மீ முதல் - மீளுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மீ ஒர் உயிர்மெய்யெழுத்து ( ம் + ஈ ) ; மேலிடம் ; உயரம் ; வானம் ; மேன்மை .
மீக்கட்டணம் மேல்கட்டணம் ; மேல்வரி .
மீக்குணம் பெருமிதமாய் நடக்குந்தன்மை .
மீக்குவம் மருதமரம் .
மீக்கூர்தல் மிகுதல் .
மீக்கூற்றம் புகழ் ; மேலாக மதிக்கப்படுஞ் சொல் .
மீக்கூற்று புகழ் ; மேலாக மதிக்கப்படுஞ் சொல் .
மீக்கூறல் மேம்பாடு ; மிகுத்துக்கூறல் .
மீக்கூறு புகழ் .
மீக்கூறுதல் உயர்த்திக் கூறுதல் .
மீக்கொள்ளுதல் உயர்தல் ; மிகுதல் ; மேலாக மதித்தல் ; மிகுதியாகக் கொள்ளுதல் ; மேலே தரித்தல் .
மீக்கோள் ஏறுதல் ; மேல்தாங்குகை ; பொலிவு ; மேற்பார்வை .
மீகண் கண்ணின் மேலிடம் ; மேலிடம் .
மீகாமன் காண்க : மீகான் .
மீகாரம் மாளிகையின் மேலிடம் .
மீகான் மாலுமி .
மீகை மேலெடுத்த கை ; கொடிவகை .
மீச்செலவு நீதி தவறிய செயல் ; மேற்போதல் .
மீசரம் மேலானது ; விரைவு ; மிகுதி .
மீசரன் மேலானவன் .
மீசு காண்க : மீது ; மிகுதி .
மீசுமீட்டல் மேலாக எடுக்கை .
மீசுரம் காண்க : மீசரம் ; மிகக் கடுமையானது .
மீசுவைத்தல் மேலே வைக்கை .
மீசை உதட்டின்மேலுள்ள மயிர் ; மேலிடம் .
மீட்சி திரும்புகை ; விடுதலைசெய்கை ; எஞ்சுவதைக் கொள்ளுகையாகிய பிரமாணம் ; கைம்மாறு .
மீட்டு காண்க : மீண்டு , மீண்டும் .
மீட்டும் காண்க : மீண்டு , மீண்டும் .
மீட்டுதல் மீளச்செய்தல் ; யாழ் முதலியவற்றின் நரம்பைத் தெறித்தல் ; ஒற்றி முதலியவற்றைத் திருப்புதல் ; காப்பாற்றுதல் ; அள்ளுதல் ; நாணேற்றுதல் .
மீட்டெடுத்தல் காப்பாற்றுதல் ; மேலாக எடுத்தல் ; இரையெடுத்தல் .
மீட்பர் காப்பாற்றுவோர் .
மீட்பு மீட்கை .
மீடம் சிறுநீர் .
மீண்டு திரும்ப .
மீண்டும் திரும்ப .
மீத்துவைத்தல் மிச்சப்படுத்துதல் .
மீத்தோல் மேல்தோல் .
மீதாட்சி நிலம் முதலியவற்றில் மேலாணை .
மீதாடுதல் கடந்துசெல்லுதல் .
மீதாரி மிச்சம் ; ஒரு கலப்புவகை ; நறுமணப்புகை .
மீதி மிச்சம் ; காட்டுக்கத்தரி ; எட்டிமரம் .
மீதிடல் வளர்தல் .
மீது மேற்புறம் ; மேடு ; மேல் ; அதிகம் .
மீதுரை பலகால் கூறுதல் .
மீதூர்தல் மேன்மேல் வருதல் ; அடர்தல் ; அடர்த்தல் .
மீதோல் காண்க : மீத்தோல் .
மீந்தது மிச்சம் .
மீந்தோல் காண்க : மீத்தோல் .
மீநீர் நீரின் மேற்பரப்பு .
மீப்பு மிகுதி ; மேன்மை .
மீப்போர்த்தல் மேலே போர்த்தல் .
மீப்போர்வை மேற்போர்வை .
மீமாங்கிசன் பூர்வ மீமாஞ்சையில் வல்லவன் .
மீமாஞ்சகன் பூர்வ மீமாஞ்சையில் வல்லவன் .
மீமாஞ்சை வேதப்பொருள் அறிவிக்கும் நூல் ; பூர்வமீமாஞ்சை .
மீமிசை மிக்கது ; காண்க : மீமிசைச்சொல் ; மேலிடத்தில் .
மீமிசைச்சொல் சிறப்புப் பொருளைத் தெரிவித்தற்கு முன்னுள்ள சொல்லின் பொருளிலேயே அடுத்துவரும் சொல் .
மீமிசையண்டம் வீடுபேறு .
மீயடுப்பு புடையடுப்பு .
மீயாட்சி காண்க : மீதாட்சி .
மீயாளுதல் மேலதிகாரஞ் செய்தல் .
மீயான் காண்க : மீகான் .
மீயை செங்குடை .
மீரம் கடல் .
மீலம் வானம் .
மீலனம் கண்சிமிட்டு .
மீவான் காண்க : மீகான் .
மீள மறுபடியும் .
மீளவும் மறுபடியும் .
மீளாக்கதி வீடுபேறு ; திரும்பிவாராநெறி .
மீளாக்காட்சி வீடுபேறு ; திரும்பிவாராநெறி .
மீளாவழி வீடுபேறு ; திரும்பிவாராநெறி .
மீளி மீளுகை ; இரங்கல் ; தலைவன் ; பாலைநிலத் தலைவன் ; படைத்தலைவன் ; இறை ; வலியவன் ; பெருமையிற் சிறந்தோன் ; வலிமை ; வீரம் ; பெருமை ; தலைமை ; கூற்றுவன் ; பேய் ; இளைஞன் ; ஏழு அகவைக்கு மேல் பத்து அகவை முடியுமளவுள்ள பருவம் .
மீளிமை வீரம் ; வலிமை .
மீளுதல் திரும்புதல் ; இல்லையாதல் ; காப்பாற்றப்படுதல் ; கடத்தல் .