சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மி | ஓர் உயிர்மெய்யெழுத்து ( ம் + இ ) . |
| மிக்க | மிகுந்த ; உயர்ந்த . |
| மிக்கசெயல் | பெருந்தன்மை ; அளவிலா ஆற்றல் . |
| மிக்கது | மிகுதியானது ; சிறந்தது ; ஒன்றின் மேம்பட்டது ; மீறிய செய்கை ; எஞ்சியது ; வேறானது ; நியாயமற்றது . |
| மிக்கபெயல் | அதிகமழை . |
| மிக்கவன் | உயர்ந்தோன் ; பெருமையிற் சிறந்தவன் . |
| மிக்கவை | மிகுதியானவை ; தீயவை ; சோறு ; ஊன் ; நிறைகை . |
| மிக்கார் | பெரியோர் ; மேம்பட்டவர் ; காண்க : மிக்கோர் ; பெரும்பாலோர் ; தீமை செய்பவர் ; பகைவர் . |
| மிக்கிளமை | குழந்தைப்பருவம் . |
| மிக்கு | காண்க : மிக . |
| மிக்கோர் | அறிவுடையோர் . |
| மிக்கோன் | பெரியோன் . |
| மிக | மிகவும் . |
| மிகல் | மிகுதல் ; பெருமை ; வெற்றி ; எழுத்து இரட்டிக்கை . |
| மிகவு | காண்க : மிகுதி . |
| மிகற்கை | எழுத்து இரட்டிக்கை . |
| மிகிரம் | காற்று ; முகில் . |
| மிகிரன் | சந்திரன் ; சூரியன் . |
| மிகு | பெரிய ; ஓர் உவமவுருபு . |
| மிகுகொடையாளன் | கொடையிற் சிறந்தவனான கன்னன் . |
| மிகுத்தல் | அதிகப்படுத்துதல் ; விஞ்சுதல் ; பெருக்குதல் ; பெருமையாகக் கருதுதல் ; மிச்சப்படுத்துதல் . |
| மிகுத்துச்சொல்லல் | விதந்துசொல்லல் ; கூறுதல் . |
| மிகுத்துதல் | மிச்சப்படுத்துதல் . |
| மிகுதம் | மிகுதி . |
| மிகுதல் | அதிகமாதல் ; பெருகுதல் ; மிஞ்சுதல் ; பொங்குதல் ; எழுத்து அதிகரித்தல் ; நெருங்குதல் ; சிறத்தல் ; ஒன்றின் மேம்படுதல் ; செருக்கடைதல் ; எஞ்சுதல் ; தீமையாதல் . |
| மிகுதி | அதிகம் ; எழுத்து இரட்டிக்கை ; நிறைவு ; திரள் ; பொலிவு ; மீதி ; சிறப்பு ; செருக்கு . |
| மிகுதிக்குறைமை | மிகுவதும் குறைவதும் . |
| மிகுதிச்சொல் | வரம்புகடந்த சொல் . |
| மிகுதியாய் | மிகவும் ; பெரும்பாலும் . |
| மிகுதியும் | மிகவும் ; பெரும்பாலும் . |
| மிகுந்த | அதிகமான ; மிச்சமான . |
| மிகுபெயல் | அதிக மழை . |
| மிகுமழை | அதிக மழை . |
| மிகை | மிகுதி ; சிறந்த பொருள் ; மேன்மை ; பெருமை ; தேவையற்றது ; வேண்டுமளவின் மிக்கதென்னுங் குற்றம் ; மிகுதிப்பொருள் ; அதிகப்படியானது ; செருக்கு ; தீச்செயல் ; தவறு ; தண்டனை ; வேதனைசெய்கை ; வருத்தம் ; துன்பம் ; கேடு . |
| மிகைசொல்லுதல் | பொய்க்குற்றஞ்சாட்டுதல் . |
| மிகைத்தல் | அதிகமாதல் ; செருக்குறுதல் . |
| மிகைபடக்கூறல் | நூற்குற்றம் பத்தனுள் வேண்டுமளவின் மிக்கதைக் கூறும் குற்றம் . |
| மிகைபடுதல் | அதிகப்படுதல் ; குற்றப்படுதல் . |
| மிகைமொழி | காண்க : உயர்வுநவிற்சியணி . |
| மிச்சம் | மீதி ; பொய் ; அதிகம் ; காண்க : மித்தியாத்துவம் . |
| மிச்சம்பிடித்தல் | செட்டாயிருந்து பொருள் சேர்த்தல் . |
| மிச்சிரம் | கலப்பு ; கலப்பானது . |
| மிச்சில் | எஞ்சிய பொருள் ; எச்சில் ; கரி . |
| மிச்சில்சீப்பவர் | எச்சிலிலை முதிலியன எடுத்துத் தூய்மை செய்வோர் . |
| மிச்சை | அறியாமை ; வறுமை ; காண்க : இலாமிச்சு(சை) ; பொய் . |
| மிசிரம் | கலப்பு ; கலப்புச்சாதி ; கலப்பானது . |
| மிசுக்கன் | ஈனன் ; வறிஞன் . |
| மிசுக்கை | புல்லியது . |
| மிசை | உணவு ; சோறு ; உயர்ச்சி ; மேலிடம் ; மேடு ; வானம் ; முன்னிடம் ; ஏழனுருபு . |
| மிசைஞர் | உண்பவர் . |
| மிசைத்திரள் | காற்கரடு . |
| மிசைதல் | உண்ணுதல் ; நுகர்தல் . |
| மிசைவடம் | வீரக்கழல் . |
| மிசைவு | உண்கை ; உணவு . |
| மிஞ்சி | காலில் அணியும் மோதிரவகை . |
| மிஞ்சிகம் | பெண்பால் மயிர்முடி . |
| மிஞ்சிகை | குண்டலம் ; பேழை . |
| மிஞ்சிப்போதல் | கைகடந்துபோதல் ; அளவுக்கு மீறுதல் . |
| மிஞ்சினவன் | அடங்காதவன் ; மேற்பட்டவன் . |
| மிஞ்சு | மிகுவது ; வண்டு . |
| மிஞ்சுதல் | வரம்புமீறுதல் ; மிகுதியாதல் ; செருக்குதல் . |
| மிஞிறு | வண்டு ; தேனீ . |
| மிட்டாய் | இனிப்புவகை . |
| மிட்டாய்க்காரன் | மிட்டாய் விற்பவன் . |
| மிடல் | காண்க : மிடன் . |
| மிடறு | கழுத்து ; ஒலியெழும் கண்ட உறுப்பு ; ஒரு வாய் கொண்ட நீர்ப்பொருள் ; கீழ்வாய் ; தொண்டை ; இன்குரற் கருவியாகிய கண்டம் . |
| மிடன் | வலிமை ; மகன் ; சந்திரன் . |
| மிடா | தடா ; பானை ; குழிசி . |
| மிடி | வறுமை ; துன்பம் . |
| மிடித்தல் | வறுமையுறுதல் ; குறைவுறுதல் . |
| மிடிமை | காண்க : மிடி . |
| மிடியன் | வறியவன் . |
| மிடிவு | காண்க : மிடி . |
| மிடுக்கன் | வலிமையுள்ளவன் ; முருடன் ; இறுமாப்புடையவன் ; முருட்டுத்தனம் . |
| மிடுக்கு | வலிமை ; செருக்கு . |
|
|