யௌ முதல் - யௌவனிகை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
யௌ ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஔ) .
யௌகிகம் பகுபதம் .
யௌதகம் மகளுக்குத் தருஞ் சீர்ப்பொருள் .
யௌதம் பெண்கள் கூட்டம் ; ஒரு நீட்டலளவு .
யௌவனகண்டகம் முகப்பரு .
யௌவனதசை இளம்பருவம் .
யௌவனம் இளமை ; அழகு ; களிப்பு ; மகளிர் கூட்டம் .
யௌவனலட்சணம் அழகு ; கொங்கை .
யௌவனிகை பதினாறு வயது தொடங்கி ஐம்பது வயதுக்குட்பட்ட பெண் .