முதல் - வகையுளி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்+அ) ; கால் என்னும் பின்னவெண்ணின் குறி ; பலவின்பால் விகுதியுள் ஒன்று .
வக்கணித்தல் விவரித்துரைத்தல் ; மனம் கோணியிருத்தல் .
வக்கணை கடிதம் முதலியவற்றின் முகப்புரை ; போற்றுரை ; வருணனை ; பட்டப்பெயர் ; நாகரிகம் ; ஒழுங்கு ; நிந்தை ; திறமையான பேச்சு .
வக்கரன் காண்க : வக்கிரன் .
வக்கரனை எல்லாப் பண்புகளும் குழலின் ஆறு துளைகளாலேயே உண்டாகும்படி விரல்களால் சமன்செய்து ஆராய்கை .
வக்கரித்தல் காண்க : வக்கிரித்தல் .
வக்கரை வரிந்துகட்டும் முகட்டுக்கட்டை ; அங்கவடி ; பற்கறை .
வக்கா கொக்குவகை ; சிப்பிவகை .
வக்காணம் ஆலாபனம் .
வக்காணிக்குமண்டபம் சாத்திர சம்பந்தமாக வாதம் நிகழுமிடம் .
வக்காணித்தல் விரித்துரைத்தல் ; வாதஞ் செய்தல் .
வக்காலத்து வழக்கு முதலியன நடத்துவதற்கு வழக்கறிஞருக்குக் கொடுக்கும் அதிகாரப்பத்திரம் .
வக்கிரக்கண் மாறுகண் .
வக்கிரக்கிரீவம் வளைந்த கழுத்துடைய ஒட்டகம் .
வக்கிரகம் மழையால் உண்டாகும் தடை .
வக்கிரசந்திரன் இளம்பிறை .
வக்கிரதந்தம் வளைந்த பல் .
வக்கிரதுண்டன் விநாயகன் .
வக்கிரநாசிகம் வளைந்த அலகுடைய கிளி : ஆந்தை .
வக்கிரம் வளைவு ; வட்டம் ; சென்றவழியே மீளுகை ; நேர்மையற்ற செலவு ; கொடுமை ; பொய் ; பொறாமை ; கோளின் பிற்போக்கான நடை ; வஞ்சனை ; கலக்கம் ; கோணல்வழி .
வக்கிரவுத்தி சொன்ன சொற்களுக்கு வெவ்வேறு பொருள்கொண்டு மறுமொழி யுரைப்பதாகிய அணி .
வக்கிரன் மாறுபாடுள்ளவன் ; குரூரன் ; சனி ; செவ்வாய் ; உருத்திரன் தந்தவக்கிரன் ; ஓர் அசுரன் .
வக்கிராங்கம் வளைந்த வடிவுடைய அன்னப் பறவை .
வக்கிராங்கி காண்க : கடுகுரோகிணி .
வக்கிரித்தல் கோள் மடங்கித் திரும்புதல் ; கோணியிருத்தல் ; மனங்கோணியிருத்தல் ; ஆலாபனஞ்செய்தல் .
வக்கு வேகுகை ; தோல் ; ஊமைக்காயம் ; நீர்த்தொட்டி ; மூத்திரக்குண்டிக்காய் ; வழி ; அண்டவிதை .
வக்குத்திரிகரணம் படுக்கை .
வக்குதல் வதக்குதல் .
வக்குரித்தல் வேதல் .
வகச்சல் மாலைவகை .
வகதி எருது ; காற்று ; நண்பன் .
வகந்தம் காற்று ; குழந்தை .
வகம் காற்று ; வழி ; ஊர்தி ; குதிரை .
வகிடு வகிர்ந்த முன்தலைமயிரின் இடைவெளியொழுங்கு .
வகித்தல் தாங்குதல் .
வகிர் பிளவு ; கீறு ; வழி ; காண்க : வகிடு ; வார்க்கச்சு ; தோல்வார் ; நரம்பு ; பிளந்த துண்டு .
வகிர்தல் துண்டாக அறுத்தல் ; பிளத்தல் ; கீறுதல் ; கோதுதல் ; பங்குசெய்தல் ; காண்க : வகிரெடுத்தல் .
வகிரங்கம் வெளிப்படை ; வெளியுறுப்பு .
வகிரியாகம் வெளியரங்கப் பூசை .
வகிரெடுத்தல் உச்சியினின்று நெற்றியின் மத்திவரை மயிரை ஒழுங்குபடப் பிரித்தல் .
வகிரேந்திரியம் அறிகருவியாகிய புலன் .
வகுஞ்சம் இரவு .
வகுணி காண்க : வகுளி .
வகுத்தல் கூறுபடுத்தல் ; பகிர்ந்துகொடுத்தல் ; இனம்பற்றிப் பிரித்தல் ; பகுத்துக் கணக்கிடல் ; அமர்த்துதல் ; வகைப்படுத்தல் ; நியமத்தோடு செலவிடுதல் ; பூசுதல் ; படைத்தல் .
வகுத்தான் ஊழ் .
வகுத்திரம் தெப்பம் .
வகுத்துக்காட்டல் முப்பத்திரண்டு நூல் உத்திகளுள் ஒன்றான தொகுத்துக் காட்டியவற்றை வேறுபிரித்துக் காட்டுதல் .
வகுதல் பிளத்தல் .
வகுதி வகுப்பு .
வகுந்து வழி .
வகுப்பு கூறுபடுத்துகை ; இனம்பற்றிப் பிரிக்கை ; பிரிவு ; சாதி ; தரம் ; காண்க : வகிடு ; தடுக்கப்பட்ட அறை ; பொலிவு ; சந்தம் ; அழகு .
வகுப்புவாரி சாதிவீதம் .
வகுமை மகிழ்ச்சி .
வகுலி மீன் .
வகுளம் மகிழமரம் .
வகுளாபரணர் மகிழம்பூவை அணிந்த நம்மாழ்வார் .
வகுளி ஒலி .
வகை கூறுபாடு ; சாதியினம் ; இனம் ; முறை ; வழி ; காரணம் ; தந்திரம் ; வலிமை ; தன்மை ; வாழ்க்கைக்குரிய பொருள் முதலியன ; வணிக முதல் ; இடம் ; உறுப்பு ; குறுந்தெரு ; மனையின் பகுப்பு ; விவரம் ; கூட்டப்படும் எண்கள் .
வகைச்சூத்திரம் தொகுத்துச் சொல்லப்பட்டதனை வேறுவேறாக வகுத்துரைக்குஞ் சூத்திரம் .
வகைசெய்தல் ஏற்பாடுசெய்தல் ; வழிசெய்தல் ; கணக்கிற் பதிவுசெய்தல் ; நிலங்களுக்குத் தீர்வை ஒழுங்குசெய்தல் .
வகைசொல்லுதல் விவரஞ் சொல்லுதல் ; கணக்குக்காட்டுதல் .
வகைத்தார் காண்க : வகைமாலை .
வகைதெரிவு பகுத்தறிவு .
வகைநிலைக்கொச்சகம் கொச்சகவகை .
வகைப்படுத்துதல் பங்கிடுதல் ; வகையாகப் பிரித்தல் .
வகைபண்ணுதல் ஏற்பாடுசெய்தல் ; கணக்கிற் பதிவுசெய்தல் ; வழிசெய்தல் .
வகைமாலை தளிரும் பூவும் விரவத் தொடுத்த மாலை .
வகைமுதலடுக்கலங்காரம் பலவகையான முதற்பொருள்களை அடைசினை புணராது செய்யுள் முழுதும் அடுக்கிக் கூறுவதாகிய அணி .
வகைமோசம் இரண்டகம் , நம்பிக்கைமோசம் ; திக்கற்ற நிலை .
வகையறா சார்ந்தது .
வகையறிதல் செய்யும்முறை தெரிதல் ; கூறுபாடறிதல் .
வகையறுத்தல் வழக்குத் தீர்த்தல் ; பகுத்தறிதல் .
வகையறுதல் கதியற்றுப்போதல் .
வகையார் இனத்தார் .
வகையுளி அசைமுதல் உறுப்புகளைச் சொல்நோக்காது இசைநோக்கி வண்ணமறுக்கை .