மெ முதல் - மெய்ம்மறதி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மெ ஒர் உயிர்மெய்யெழுத்து (ம் +எ) .
மெச்சு உவப்பு .
மெச்சுதல் புகழ்தல் ; மதித்தல் ; வியத்தல் .
மெட்டி காண்க : மிஞ்சி .
மெட்டு மேடு ; வெட்டும் பள்ளத்தின் நடுவில் வெட்டளவின் உயரத்தைக்காட்ட விடும் மண்திட்டு ; பிடிலில் வைக்கும் மிதப்புக்கட்டை ; ஊர்சூழ் காடு ; காண்க : மெட்டி ; ஆயத்துறை ; தடை ; சிறப்பு ; நாகரிகப்பாங்கு ; பாட்டின் இராகப்போக்கு .
மெட்டுக்காரன் சுங்கம் வசூலிப்பவன் .
மெட்டுதல் காலால் தாக்குதல் .
மெத்த மிகவும் .
மெத்தனவு கவலையின்மை ; காண்க : மெத்தெனவு .
மெத்து மென்மை .
மெத்துதல் மிகுதல் ; நிரம்புதல் ; நிரப்புதல் ; அப்புதல் .
மெத்தெனல் மென்மைக்குறிப்பு ; அமைதிக்குறிப்பு ; காலத்தாழ்ச்சிக்குறிப்பு ; மந்தக்குறிப்பு .
மெத்தெனவு சாந்தகுணம் ; வளைந்து கொடுக்குந் தன்மை .
மெத்தை படுக்கை ; பஞ்சணை ; துயிலிடம் ; சட்டை ; வேட்டையாடும்போது தோளிலிடும் கருவி ; மாடிவீடு ; ஒரு பூண்டுவகை .
மெத்தைப்பாய் ஒரு பாய்வகை ; மெத்தைமேல் விரிக்கும் பாய் .
மெத்தைவீடு மாடிவீடு ; மேனிலைமாடம் ; மொட்டைமாடிவீடு .
மெது மிருது ; அமைதி ; தாமதம் ; மந்தம் ; கூர்மழுக்கம் .
மெதுக்கு கிச்சிலிவகையான பம்பளிமாசு ; சோறு .
மெதுமெதுத்தல் மென்மையாயிருத்தல் .
மெதுமெதுப்பு மென்மையாயிருத்தல் .
மெந்திரி பரண்கட்டு .
மெய் உண்மை ; உடல் ; உயிர் ; உணர்ச்சி ; மார்பு ; ஒற்றெழுத்து .
மெய்க்கலவை உடம்பில் பூசுங் கலவைச் சாந்து .
மெய்க்கவசம் காண்க : மெய்யுறை .
மெய்க்காட்டு படையைப் பார்வையிடுகை ; நேரில்வந்து தோற்றுகை ; காண்க : மெய்க்காட்டுவேலை .
மெய்க்காட்டுதல் நேரில்வந்து தோற்றுதல் .
மெய்க்காட்டுவேலை குத்தகைக்கு விடாமல் நேரில் நடத்தும் வேலை .
மெய்க்காவல் காண்க : மெய்காவலன் .
மெய்க்கீர்த்தி புகழ் ; பாடல்வகை .
மெய்க்குற்றம் கொட்டாவி , நெட்டை , குறுகுறுப்பு , கூன்கிடை , நட்டுவிழல் என்பனவாகிய உடலில் உண்டாகும் ஐந்துவகைக் குற்றங்கள் ; நிலைநின்ற குறை .
மெய்க்கூத்து தேசி , வடுகு , சிங்களம் என்னும் முப்பாற்பகுதியையுடைய அபிநயக்கூத்து .
மெய்க்கொள்ளுதல் உண்மையாகக்கொள்ளுதல் .
மெய்க்கோள் உண்மையாகக் கொள்ளுகை ; அச்சாரம் .
மெய்கண்டசந்தானம் மெய்கண்டதேவருடைய சித்தாந்ததைப் பின்பற்றுவோர் .
மெய்காணுதல் உண்மையை ஆராய்ந்தறிதல் .
மெய்காவல் ஒருவனைப் பாதுகாக்கை ; சிறை .
மெய்காவலன் பிறனுக்குக் கேடு நேராமாற்காப்பவன் .
மெய்கூறல் உண்மை பேசல் .
மெய்ச்சுதல் காண்க : மெச்சுதல் .
மெய்சிலிர்த்தல் மயிர்க்குச்செறிதல் .
மெய்ஞ்ஞானம் உண்மையறிவு .
மெய்ஞ்ஞானி தத்துவஞானி .
மெய்த்தகை புனையாத இயற்கையழகு ; உண்மைக் கற்பு .
மெய்த்தல் உண்மையாதல் .
மெய்த்திறம் சமய உண்மையை உணர்த்தும் நூல் .
மெய்தீண்டுதல் அன்போடு ஒருவன் உடலைத் தொடுதல் ; ஒருத்தியின் கற்பைக் கெடுத்தல் .
மெய்தீய்தல் சத்தியந் தவறுதல் .
மெய்தொட்டுப்பயிறல் தலைவியின் மனக்குறிப்பை அறிதற்பொருட்டு அவளைத் தொட்டுப் பழகுவதைக் கூறும் அகத்துறை .
மெய்ந்நலம் வலிமை ; உடம்பின் அழகு .
மெய்ந்நவை காண்க : மெய்க்குற்றம் .
மெய்ந்நிலை உண்மைத்தன்மை ; அபிநயவகை .
மெய்ந்நிலைமயக்கம் சொற்களில் ஒற்றெழுத்து இயைந்து வருகை .
மெய்ந்நீர்மை உண்மை ; வீடுபேறு .
மெய்ந்நூல் உண்மை உணர்த்தும் நூல் .
மெய்ப்படாம் உடலை மூடும் போர்வை .
மெய்ப்படுதல் உண்மையாதல் ; ஆவேசிக்கப் பெறுதல் .
மெய்ப்பரிசம் தொட்டுணரும் உணர்வு ; ஊன்றல் ; கட்டல் , குத்தல் , தடவல் , தட்டல் , தீண்டல் , பற்றல் , வெட்டல் , என்னும் எண்வகைப்பட்ட உடலுணர்ச்சிக் காரணங்கள் .
மெய்ப்பாட்டிசைக்குறி வியப்பைக் குறிக்கச் சொல்லின்பின் இடும் அடையாளம் .
மெய்ப்பாட்டியற்கை சமணப் பரமாகமம் .
மெய்ப்பாடு உள்ளத்தின் நிகழ்ச்சி புறத்தார்க்கு வெளிப்படுதல் ; புகழ் ; இயற்கைக்குணம் .
மெய்ப்பித்தல் உண்மையை நிறுவுதல் ; நிரூபித்தல் .
மெய்ப்பிரம் மேகம் .
மெய்ப்பு நிரூபணம் ; பகட்டு ; புகழ்ச்சி .
மெய்ப்பூச்சு உடலின்மேற் பூசும் கலவைச்சாந்து .
மெய்ப்பை சட்டை .
மெய்ப்பொருள் உண்மையான செல்வம் ; உண்மை ; கடவுள் ; நாயனார் அறுபத்து மூவருள் ஒருவர் .
மெய்ப்பொறி உடல் உறுப்பிலக்கணம் ; உடல் .
மெய்படுபருவம் பாளை , பாலன் , காளை , இளையோன் , முதியோன் என்னும் ஐவகை ஆண்மக்கட் பருவம் .
மெய்புகுகருவி காப்புச்சட்டை .
மெய்புதையரணம் காப்புச்சட்டை .
மெய்பெறுதல் எழுத்துகள் திருந்திய ஒலிவடிவு பெறுதல் .
மெய்ம்மயக்கம் காண்க : மெய்ந்நிலைமயக்கம் .
மெய்ம்மயக்கு காண்க : மெய்ந்நிலைமயக்கம் .
மெய்ம்மறத்தல் அறிவுநீங்குதல் ; தன்னை மறத்தல் .
மெய்ம்மறதி அறிவுநீங்குகை ; தன்னை மறத்தல் ; கோபவெறி ; வெறி .