சொல்
|
அருஞ்சொற்பொருள் |
யு | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+உ) . |
யுக்தி | கூரிய அறிவு ; பொருத்தம் ; அனுமானம் ; நியாயம் ; சூழ்ச்சி ; ஆராய்வு ; வழிவகை ; அறிவுக்கூர்மை ; புத்திமதி . |
யுகதருமம் | யுகபேதத்தினா லுண்டாகும் நடைமுறை . |
யுகந்தரம் | ஏர்க்கால் ; ஒரு நாடு . |
யுகப்பிரளயம் | நான்கு யுகத்தின் முடிவில் நிகழும் அழிவு . |
யுகம் | கிருதயுகம் , திரேதாயுகம் , துவாபரயுகம் , கலியுகம் என்று நால்வகைப்பட்ட யுகங்கள் ; இரட்டை ; நுகத்தடி ; நாலுமுழங்கொண்ட அளவு ; பூமி . |
யுகளம் | இரட்டை . |
யுகளி | இரட்டை . |
யுகாதி | அருகன் ; கடவுள் ; தெலுங்கர் , கன்னடர் முதலியோரின் ஆண்டுப்பிறப்பு ; யுகத்தின் தொடக்கம் . |
யுகாந்தம் | யுகமுடிவு ; உலக முடிவுகாலம் . |
யுஞ்சானம் | உடற்பயிற்சி செய்வோன் . |
யுத்தகளம் | போர்க்களம் . |
யுத்தசன்னத்தன் | போருக்கு ஆயத்தமானவன் . |
யுத்தம் | போர் ; பொருத்தமானது ; நான்குமுழங்கொண்டது . |
யுத்தமுகம் | போர்முனை . |
யுத்தாயுத்தம் | தக்கதும் தகாததும் . |
யுத்தி | காண்க : யுக்தி . |
யுவ | அறுபதாண்டுக் கணக்கில் ஒன்பதாம் ஆண்டு . |
யுவதி | பதினாறு வயதுடைய பெண் ; இளம் பெண் . |
யுவராசன் | இளவரசன் . |
யுவன் | இளைஞன் . |
![]() |