சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பை | ஓர் உயிர்மெய்யெழுத்து(ப்+ஐ) ; நிறம் ; அழகு ; பசுமை ; இளமை ; உடல்வலி ; துணி , தோல் முதலியவற்றால் அமைந்த கொள்கலம் ; பாம்புப்படம் ; குடல் , மூத்திரப்பை முதலிய உடல் உறுப்பு ; நாணயவகை . |
| பை | (வி) கோபி ; விரி . |
| பைக்கம் | பிச்சை . |
| பைக்கலம் | பச்சைக்குப்பி . |
| பைகிரி | நாய் . |
| பைங்கண் | குளிர்ந்த கண் ; பசிய உடம்பு ; சினத்தால் பசிய கண் : பசுமையால் உள்ள இடம் . |
| பைங்கிளி | பச்சைக்கிளி ; அழகிய இளம்பெண் . |
| பைங்குழி | கருத்தங்கும் இடம் . |
| பைங்கூழ் | இளம்பயிர் ; விளைநிலம் ; நோய் . |
| பைங்கொடி | பச்சிலைக்கொடிவகை . |
| பைசந்தி | காண்க : பைங்குழி ; வாக்கு நான்கனுள் ஒன்றாயும் நாதரூபமாயுள்ள ஒலிவடிவெழுத்து . |
| பைசல் | பையன் ; தீர்ப்பு ; வழக்கு முதலியவற்றின் தீர்மானம் ; இறப்பு . |
| பைசா | ரூபாவில் நூறில் ஒரு பகுதி ; சில்லறை . |
| பைசாசசத்துவம் | பெண்டிரது பத்துச் சத்துவங்களுள் ஒன்று . |
| பைசாசநிலை | ஒரு காலில் நின்று பிறிதொரு காலை முடக்கி நிற்றல் . |
| பைசாசம் | பேய் ; வில்லோர் நிலை நால்வகையுள் ஒருகாலை நிலையாக ஊன்றி ஒரு காலை முடக்கி நிற்கும் நிலை ; எண்வகை மணங்களுள் துயின்றாள் ; களித்தாள் ; மூத்தாள் ; இழிந்தாள் முதலிய மகளிரைச் சேரும் மணம் ; இரும்பு . |
| பைசாசி | பெண்பிசாசு ; காண்க : சடாமாஞ்சில் , பிராகிருத மொழிகளுள் ஒன்று . |
| பைசுனம் | இவறல் ; புறங்கூறுகை . |
| பைஞ்சாய் | கோரைப்புல் . |
| பைஞ்சேறு | சாணம் . |
| பைஞ்ஞிணம் | புதிய இறைச்சி . |
| பைஞ்ஞிலம் | மக்கள் தொகுதி . |
| பைஞ்ஞீல் | மக்கள் தொகுதி . |
| பைஞ்ஞீலம் | மக்கள்தொகுதி ; பசிய நிலம் ; வாழைவகை . |
| பைஞ்ஞீலி | மக்கள்தொகுதி ; பசிய நிலம் ; வாழைவகை . |
| பைத்தல் | பசுமையாதல் ; ஒளிர்தல் ; பாம்பு படம் விரித்தல் ; கோபித்தல் ; பொங்குதல் ; மிகுதல் . |
| பைத்தியக்காரன் | பித்துப்பிடித்தவன் . |
| பைத்தியம் | கிறுக்கு ; மூடத்தனம் . |
| பைத்து | பசுமை . |
| பைதல் | இளையது ; சிறுவன் ; குளிர் ; துன்பம் . |
| பைதிரம் | நாடு . |
| பைதிருகம் | தந்தைக்குரியது ; தந்தை வழியாக வந்த பொருள் ; பகல் பதினைந்து முகூர்த்தத்துள் நான்காவது . |
| பைது | பசுமை ; ஈரம் . |
| பைந்தார் | செவ்விமாலை . |
| பைந்தினை | ஒரு தினைவகை ; தினை . |
| பைந்து | பந்து . |
| பைந்தொடி | பொன்வளையல் ; பெண் . |
| பைந்நாகம் | நாகப்பாம்பு ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி . |
| பைப்பய | மெல்லமெல்ல . |
| பைபீலம் | எறும்பு . |
| பைபீலவாதம் | எறும்புகளின் பேச்சறிதல் ; அணுப்பரிணாம வாதம் . |
| பைபீலிகை | காண்க : பைபீலம் . |
| பைம்பூண் | பசுமையான பொன்னாற் செய்யப்பட்ட அணிகலன் . |
| பைம்பொன் | பசும்பொன் ; மேருமலை . |
| பைம்மறித்தல் | காண்க : பைமறி ; பையின் வாயை மூடுதல் . |
| பைம்மை | பசுமை ; அருகதவப்பெண் . |
| பைமறி | பையின் உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்புதல் . |
| பைமை | காண்க : பைம்மை . |
| பைய | மெல்ல . |
| பையப்பைய | மெல்லமெல்ல ; கொஞ்சங்கொஞ்சமாக . |
| பையம் | கூடை ; காண்க : கோரை . |
| பையர | நாகம் . |
| பையரவு | நாகம் . |
| பையல் | காண்க : பொடியன் . |
| பையன் | சிறுவன் ; மகன் . |
| பையாத்தல் | வருந்துதல் ; அச்சந்தோன்றுதல் . |
| பையாப்பு | துன்பம் . |
| பையுள் | சிறுமை ; துன்பம் ; நோய் ; மயக்கம் . |
| பையெனல் | மெதுவாதற்குறிப்பு ; ஒளி மழுங்குதற்குறிப்பு ; வருந்தற்குறிப்பு . |
| பையோடதி | பச்சைக்கொடி . |
| பையோலை | பச்சோலை . |
| பைரவம் | அச்சம் ; பயங்கரம் ; சைவசமயவகை ; செவ்வழி யாழ்த்திறங்களுள் ஒன்று . |
| பைரவர் | துர்க்கையின் படையினரான கணங்கள் . |
| பைரவன் | சிவமூர்த்தங்களுள் ஒருவரான வைரவக்கடவுள் . |
| பைரவி | துர்க்கை ; ஒரு பண்வகை . |
| பைவர் | துன்பமுடையவர் . |
| பைவருதல் | துயருறுதல் . |
|