பௌ முதல் - பௌளி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பௌ ஒர் உயிர்மெய்யெழுத்து ( ப்+ஔ) .
பௌஞ்சு சேனை .
பௌடம் தைமாதம் .
பௌடிகம் இருக்குவேதம் ; பதினெண் புராணத்துள் ஒன்று .
பௌத்தன் புத்த சமயத்தினன் ; காண்க : பௌத்தாவதாரம் .
பௌத்தாவதாரம் திருமால் பிறப்புகளுள் ஒன்று .
பௌத்திரம் தூய்மை ; மலவாய்க்கு அருகில் உண்டாகும் கட்டிவகை .
பௌத்திரன் பேரன் ; தூயன் .
பௌத்திரி மக்களின் மகள் .
பௌதிகசாத்திரம் இயற்பியல் நூல் .
பௌதிகதீட்சை சைவசமய தீட்சைகளுள் ஒன்று .
பௌதிகம் இயற்பியல் ; பூதசம்பந்தமானது ; உலகம் ; காண்க : கருநெல்லி .
பௌதிகன் சிவபிரான் .
பௌதீகம் காண்க : பௌதிகம் .
பௌமம் பூமி சம்பந்தமானது .
பௌமன் செவ்வாய் ; நரகாசுரன் .
பௌமி பூமியின் புதல்வியான சீதை .
பௌர்ணசந்திரன் வெள்ளுவா , நிறைமதி நாள் .
பௌர்ணமி வெள்ளுவா , நிறைமதி நாள் .
பௌர்ணமை வெள்ளுவா , நிறைமதி நாள் .
பௌரகம் நகர்சூழ் சோலை .
பௌரணை காண்க : பௌர்ணமி ; மரக்கன்று ; கடல் .
பௌரம் நகரசம்பந்தமானது .
பௌரன் நகர்வாழ்நன் .
பௌராணிகம் புராணத்தைப் பின்பற்றும் மதம் .
பௌராணிகமந்திரம் பிரணவம் இல்லாத மந்திரம் .
பௌராணிகன் புராணக் கொள்கையுடையவன் ; புராணஞ் சொல்பவன் .
பௌரி பெரும்பண்வகை .
பௌரிகன் குபேரன் .
பௌரோகித்தியம் புரோகிதத் தன்மை .
பௌலோமி இந்திரன் மனைவி , புலோமசை ; புலோமசை மகள் .
பௌவம் உப்பு ; கடல் ; நீர்க்குமிழி ; ஆழம் ; நுரை ; மரக்கணு ; நிறைநிலா ; பருவகாலம் .
பௌழியம் இருக்குவேதம் .
பௌழியன் பூழிநாட்டுத் தலைவனான சேர அரசன் ; இருக்குவேதக் கடவுள் .
பௌளி ஒரு பண்வகை .