சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மு | ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+உ) . |
முக்கட்செல்வன் | மூன்று கண்களையுடைய கடவுளாகிய சிவபிரான் . |
முக்கட்டு | காண்க : முச்சந்தி ; விரலின் பொருத்து ; துன்பநிலை . |
முக்கட்பகவன் | காண்க : முக்கட்செல்வன் . |
முக்கடுகம் | சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் மூன்று மருந்துச்சரக்கு . |
முக்கடுகு | சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் மூன்று மருந்துச்சரக்கு . |
முக்கண்டகம் | காண்க : நெருஞ்சி . |
முக்கண்டகி | காண்க : நெருஞ்சி . |
முக்கண்ணப்பன் | காண்க : முக்கட்செல்வன் . |
முக்கண்ணன் | சிவன் ; விநாயகன் ; வீரபத்திரன் . |
முக்கண்ணி | பார்வதி ; காளி ; தேங்காய் . |
முக்கணன் | காண்க : முக்கண்ணன் . |
முக்கப்பு | சூலப்படை . |
முக்கம் | பல்லி செய்யும் ஒலி ; நாவாற் கொட்டும் ஒலி . |
முக்கரணம் | மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்கள் ; பிடிவாதம் ; குட்டிக்கரணம் . |
முக்கரணம்போடுதல் | குட்டிக்கரணம் போடுதல் ; பிடிவாதங்காட்டுதல் . |
முக்கரம் | பிடிவாதம் . |
முக்கல் | மூச்சை இறுகப்பிடித்து மெல்ல வெளிவிடுதல் ; பேசலால் எழும் ஒலி ; பெருமுயற்சி ; எடுத்தலோசை ; தீநாற்றம் . |
முக்கனி | மா , பலா , வாழை என்னும் மூவகைப் பழங்கள் . |
முக்காட்டங்கி | மகளிருடைய தலைமறைவுச் சீலை . |
முக்காட்டுக்கூறை | மணப்பெண்ணுக்குப் பெற்றோர் உதவும் தலைமறைவுச் சீலை ; ஒருத்தி கைம்பெண்ணாகும் போது அவளது பெற்றோர் கொடுக்கும் சீலை . |
முக்காட்டுச்சீலை | காண்க : முக்காட்டங்கி . |
முக்காடு | தலைமறைவுச் சீலை . |
முக்காணி | எண்பதில் மூன்று பங்குடைய ஒரு பின்னவெண் ; மாட்டின் கழுத்திலிடும் முக்கோணத் தளை ; முன்குடுமி தரிக்கும் பார்ப்பனர் ; மூன்று காணியாகிய அளவு . |
முக்காரம் | எருதின் முழக்கம் ; மரக்கட்டை ; பிடிவாதம் ; தாழ்ப்பாள் . |
முக்காரமிடுதல் | துளை முதலியன அடைத்தல் ; எருது போர்விளைக்கும் ஒலி ; தாழ்ப்பாள் . |
முக்கால் | மூன்றாம் முறை ; மூன்றுமுறை ; நான்கில் மூன்று பங்குடைய பின்னவெண் ; ஒரு சந்தவகை ; காண்க : முக்காலம் . |
முக்காலம் | இறந்தகாலம் ; நிகழ்காலம் ; எதிர்காலம் என்னும் மூன்று காலங்கள் ; காலை , மாலை , உச்சி என்னும் ஒரு நாளின் மூன்றுவேளை . |
முக்காலமறிந்தவன் | காண்க : தீர்க்கதரிசி . |
முக்காலி | மூன்றுகால் பீடம் . |
முக்காழ் | மூன்று கோவையாலான முத்துவடம் . |
முக்காழி | மூன்று கொட்டையுள்ள பனம்பழம் முதலியன . |
முக்கிமுனங்குதல் | மனமின்மை காட்டி முணுமுணுத்தல் ; மிகத் துன்புறுதல் . |
முக்கியப்பொருள் | இலக்கணையாகவன்றிச் சொல்லின்படி நேராகக் கொள்ளும் பொருள் . |
முக்கியம் | இன்றியமையாதது ; சிறப்பானது ; தலைமை . |
முக்கியன் | தலைவன் . |
முக்கு | மூச்சுத்திணறுகை ; நோய்வகை ; மூலை ; சந்து ; பெருமுயற்சி ; மூச்சை இறுகப்பிடித்து மெல்ல விடுதல் . |
முக்குடுமி | சூலம் ; குடுமிவகை . |
முக்குடை | அருகனுக்குரியதும் சந்திராதித்தம் , சகலபாசனம் , நித்தியவிநோதம் என மூன்று அடுக்குள்ளதுமான குடை . |
முக்குடைக்கல் | சமண அறக்கட்டளைக்கு விடப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் முக்குடை வடிவு செதுக்கப்பட்டக் கல் . |
முக்குடைச்செல்வன் | முக்குடை உடைய அருகன் . |
முக்குடையான் | முக்குடை உடைய அருகன் . |
முக்குடையோன் | முக்குடை உடைய அருகன் . |
முக்குணம் | சாத்துவிகம் , இராசதம் , தாமதம் என்னும் மூன்று குணங்கள் . |
முக்குணுக்கிடுதல் | மூன்று வளைவு உண்டாகும்படி செய்தல் . |
முக்குதல் | மூச்சை இறுகப்பிடித்து மெல்ல வெளிவிடுதல் ; பெருமுயற்சி செய்தல் ; நிரம்பவுண்ணுதல் ; மூழ்குதல் ; மூழ்குவித்தல் . |
முக்குலம் | அக்கினிமரபு , சந்திரமரபு , சூரியமரபு என்னும் மூன்று அரசர் குலம் . |
முக்குழி | மூன்று வேதாக்கினிகளை வளர்க்குங்குழிகள் . |
முக்குழிச்சட்டி | பணியாரம் சுடும் மூன்று குழியுள்ள சட்டிவகை . |
முக்குளம் | கங்கை , சரசுவதி , யமுனை என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம் ; பூராடநாள் . |
முக்குளி | காண்க : கோழிமுளையான் . |
முக்குளித்தல் | முழுகுதல் . |
முக்குற்றங்கடிந்தோன் | முக்குற்றத்தையும் ஒழித்தவனான புத்தன் . |
முக்குற்றம் | காமம் , வெகுளி , மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள் . |
முக்குறும்பு | காமம் , வெகுளி , மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள் . |
முக்கூட்டரத்தம் | வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புகளை மெல்லுதலால் உண்டாகும் செந்நிறம் . |
முக்கூட்டு | மூன்று சரக்குகளாகிய மருந்து ; பசுவின்நெய் ; விளக்கெண்ணெய் , நல்லெண்ணெய் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்தெண்ணெய் ; மூன்று கட்டிகளைக் கூட்டியமைத்த அடுப்பு ; மூன்று வழிகள் சேருமிடம் ; பரணிநாள் . |
முக்கூடல் | மூன்று ஆறுகள் கூடும் புண்ணியத்துறை ; ஓர் ஊர் . |
முக்கைப்புனல் | மூன்றுமுறை குடங்கையால் நீர் முகந்து தென்புலத்தார்க்குச் செய்யும் நீர்க்கடன் . |
முக்கோட்டை | தன்னை வழிபட்டோர்க்குப் பாடுமாற்றலை அளிக்கும் கொற்றவை கோயில் . |
முக்கோண் | மூன்று நிலை ; மூன்று கோணங்களை உடைய வடிவம் ; நரகவகை . |
முக்கோணம் | மூன்று நிலை ; மூன்று கோணங்களை உடைய வடிவம் ; நரகவகை . |
முக்கோல் | தவசிகளுக்குரிய திரிதண்டம் ; திருவோணநாள் . |
முக்கோற்பகவர் | திரிதண்டந் தாங்கிய துறவியர் . |
முக்தகஞ்சுகம் | தோலுரித்த பாம்பு . |
முக்தாபலம் | கருப்பூரம் ; முத்து . |
முக்தி | காண்க : முத்தி . |
முகக்கட்டை | மோவாய்க்கட்டை . |
முகக்கடுப்பு | முகத்தில் காணும் கடுமைக்குறி . |
முகக்கயில் | உடைந்த தேங்காயின் கண்ணுள்ளதாகிய மேல்மூடி . |
முகக்கருவி | கடிவாளம் . |
முகக்களை | முகத்தினழகு . |
முகக்கிளர்ச்சி | முகமலர்வு . |
முகக்குறி | முகத்தில் தோன்றும் குறிப்பு . |
முகக்கொள்ளி | கொள்ளிவாய்ப் பிசாசு . |
![]() |
![]() |