சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| வெ | ஓர் உயிர்மெய்யெழுத்து(வ்+எ) . |
| வெஃகல் | மிகு விருப்பம் ; பேராசை . |
| வெஃகா | காஞ்சிபுரத்தருகில் ஓடும் வேகவதி ஆறு ; திருமால் திருப்பதிகளுள் ஒன்று . |
| வெஃகாமை | அவாவின்மை ; பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை ; வெறுப்பு . |
| வெஃகுதல் | மிக விரும்புதல் ; பிறர் பொருளை இச்சித்தல் . |
| வெக்கடுப்பு | கடுகடுப்பு ; கண்ணோய்வகை . |
| வெக்காளம் | மழையில்லாக் காலம் ; புழுக்கம் ; துயரம் . |
| வெக்காளித்தல் | வானந்தெளிதல் ; மனத்துயர்ப் படுதல் . |
| வெக்கை | மிகுந்த வெப்பம் ; புழுக்கம் ; வெப்பநோய் ; மாட்டுநோய்வகை ; கடாவிடு களம் ; வெப்பப் பகுதியினின்றும் வீசும் அனல் . |
| வெக்கைதட்டுதல் | சூடு உண்டாதல் ; வெட்டை நோயால் வருந்துதல் . |
| வெக்கைநோய் | அம்மைநோய்வகை ; மாட்டுநோய்வகை ; நோய்வகை . |
| வெகிர்முகம் | வெளிமுகம் . |
| வெகு | மிகுதியான ; அநேகமான . |
| வெகுச்சுரு | மிகுந்த கேள்வி ; பரந்த கல்வி . |
| வெகுசனம் | மக்கட்கூட்டம் . |
| வெகுசு | மிகுதி . |
| வெகுசுருதம் | காண்க : வெகுச்சுரு ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று . |
| வெகுட்சி | சினம் . |
| வெகுண்டம் | கரும்பு . |
| வெகுத்தம் | அநேகம் ; மிகுதி ; பெருமை . |
| வெகுத்துவம் | அநேகம் ; மிகுதி ; பெருமை . |
| வெகுதான்ய | அறுபதாண்டுக் கணக்கில் பன்னிரண்டாம் ஆண்டு . |
| வெகுதானிய | அறுபதாண்டுக் கணக்கில் பன்னிரண்டாம் ஆண்டு . |
| வெகுநாயகம் | பலருடைய ஆட்சி . |
| வெகுபத்திரி | செடிவகை ; மரவகை . |
| வெகுபுத்திரி | செடிவகை ; காண்க : கீழாநெல்லி ; துளசி . |
| வெகுமஞ்சரி | துளசி . |
| வெகுமதி | நன்கொடை . |
| வெகுமாரி | மிகுமழை ; மிகுதி . |
| வெகுமானம் | நன்கொடை ; பெருமதிப்பு ; போற்றுகை ; பாசாங்கு . |
| வெகுமூலம் | முருங்கைமரம் . |
| வெகுர் | வேர்க்குரு . |
| வெகுரசம் | கரும்பு . |
| வெகுரூபன் | பச்சோந்தி ; சிவபிரான் ; திருமால் ; பிரமன் ; மன்மதன் . |
| வெகுவாய் | மிகுதி ; பெரும்பாலும் . |
| வெகுவாய்ச்சொல்லுதல் | அதிகமாகச் சொல்லுதல் ; வற்புறுத்திக் கூறுதல் . |
| வெகுள்வு | காண்க : வெகுட்சி . |
| வெகுளாமை | சினவாமை . |
| வெகுளி | சினம் ; வெறுப்பு ; கபடமற்றவர் . |
| வெகுளிப்பு | சினம் . |
| வெகுளுதல் | சினத்தல் ; பகைத்தல் . |
| வெங்கண் | அழலெழ விழிக்கும் கண் ; கொடுமை ; பொறாமை ; பகைமை ; கண்ணூறு . |
| வெங்கணன் | கொடியவன் . |
| வெங்கதிர் | சூரியன் . |
| வெங்கதிர்ச்செல்வன் | சூரியன் . |
| வெங்கதிரோன் | சூரியன் . |
| வெங்கம் | மிக்க வறுமை . |
| வெங்கள் | கடுக மயக்குங் கள் . |
| வெங்களம் | போர்க்களம் . |
| வெங்கன் | வறிஞன் . |
| வெங்காயம் | பூடுவகை ; உள்ளி . |
| வெங்கார் | வெப்பம் ; நெல்வகை . |
| வெங்கார்நாற்றம் | தலைப்பெயல் மழையால் காய்ந்த மண்ணினின்று எழும் ஆவிநாற்றம் . |
| வெங்கார்மண் | சூரியவெப்பத்தாற் சூடேறியமண் . |
| வெங்காரம் | மருந்துச்சரக்குவகை ; புண்ணுக்கிடுங் காரம் . |
| வெங்கான்வெளி | நீரற்ற பகுதி . |
| வெங்கிணாத்தி | பெரிய மலைப்பாம்புவகை . |
| வெங்குரு | சீகாழி ; யமன் . |
| வெங்கோல் | காண்க : வெங்கோன்மை . |
| வெங்கோலன் | கொடுங்கோலையுடைய மன்னன் . |
| வெங்கோன்மை | கொடுங்கோல் . |
| வெச்சம் | மாணிக்கக் குற்றவகை . |
| வெச்சமுது | சமைத்த உணவு . |
| வெச்செனல் | வெப்பமாதல் ; கடுமையாதல் . |
| வெச்செனவு | சூடு . |
| வெஞ்சம் | வஞ்சம் ; பழி ; சினம் . |
| வெஞ்சமம் | பாலைநிலப் பண் ; கடும்போர் . |
| வெஞ்சமன் | யமன் . |
| வெஞ்சனம் | கறிக்குதவும் பண்டம் ; மெய்யெழுத்து ; குழம்பு ; சமைத்த கறியுணவு . |
| வெஞ்சிலைச்செல்வன் | வீரபத்திரன் . |
| வெஞ்சுடர் | சூரியன் . |
| வெஞ்சொல் | கடுஞ்சொல் . |
| வெஞ்சோறு | சுடுசோறு ; கறி சேர்க்கப்படாத சோறு . |
| வெட்கக்கேடு | நாணமில்லாமை ; அவமானம் . |
| வெட்கங்கெட்டவன் | மானமற்றவன் . |
|
|