யூ முதல் - யூபம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
யூ ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஊ) .
யூகசாலி புத்திக்கூர்மையுள்ளவன் .
யூகம் எதிர்பார்ப்பு ; அறிவுக்கூர்மை ; கருத்து ; காந்தி ; வாதம் ; படையின் முன்னணிவகுப்பு ; படை ; உடற்குறை ; கோட்டான் ; கருங்குரங்கு ; பெண்குரங்கு ; பேன் .
யூகவான் காண்க : யூகசாலி .
யூகி காண்க : யூகசாலி .
யூகித்தல் எதிர்பார்த்தல் ; அனுமானித்தல் ; ஆராய்தல் .
யூகை கல்வி ; அறிவாளி ; மூலத்திலிருந்து உரைகாரர் அனுமானிக்குங் கருத்து ; அறிவுக்கூர்மை ; பேன் .
யூதநாதன் காண்க : யூதபம் .
யூதநாயகன் படைத்தலைவன் .
யூதபதி காண்க : யூதபம் .
யூதபம் யானைக்கூட்டத்துக்குத் தலைமை யானை .
யூதம் யானைக்கூட்டம் ; பெரும்படை .
யூதிகை முல்லை .
யூபத்தம்பம் வேள்வித்தூண் .
யூபம் காண்க : யூபத்தம்பம் ; வேள்வி ; படையின் அணிவகுப்பு ; உடற்குறை .