சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ய | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய் + அ) . |
யக்கதரு | ஆலமரம் . |
யக்கராசன் | இயக்கர்களுக்கு அரசனான குபேரன் . |
யக்கியபுருடன் | திருமால் . |
யக்கியம் | வேள்வி ; துவாபரயுகம் . |
யக்கியாரி | தக்கன் யாகத்தை அழித்த சிவபிரான் . |
யசசு | புகழ் . |
யசனம் | வேள்விசெய்கை . |
யசுர் | இரண்டாம் வேதம் . |
யசோதை | கண்ணனை வளர்த்த தாய் . |
யஞ்ஞம் | வேள்வி . |
யஞ்ஞமூர்த்தி | திருமால் ; அக்கினிதேவன் . |
யஞ்ஞவராகம் | திருமாலின் பன்றிப்பிறப்பு . |
யஞ்ஞன் | தீக்கடவுள் . |
யட்சம் | நாய் ; மந்திரம் . |
யட்சிணி | இயக்கி ; குபேரன் மனைவி ; துர்க்கைக்குப் பணிசெய்யும் பெண்தேவதை . |
யட்டி | அதிமதுரம் ; தண்டாயுதம் ; ஊன்றுகோல் ; முத்துமாலை . |
யதார்த்தவாதி | உண்மைபேசுவோன் . |
யதி | துறவி ; சீரோசை முடியுமிடம் ; தாளப்பிரமாணம் பத்தனுள் அங்கம் பலவற்றை ஒழுங்குசெய்வது ; அடக்கம் ; இளைப்பாற்றி ; ஒன்றிப்பு ; மோனை ; கைம்பெண் . |
யதிவழு | ஓசையறும்வழி நெறிப்பட வாராமல் நிற்பது . |
யதேச்சாதிகாரம் | விருப்பப்படி ஆணை செலுத்துகை . |
யதேச்சை | மிகுதியாய் ; விருப்பின்படி . |
யதேச்சையாய் | மிகுதியாய் ; விருப்பின்படி . |
யதேந்திரியம் | கற்புடைமை . |
யந்திரு | ஆளுவோன் ; குதிரைப்பாகன் ; தேர்ப்பாகன் . |
யமகண்டம் | ஒருவன் வாழ்நாளில் உயிருக்கு அபாயமான காலம் ; யமனுக்குரிய மூன்றே முக்கால் நாழிகைப் பொழுது . |
யமகண்டம்பாடுதல் | உயிருக்குக் கேடுபயக்கும் விதிமுறைக்குட்பட்டுப் பாப்புனைதல் . |
யமகண்டன் | வலியோன் ; ஒரு காணாக் கோள் ; யமனுக்குரிய மூன்றே முக்கால் நாழிகைப் பொழுது . |
யமகண்டி | பொல்லாதவள் . |
யமகம் | ஓர் அடியின் முதலில் வந்த சொற்களே மற்ற அடிகளின் முதலிலும் வரும் செய்யுள் அணி . |
யமகிங்கரன் | யமனது ஏவலன் . |
யமப்பிரியம் | ஆலமரம் ; அத்திமரம் . |
யமபடன் | யமனது வேலையாள் . |
யமம் | காண்க : இயமம் ; தவம் ; காக்கை ; சனி ; அறநூல் பதினெட்டனுள் ஒன்று ; திருவிழா . |
யமரதம் | காண்க : யமவாகனம் . |
யமலோகம் | யமனுடைய உலகம் ; நரகம் . |
யமவாகனம் | யமனது ஊர்தியாகிய எருமைக் கடா . |
யமவிரதம் | இயமத்தைக் கடைப்பிடித்தல் ; ஒரு சார்பின்றி அரசுமுறை நடத்தல் . |
யமளம் | இரட்டை . |
யமன் | தென்திசைக்குரிய கடவுள் ; பாம்பின் நச்சுப்பல் . |
யமாந்தகன் | யமனுக்குப் பகைவனான சிவபிரான் . |
யமாரி | யமனுக்குப் பகைவனான சிவபிரான் . |
யமி | முனிவன் ; யமுனையாறு . |
யமுனாசனகன் | யமுனையின் தந்தையான சூரியன் . |
யமுனை | ஓர் ஆறு . |
யமுனைத்துறைவன் | கண்ணபிரான் ; இராமானுசருக்கு ஆசிரியராகிய ஆளவந்தார் . |
யயு | அசுவமேதக் குதிரை . |
யவசி | கழுதைப்பாலை . |
யவபலம் | மூங்கில் . |
யவம் | நெல் ; வாற்கோதுமை . |
யவன் | எவன் . |
யவனத்தச்சர் | யவனநாட்டுத் தச்சர் . |
யவனப்பிரியம் | மிளகு . |
யவனப்பேழை | யவனநாட்டு வேலைப்பாடமைந்த பெட்டி . |
யவனம் | ஒரு நாடு ; விரைவு ; வரிப்பணம் . |
யவனர் | யவனநாட்டார் ; கண்ணாளர் ; சித்திரகாரர் ; தோற்கருவி வாசிப்பவர் . |
யவனாள் | யுவதி . |
யவனிகை | இடுதிரை . |
யவாகு | கஞ்சி . |
யவை | வாற்கோதுமை ; நீட்டலளவை ; துவரை ; நெல்வகை . |
![]() |