சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பு | ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+உ) ; தொழிற்பெயர் விகுதி ; பண்புப்பெயர் விகுதி ; இறந்தகால வினையெச்ச விகுதி . |
புக்ககம் | கணவன் வீடு . |
புக்கசன் | சண்டாளன் . |
புக்கி | பிராய்மரம் . |
புக்கில் | உடம்பு ; வீடு ; புகலிடம் ; தங்குமிடம் . |
புக்கு | காண்க : புக்கி . |
புக்குப்புக்கெனல் | நெருப்பில் காற்றுப்படுவதால் உண்டாகும் ஒலிக்குறிப்பு . |
புக்குழி | காண்க : புக்ககம் . |
புக்கை | நீருற்றுள்ள கேணி ; ஒரு கூழ்வகை . |
புக்தம் | உணவு ; துய்க்கப்பட்டது . |
புகட்டுதல் | ஊட்டுதல் ; அறிவுறுத்துதல் ; உட்புகுத்துதல் . |
புகடு | அடுப்பின் சுற்றுப்புறத்திலுள்ள மேடு . |
புகடுதல் | வீசியெறிதல் . |
புகர் | கபிலநிறம் ; கபிலநிறமுள்ள மாடு ; நிறம் ; ஒளி ; அழகு ; சுக்கிரன் ; புள்ளி ; குற்றம் ; கறை ; அருவி ; உயிர் ; சோறு ; கொக்கு . |
புகர்க்கலை | புள்ளிமான்கலை . |
புகர்முகம் | யானை ; ஒரு பாணவகை . |
புகர்வு | புகுகை ; மேலேறுகை ; உணவு . |
புகரோன் | சுக்கிரன் . |
புகல் | புகுகை ; இருப்பிடம் ; துணை ; பற்றுக்கோடு ; தஞ்சம் ; உடம்பு ; தானியக்குதிர் ; வழிவகை ; போக்கு ; சொல் ; விருப்பம் ; கொண்டாடுகை ; பாடும் முறை ; வெற்றி ; புகழ் ; புரையுள்ளது . |
புகல்வி | விலங்கின் ஆண் . |
புகல்வு | மனச்செருக்கு ; விருப்பம் ; புகலுதல் . |
புகலி | புதிதாகக் குடியேறியவன் ; சீகாழி . |
புகலிடம் | இருப்பிடம் ; ஊர் ; தஞ்சம் . |
புகலுதல் | சொல்லுதல் ; விரும்புதல் ; தெரிதல் ; ஒலித்தல் ; மகிழ்தல் . |
புகவு | புகுகை ; மேலேறுகை ; உணவு . |
புகழ் | துதி ; கீர்த்தி ; அருஞ்செயல் ; அகத்தி ; வாகை . |
புகழ்க்கூத்து | கதைத்தலைவன் புகழ்குறித்து நிகழும் ஆடல் . |
புகழ்கூறல் | கீர்த்தியை எடுத்து விளக்குகை . |
புகழ்ச்சி | துதி . |
புகழ்ச்சிமாலை | தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகையுள் அகவலடியும் கலியடியும் மயங்கிய வஞ்சிப்பாவால் மகளிரது சிறப்பைக் கூறும் நூல் . |
புகழ்தல் | உயர்த்திக் கூறுதல் ; துதித்தல் ; பாராட்டுதல் . |
புகழ்பொருள் | உவமேயம் . |
புகழ்மாலை | புகழை வெளிப்படுத்தும் நூல் . |
புகழ்மை | புகழ் ; புகழுடைமை . |
புகழ்வதினிகழ்தல் | இகழாவிகழ்ச்சி |
புகழ்வீசுசந்திரன் | பச்சைக்கருப்பூரம் ; கருப்பூரமரம் . |
புகழ்வு | புகழ்ச்சி . |
புகழாப்புகழ்ச்சி | பழிப்பதுபோலப் புகழும் அணிவகை . |
புகழாவாகை | அகத்திமரம் ; அகங்காரம் . |
புகழாளன் | கீர்த்தியுடையோன் . |
புகற்சி | விருப்பம் ; காதல் . |
புகற்றுதல் | விரும்பச்செய்தல் . |
புகா | உணவு . |
புகார் | ஆற்றுமுகம் ; கழிமுகம் ; காவிரிப்பூம்பட்டினம் ; பனிப்படலம் ; மந்தாரம் ; மழை பெய்யும் மேகம் ; கபிலமரம் ; பெருங்கூச்சல் ; இகழ்விளைக்கும் செய்தி ; முறையீடு . |
புகிடி | மாதர் காதணியுள் ஒன்று . |
புகுடி | கழி ; வாயில் ; புருவம் ; காண்க : புகிடி . |
புகுத்தல் | போகவிடுதல் ; உட்செலுத்துதல் . |
புகுதல் | அடைதல் ; தொடங்குதல் ; உட்செல்லுதல் ; தாழ்நிலையடைதல் ; ஆயுளடைதல் ; ஏறுதல் ; நிகழ்தல் ; உட்படுதல் ; அகப்படுதல் . |
புகுதி | மனைவாயில் ; நுழைவாயில் ; நிகழ்ச்சி ; ஆழ்ந்தறியும் நுண்ணறிவு ; வழி ; வருவாய் . |
புகுதுதல் | நிகழ்தல் ; நுழைதல் . |
புகுந்தகம் | காண்க : புக்ககம் . |
புகுந்துபார்த்தல் | ஆழ்ந்துநோக்குதல் . |
புகுபுகெனல் | விரைவுக்குறிப்பு ; ஒலிக்குறிப்பு . |
புகுமுகம்புரிதல் | ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்ட விடத்துத் தலைவன் தன்னை நோக்குதலை விரும்பும் தலைவியின் உள்ள நிகழ்ச்சி . |
புகை | நெருப்பிலிருந்து தோன்றும் கரும்படலம் ; பனிப்படலம் ; ஆவி ; தென்கீழ்த் திசைப்பாலன் குறி ; யோசனைத்தொலைவு ; கண்ணில் விழும் படலவகை ; துயரம் ; மாணிக்கக் குற்றம் ; சாம்பிராணிப்புகை ; காண்க : தூபமணி ; புகைவட்டம் . |
புகைக்கப்பல் | நீராவிக்கப்பல் . |
புகைக்குண்டு | நச்சுப்புகை புகைக்கும் பாண்டம் ; துப்பாக்கிக்குண்டு . |
புகைக்கூடு | புகைபோக்கி ; வானக்கூடு . |
புகைக்கூண்டு | காண்க : புகைக்கூடு ; ஆகாசவாணம் . |
புகைக்கொடி | தூமகேது , வால்நட்சத்திரம் . |
புகைகட்டுதல் | புகையேற்றுதல் ; புகையால் நிறமூட்டுதல் . |
புகைகாட்டுதல் | புகைத்து நோய் நீக்குதல் ; புகையுண்டாக்குதல் ; புகைபடைத்தல் . |
புகைகுடித்தல் | புகையிலை முதலியவற்றின் புகையை உட்கொள்ளுதல் . |
புகைச்சல் | புகை ; இருள் ; பார்வை மயங்குகை ; வயிற்றெரிவு ; காண்க : புகையிருமல் ; செய்தி வெளிப்படத் தொடங்குகை ; மனவெரிச்சல் . |
புகைத்தல் | கோபத்தாலுண்டாகும் மனவெரிச்சல் ; புகையச்செய்தல் ; புகையை உட்புகுத்தி உயிரினங்களை அழித்தல் ; கெடுத்தல் ; சினக்குறிப்புக் காட்டுதல் . |
புகைதல் | புகையெழும்புதல் ; ஆவியெழுதல் ; செய்தி வெளிப்படத் தொடங்குதல் ; வருந்துதல் ; கோபித்தல் ; பயிர் முதலியன தீய்தல் ; குடி முதலியன அழிதல் ; தொண்டை முதலியன கரகரத்தல் ; மாறுபடுதல் . |
புகைநாற்றம் | கும்பல் வீச்சம் ; தீய்ந்த நாற்றம் . |
புகைப்படம் | ஒளிப்படம் , நிழற்படம் . |
புகைப்படலம் | புகைச்செறிவு . |
புகைபோடுதல் | காண்க : தூபம்போடுதல் . |
புகைமணம் | காண்க : புகைநாற்றம் . |
புகையாற்றி | ஒட்டடை . |
புகையிருமல் | வெப்பத்தினால் புகைந்து இருமச்செய்யும் நோய்வகை . |
புகையிலை | ஒரு செடிவகை . |
புகையிலைகட்டுதல் | புகையிலைச் சரக்குக் கட்டுதல் ; புகையிலையைப் பாடஞ்செய்தல் . |
![]() |
![]() |