சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மௌ | ஒர் உயிர்மெய்யெழுத்து (ம் +ஔ) . |
மௌகலி | காகம் . |
மௌகுலி | காகம் . |
மௌசலம் | தண்டாயுதத்தால் செய்யும் போர் . |
மௌசு | மிகுவிருப்பம் ; கவர்ச்சி ; பகட்டு . |
மௌஞ்சி | ஒரு நாணல்வகை ; நாணற்புல்லாற் செய்த அரைஞாண் . |
மௌட்டியம் | அறியாமை . |
மௌண்டிதன் | தலைமழிக்கப் பெற்றவன் . |
மௌத்திகம் | முத்து . |
மௌர்வி | வில்லின் நாண் . |
மௌரவி | வில்லின் நாண் . |
மௌலி | காண்க : மோலி ; தலை ; தார் ; கோபுர உச்சி ; கள் . |
மௌவல் | முல்லை ; காட்டுமல்லிகை ; தாமரை . |
மௌவை | தாய் . |
மௌனசாமியார் | பேசாநோன்பு பூண்ட பெரியோர் . |
மௌனம் | பேசாமை . |
மௌனமந்திரம் | மனத்துள் செபிக்கும் மந்திரவகை . |
மௌனவிரதம் | பேசாநோன்பு . |
மௌனி | காண்க : மோனி ; ஆமை . |
![]() |