிருத்தல் ; தவஞ்செய்தல் .
நோறு வாய் .
நோன்பி விரதி .
நோன்பிருத்தல் விரதங்கொள்ளுதல் .
நோன்பு தவம் ; விரதம் .
நோன்புதுறத்தல் பட்டினிகிடந்து மறுநாள் உண்ணுதல் .
நோன்புநோற்றல் விரதம் மேற்கொள்ளுதல் .
நோன்புபிடித்தல் விரதம் மேற்கொள்ளுதல் .
நோன்புயர்தல் காண்க : நோன்புதுறத்தல் .
நோன்மை பொறுமை ; வலிமை ; பெருந்தன்மை ; தவம் .
நோன்றல் பொறுத்தல் ; தள்ளல் ; நிலைநிறுத்தல் ; துறத்தல் ; தவஞ்செய்தல் .
நோனாமை தவஞ்செய்யாமை ; ஆற்றாமை ; அழுக்காறு .
நோனாவட்டம் காண்க : நோணாவட்டம் .
நோனார் ஆற்றாதார் ; பகைவர் ; தவமில்லார் .