சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பூ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ப்+ஊ) ; அழகு ; கொடிப்பூ ; கோட்டுப்பூ , நீர்ப்பூ , புதற்பூ என நால்வகைப்பட்ட மலர் ; தாமரைப்பூ ; பூத்தொழில் ; சேவலின் தலைச்சூடு ; நிறம் ; நீலநிறம் ; பொலிவு ; மென்மை ; யானையின் நுதற்புகர் ; யானையின் நெற்றிப்பட்டம் ; கண்ணின் கருவிழியில் விழும் வெண்பொட்டு ; விளைவுப் போகம் ; ஆயுதப் பொருக்கு ; தீப்பொறி ; நுண்பொடி ; தேங்காய்த் துருவல் ; சூரியனின் கதிர்படுதற்கு முன்னுள்ள பூநீற்றின் கதிர் ; இலை ; காண்க : முப்பூ ; இந்துப்பு ; வேள்வித் தீ ; கூர்மை ; நரகவகை ; பூப்பு ; பூமி ; பிறப்பு . |
பூ | (வி) அலர் , மலர் . |
பூக்கஞ்சா | ஒரு செடிவகை . |
பூக்கட்டுதல் | மலர்மாலை தொடுத்தல் . |
பூக்கம் | கமுகமரம் ; ஊர் ; மருதநிலத்தூர் . |
பூக்கவர்ந்துண்ணி | குரங்கு . |
பூக்காரன் | பூ விற்பவன் . |
பூக்குட்டான் | நீளமாக முடைந்த பூக்கூடை வகை . |
பூக்குடலை | நீளமாக முடைந்த பூக்கூடை வகை . |
பூக்குதல் | நினைக்கை ; தோன்றுகை . |
பூக்குழி | தீக்குழி . |
பூக்குறடு | பூமாலை தொடுக்கும் மேடை . |
பூக்கூடம் | பூமாலை தொடுக்கும் மேடை . |
பூக்கொய்தல் | பூப்பறித்தல் . |
பூக்கோணிலை | போரை மேற்கொள்ளும் போது வெட்சி முதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக் கூறும் புறத்துறை . |
பூக்கோள் | போரை மேற்கொள்ளும் போது வெட்சி முதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக் கூறும் புறத்துறை . |
பூகண்டகர் | உலகின் பகைவரான அசுரர் . |
பூகண்டம் | பூவலயம் ; நிலப்பரப்பின் பெரும் பகுதி . |
பூகதம் | கமுகமரம் ; பூமியை அடைந்தது . |
பூகதம்பம் | நிலக்கடப்பஞ்செடி . |
பூகதர் | புகழ்வோர் . |
பூகதன் | பூமியை அடைந்தவன் . |
பூகம் | பாக்குமரம் ; நேரம் ; ஒருவகைச் சாதிக்கூட்டம் ; திரட்சி ; திப்பிலிப்பனைமரம் ; இயல்பு ; இருள் ; நேரம் ; பிளப்பு ; கழுகு ; பலா . |
பூகம்பம் | நிலநடுக்கம் ; சூரியன் நின்ற நாளுக்கு ஏழாம் நாள் . |
பூகரம் | கையாந்தகரை . |
பூகலம் | மதர்த்த குதிரை . |
பூகாகம் | அன்றில் ; கரும்புறா . |
பூகேசம் | ஆலமரம் ; நீர்ப்பாசி . |
பூங்கஞ்சா | காண்க : பூக்கஞ்சா . |
பூங்கணை | பூவாகிய அம்பு ; மன்மதபாணம் . |
பூங்கதிர் | வெண்கதிர் ; ஒளி . |
பூங்கரும்பு | செங்கரும்புவகை . |
பூங்கருவி | ஒரு படைக்கலவகை . |
பூங்கலன் | காண்க : பூக்குடலை . |
பூங்கற்று | பூதம் ; அழகு . |
பூங்கா | நந்தவனம் , பூஞ்சோலை . |
பூங்காடு | இளங்காடு . |
பூங்காரம் | பூநீற்றுக்காரம் ; மந்தாரம் . |
பூங்காவனம் | காண்க : பூங்கா . |
பூங்காவி | ஒரு காவிநிறவகை ; காவிக்கல்வகை . |
பூங்கு | பல . |
பூங்குடம் | பூக்களால் அலங்கரிக்கப்பட்டபானை . |
பூங்கொடி | மலர்களைக்கொண்ட கொடி ; அழகிய கொடி . |
பூங்கொத்து | பூவின் தொகுதி . |
பூங்கொல்லை | காண்க : பூங்கா . |
பூங்கோயில் | திருவாரூர்ச் சிவாலயம் . |
பூங்கோரை | கோரைவகை . |
பூச்சக்கரம் | பூ மண்டலம் ; நிலநடுக்கோடு ; சக்கரவாணம் . |
பூச்சக்கரவாளக்குடை | கோயில்மூர்த்திகட்குப் பிடிக்கும் பெரிய வெண்குடை . |
பூச்சக்கரன் | அரசன் . |
பூச்சாண்டி | குழந்தைகளுக்கு அச்சமுண்டாக்கும் உருவம் . |
பூச்சாரம் | நிலவளம் ; தாதுப்பொருள் . |
பூச்சி | சிற்றுயிர் ; குடற்புழு ; குழந்தைகளை அச்சுறுத்தற்கேனும் சிரிப்பிப்பதற்கேனும் சொல்லும் சொல் . |
பூச்சிக்கடி | பூச்சியின் கடி ; பூச்சியால் உடலிற் படரும் பற்று ; புண்கட்டிவகை . |
பூச்சிகாட்டுதல் | அச்சுறுத்தல் . |
பூச்சிதம் | மதிப்பு . |
பூச்சிப்பல் | சொத்தைப் பல் . |
பூச்சிபிடித்தல் | பண்டம் புழுவுண்டாகிக் கெட்டுப்போதல் ; இச்சகமாக நடத்தல் ; வேண்டாத இடத்துக் கவனமாகச் செயல் புரிதல் . |
பூச்சிபூச்சியெனல் | அச்சுறுத்தற் குறிப்பு ; அச்சுறுதற் குறிப்பு . |
பூச்சியத்துவம் | சிறப்புத் தன்மை . |
பூச்சியம் | பகட்டு ; வழிபடத்தக்கது ; நன்கு மதிப்பு ; இன்மை ; இன்மைப்பொருள் உணர்த்தும் சுன்னம் ; திருவுளச்சீட்டு ; பயனின்மை காட்டும் வெற்றுச்சீட்டு ; நற்பேறின்மை ; அருமை ; குற்றமறைக்கை ; மதிப்பின்மை . |
பூச்சியம்பண்ணுதல் | சிறப்பித்தல் ; குற்றம் முதலியன மறைத்தல் ; பழைய வீடு முதலியவற்றைப் புதிதாகக் கட்டுதல் ; பாக்கியின்றிக் கணக்குத் தீர்த்தல் ; தகாத மதிப்பு வரும்படி நடத்தல் ; இல்லாமற் செய்தல் . |
பூச்சியவார்த்தை | கண்ணியப்பேச்சு . |
பூச்சியன் | வழிபடத்தக்கவன் ; கறுப்பும் வெள்ளையுமான வண்டிமாடு . |
பூச்சிலை | கல்வகை . |
பூச்சு | தடவுகை ; மேற்பூசுகை ; வெளிப்பகட்டு ; கஞ்சிப்பசை ; மருந்துப்பற்று ; குற்றம் முதலியன மறைக்கை ; இதமான செயல் முதலியன , |
பூச்சுவேலை | சுவர்களில் சுண்ணந்தீற்றும் வேலை ; மெருகிடும் வேலை ; வெளிப்பகட்டு . |
பூச்சூட்டு | முதற் கருவுற்ற மகளிர்க்குச் செய்யும் ஒரு சடங்கு . |
பூச்செண்டு | பூவினால் அமைந்த செண்டு . |
பூச்சேலை | பூவேலை அமைந்த புடைவை . |
பூச்சை | பூனை . |
பூச்சொக்காய் | பூவேலையுள்ள துணியில் தைத்த சட்டை . |
பூசகன் | அருச்சகன் . |
பூசங்கள் | புனர்பூச பூச நாள்கள் . |
பூசணம் | காண்க : பூஞ்சணம் ; அழுக்கு ; நேர்த்திக்கடனாக முடித்துவைக்கும் காசு முதலியன ; அணிகலன் . |
![]() |
![]() |