வா முதல் - வாசகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வா ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்+ஆ) ; தாவுதல் .
வாக்கல் வடிக்கப்பட்ட சோறு .
வாக்களித்தல் உறுதிகூறுதல் ; வாக்குச் சீட்டுப்போடுதல் .
வாக்கன் மாறுகண்ணன் .
வாக்காட்டுதல் ஏய்த்தல் .
வாக்காடுதல் பேசுதல் ; வாதாடுதல் .
வாக்காள் நாமகள் .
வாக்காளன் ஓர் இடத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்தெடுப்பது முதலியவற்றில் தன் கருத்தைப் தெரிவிக்கும் உரிமையுள்ளவன் .
வாக்கி அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நாற்பொருட் பயன்களைக் கேட்க வேட்கையோடு விரித்துக் கூறுவோன் ; எளிதிற் பாப்புனையும் ஆற்றலுள்ளவன் ; மாறு கண்ணுள்ளவன் .
வாக்கிடுதல் வாக்குத்தத்தஞ் செய்தல் ; தீப்பலனைக் கொடுக்கும் சொற் கூறுதல் .
வாக்கியக்கட்டளை நன்கு யாத்த சொற்றொடர் .
வாக்கியசேடம் காண்க : புறனடைச்சூத்திரம் .
வாக்கியம் சொல் ; எழுவாய் பயனிலை முதலிய பொருளோடு கூடிய தொடர் ; பொருள் நிரம்பிய பழமொழி ; மேற்கோள் ; சோதிட கணித வாய்பாடுவகை .
வாக்கியார்த்தம் சொற்றொடர்ப் பொருள் ; பொழிப்புரை .
வாக்கியை பார்வதி .
வாக்கின்செல்வி கலைமகள் .
வாக்கு சொல் ; திருத்தம் ; திருந்திய வடிவு ; வளைவு ; ஒழுங்கின்மை ; ஒரு வினையெச்ச விகுதி ; வார்த்தல் ; பேசற்கருவியான வாய் ; அசரீரி ; வாக்குத்தத்தம் ; புகழ்ச்சிச்சொல் ; எளிதிற் கவிபாடுந்திறம் ; நூலின் நடை ; ஒலி ; பக்கம் ; ஓர் இடத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை .
வாக்குக்கடன் கைம்மாற்றுக்கடன் ; வாய்மொழி நிபந்தனை .
வாக்குக்கண் மாறுகண் .
வாக்குக்குற்றம் சொற்பிழை .
வாக்குக்கொடுத்தல் வாக்குறுதி கூறுதல் ; விருப்பத்தைச் சீட்டுமூலமாய்த் தெரிவித்தல் ; பேச்சுக்கொடுத்தல் .
வாக்குச்சகாயம் சொல்லால் பிறர்க்குச் செய்யும் உதவி .
வாக்குச்சித்தி பிறர் ஏற்கும்படி சொல்லுந்திறம் ; சொற்கள் பலிக்கும்படி சொல்லும் ஆற்றல் .
வாக்குச்சுத்தம் காண்க : வாக்குநாணயம் .
வாக்குத்தண்டம் கடிந்துபேசுதல் .
வாக்குத்தத்தம் உறுதிமொழி கூறல் .
வாக்குத்தம்பம் அறுபத்துநான்கு கலையுள் பிறர் வாக்கைத் தடைசெய்தலான வித்தை .
வாக்குத்தானம் சாதக சக்கரத்தில் வாக்கு , கல்வி முதலியவற்றைக் குறிக்கும் இரண்டாமிடம் .
வாக்குதல் வார்த்தல் .
வாக்குதேவி காண்க : வாக்கின்செல்வி .
வாக்குநயம் சொல்வன்மை ; காண்க : வாக்குவசீகரம் ; நிந்தனை ; பேச்சுவன்மை .
வாக்குநாணயம் சொன்னசொல்லை நிறைவேற்றுங் குணம் .
வாக்குப்பிசகுதல் சொல்தவறுதல் ; உச்சரிப்புத் தடுமாறுதல் .
வாக்குபதி வியாழன் .
வாக்குமாறுதல் சொல்தவறுதல் ; புத்தி மழுங்குதல் ; கிழத்தனம்வருதல் .
வாக்குமி பேச்சாற்றலுள்ளவன் .
வாக்குமூலம் வாய்ச்சாட்சி ; எதிர்வழக்காடுவோன் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழி .
வாக்குரிமை பிரதிநிதியாக ஒருவனைத் தேர்ந்தெடுக்க உள்ள உரிமை .
வாக்குவசீகரம் பேச்சால் பிறரை ஈர்க்கும் செய்கை .
வாக்குவடிவு வடிவழகு .
வாக்குவந்தனம் அவையடக்கம் .
வாக்குவாதம் தருக்கம் ; வாய்ச்சண்டை .
வாக்குவிற்றல் வாக்குறுதி கொடுத்தல் .
வாக்குறுதி காண்க : வாக்குத்தத்தம் ; சொன்ன சொல்லைக் காப்பாற்றுகை .
வாக்கெடுத்தல் வாக்காளர்களின் கருத்தை அறிதல் ; தலைமயிர் வகிர்தல் .
வாகடம் மருத்துவநூல் .
வாகம் காண்க : வாகனம் ; குதிரை ; எருது ; எருமைக்கடா ; காற்று ; சக்கரவாகப்புள் ; கீரைவகை ; பாடாணவகை .
வாகன் அழகுள்ளவன் ; பல்லக்கு முதலியன தூக்குபவன் ; பாடைதூக்கிச் செல்லுபவன் .
வாகனம் ஊர்தி ; சீலை ; விடாமுயற்சி ; ஆடைவகை .
வாகி அழகுள்ளவன் .
வாகிடி நீர்ப்பன்றி .
வாகியம் புறம் ; வெளி ; ஊர்தி .
வாகினி படை ; படையினோர் தொகை ; ஒரு பேரெண் ; பாதிரிமரம் ; படைத்தலைவன் .
வாகினியுள்ளவன் செல்வாக்குள்ளவன் .
வாகீசர் சைவசமய குரவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசர் .
வாகீசன் ஆக்கியோன் ; பிரமன் ; காண்க : வாகீசர் .
வாகீசுவரி காண்க : வாக்கின்செல்வி ; பார்வதி .
வாகீசை காண்க : வாக்கின்செல்வி .
வாகு அழகு ; ஒளி ; ஒழுங்கு ; திறமை ; செடிவகை ; தோள் ; பக்கம் ; முக்கோணத்தின் அடிப்பக்கம் .
வாகுரம் வௌவால் ; வலை .
வாகுலேயன் முருகன் .
வாகுவலயம் தோளணி .
வாகை மரவகை ; கருவாகை ; அகத்தி ; வெற்றியாளர் அணியுமாலை ; வெற்றி ; பகையரசரைக் கொன்று வாகைப்பூச் சூடி வெற்றியில் ஆரவாரிப்பதைக் கூறும் புறத்துறை ; நான்கு வருணத்தாரும் முனிவரும் பிறரும் தத்தங் கூறுபாடுகளை மிகுதிப்படுத்தலைக் கூறும் திணை ; நல்லொழுக்கம் ; ஈகை ; மிகுதி ; பண்பு ; தவம் .
வாகைமாலை வெற்றிமாலை ; நூல்வகை .
வாகையரவம் வெற்றிக்குறியான வெள்ளை மாலை , வீரக்கழல் ; செங்கச்சு முதலியவற்றை வீரர் அணிதலைக் கூறும் புறத்துறை .
வாகைவில்லான் மன்மதன் .
வாங்கல் பிறர் கொடுக்க ஏற்கை ; கடன்வாங்குகை ; விலைக்குக் கொள்கை ; வளைவு ; குறைவு ; தொலைவு ; பிணக்கு ; ஒரு நாடு ; ஆழம் ; வழுக்கல் ; பொன் , வெள்ளி முதலியன மாற்றுக் குறைவாயிருக்கை .
வாங்கு வளைவு ; அடி ; வசவு ; பிச்சுவா ; கால்களுள்ள பலகையாசனம் .
வாங்குதல் வளைத்தல் ; நாண்பூட்டுதல் ; இழுத்தல் ; மூச்சு முதலியன உட்கொள்ளுதல் ; ஏற்றல் ; விலைக்குக் கொள்ளுதல் ; பெறுதல் ; வரைதல் ; ஒதுக்குதல் ; மீட்டும் பெறுதல் ; செலுத்துதல் ; தப்பும்படி பாதுகாத்தல் ; தழுவுதல் ; ஒத்தல் ; அழைத்தல் ; நீக்குதல் ; பிரித்தெடுத்தல் ; பெயர்த்தல் ; முறித்தல் ; வெட்டுதல் ; அடித்தல் ; அழித்தல் ; வைதல் ; வளைதல் ; அலைதல் ; குலைதல் ; மெலிதல் ; குறைதல் ; பின்வாங்குதல் ; தாழ்தல் ; களைத்துப்போதல் ; நீங்குதல் ; திறந்திருத்தல் ; ஒரு பக்கமாக ஒதுங்குதல் .
வாச்சி மரஞ்செதுக்கும் ஆயுதம் ; காண்க : ஆடாதோடை .
வாச்சியம் வாத்தியம் , இசைக்கருவி ; பறைப்பொது ; வாசகத்தின் பொருள் ; வெளிப்படையானது ; சொல்லப்படத்தக்கது ; நிந்தை .
வாச்சியீடன் வாச்சியிட்டு வெட்டினாற்போலக் கண்டிப்பாகப் பேசுபவன் .
வாசகஞ்செய்தல் தோத்திரஞ்செய்தல் ; புகழ்தல் .
வாசகதாட்டி பேச்சுவன்மை .
வாசகம் சொல் ; செய்தி ; சொற்றொடர் ; செய்யுள் ; பிறர் கேட்கச் செபிக்கை ; உரைநடை ; வாய்பாடு ; கடிதம் ; தோத்திரம் ; குரு சீடனுக்கு உபதேசிக்கும் தீட்சை ; காண்க : திருவாசகம் .