சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| வை | ஓர் உயிர்மெய்யெழுத்து(வ்+ஐ) ; கூர்மை ; வைக்கோல் ; புல் ; தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று . |
| வைக்கல் | நெற்பயிரின் உலர்ந்த தாள் . |
| வைக்கோல் | நெற்பயிரின் உலர்ந்த தாள் . |
| வைக்கோற்போர் | வைக்கோற்குவியல் . |
| வைகடிகன் | மணிகளைச் சாணைபிடிப்பவன் . |
| வைகல் | தங்குதல் ; கழிகை ; விடியற்காலம் ; நாள் ; கழிவுநாள் ; வேளை . |
| வைகல்லியம் | குறைவு ; தகுதியின்மை ; சூனியம் . |
| வைகலும் | நாள்தோறும் . |
| வைகறை | விடியற்காலம் ; காண்க : வைகறையாமம் . |
| வைகறைப்பாணி | விடியற்காலை வாத்தியவொலி . |
| வைகறையாமம் | விடியுமுன்னுள்ள யாமம் . |
| வைகாசம் | வைகாசி மாதம் ; விடியற்காலம் ; வைணவாகமம் இரண்டனுள் ஒன்று ; இல்லறத்தார் கடமை கூறும் நூல் . |
| வைகாசி | தமிழ்மாதங்களுள் இரண்டாம் மாதம் ; விசாகநாள் . |
| வைகாப்பு | இடையறாத ஆரவாரம் . |
| வைகாலம் | சாயுங்காலம் . |
| வைகானசன் | வைகானச ஆகமப்படி ஒழுகுபவன் ; வனவாசி . |
| வைகிருள் | விடியற்காலத்திருள் . |
| வைகுசுடர் | விடியும்வரை எரியும் விளக்கு . |
| வைகுண்டநாதன் | திருமால் . |
| வைகுண்டம் | காண்க : வைகுந்தம் ; தும்பை . |
| வைகுண்டன் | காண்க : வைகுந்தநாதன் . |
| வைகுண்ணியம் | குணமின்மை ; குறை . |
| வைகுதல் | தங்குதல் ; போதுகழிதல் ; வற்றுதல் ; விடிதல் ; புணர்தல் . |
| வைகுந்தநாதன் | திருமால் . |
| வைகுந்தம் | திருமாலுக்குரிய உலகம் . |
| வைகுபுலர்விடியல் | அருணோதய காலம் . |
| வைகுல்லியம் | எதிரிடை . |
| வைகுறு | காண்க : வைகறை ; வைகறையாமம் . |
| வைகுறுமீன் | விடிவெள்ளி . |
| வைகுறுவிடியல் | அருணோதயத்துக்கு முந்தைய காலம் . |
| வைகை | காண்க : வையை . |
| வைங்கியாரம் | பகை . |
| வைச்சமாநிதி | சேமித்துவைக்கப்பட்ட பொருட்குவை . |
| வைச்சிரவணன் | குபேரன் ; இராவணன் . |
| வைச்சுதன் | சனி ; கதிர்மகன் ; முடவன் . |
| வைசகி | காண்க : வைகாசி . |
| வைசத்தியம் | தூய்மை ; உண்மை . |
| வைசயந்தம் | இந்திரன் மாளிகை ; இந்திரன் கொடி . |
| வைசயந்தி | திருமால் அணியும் மாலை ; மாளிகை முன் கட்டடம் ; தழுதாழை ; முன்னை ; ஒரு நகரம் . |
| வைசயந்திகை | கொடி . |
| வைசாகம் | சாந்திரமான மாதத்துள் இரண்டாவதான வைகாசி ; கூத்துநிலையுள் ஒன்று . |
| வைசித்திரி | புதுமை . |
| வைசியன் | வணிகன் ; தனவைசியர் அல்லது வணிகர் ; பூவைசியர் அல்லது உழவர் ; கோவைசியர் அல்லது இடையர் என்னும் மூன்று வகுப்பினர் . |
| வைசூரி | அம்மைநோய் . |
| வைசேடிகம் | கணாதரால் நிறுவப்பட்ட மதம் . |
| வைடம்மியம் | பகை ; மாறுபாடு . |
| வைடாலம் | பூனை ; மாய்மாலம் . |
| வைடூரியம் | ஒன்பதுவகை மணியுள் ஒன்று . |
| வைணவம் | ஒரு சமயம் ; மாலியம் ; திருமாலை வழிபடும் சமயம் ; பதினெண் புராணத்துள் ஒன்று ; மூங்கிலரிசி ; புல்லாங்குழல் . |
| வைணவர் | திருமாலை வழிபடுஞ் சமயத்தினர் . |
| வைணவி | அன்னையர் எழுவருள் ஒருத்தி ; மூங்கிற்குழல் . |
| வைணவிகன் | வீணை வாசிப்போன் ; வேய்ங்குழலூதுவோன் . |
| வைணிகன் | வீணை வாசிப்போன் . |
| வைணுகம் | யானைத்தோட்டி . |
| வைத்தல் | இடுதல் ; அளித்தல் ; இருக்கச் செய்தல் ; பள்ளிக்கு அனுப்புதல் ; வேலை முதலியவற்றில் அமர்த்துதல் ; சேமித்தல் ; பாதுகாத்தல் ; தனியாக ஒதுக்குதல் ; சிறையிலிடுதல் ; உடைத்தாயிருத்தல் ; அமைதல் ; வைப்பாட்டியாகக் கொள்ளுதல் ; தயாரித்தல் ; நடத்துதல் ; மதித்துப் போற்றுதல் ; வரையறுத்தல் ; எடுத்துச் சொல்லுதல் ; மனத்திற் கொள்ளுதல் ; தியானித்தல் ; உண்மை என்று கொள்ளுதல் ; நிலை மாறாதபடி செய்தல் . |
| வைத்தியசாலை | மருத்துவமனை . |
| வைத்தியநாதன் | சிவபிரான் ; ஒரு நூலாசிரியர் . |
| வைத்தியம் | மருத்துவம் . |
| வைத்தியன் | மருத்துவன் ; வேதப்பயிற்சி செய்பவன் . |
| வைத்து | ஓர் அசைச்சொல் . |
| வைத்துக்கொள்ளுதல் | உரிமையாகக் கொள்ளுதல் ; வைப்பாட்டியாகக் கொள்ளுதல் ; மணவிலக்குக்காக உண்மைபோல ஒப்புக்கொள்ளுதல் . |
| வைத்தூறு | வைக்கோற்போர் . |
| வைதருப்பநெறி | செறிவு ; தெளிவு முதலிய பத்துக்குணங்களும் அமையப் பாடுமுறை . |
| வைதருப்பம் | செறிவு ; தெளிவு முதலிய பத்துக்குணங்களும் அமையப் பாடுமுறை . |
| வைதல் | திட்டல் , சபித்தல் ; வஞ்சித்தல் ; பழித்துரைத்தல் . |
| வைதவியம் | கைம்மை . |
| வைதனிகம் | அற்றைக்கூலி . |
| வைதாளி | புகழ்ந்து பாடும் பாட்டு . |
| வைதாளிகர் | அரசரைப் புகழ்ந்து பாடுவோர் . |
| வைதாளியாடுவார் | அரசரைப் புகழ்ந்து பாடுவோர் . |
| வைதிகச்சொல் | வேத வழக்கான சொல் . |
| வைதிகசைவம் | வேதநெறிப்பட்ட சைவமதம் . |
| வைதிகம் | வேதநெறிப்பட்டது ; காலத்தோடு ஒத்த நாகரிகமற்றது ; சமயவொழுக்கங்களை அக்கறையோடு கடைப்பிடித்தொழுகுதல் . |
| வைதிகமார்க்கம் | வேதநெறிப்பட்ட சமயம் . |
| வைதிகன் | வேதமுணர்ந்த பார்ப்பான் ; வேதநெறியில் நடப்பவன் ; காலத்தோடு ஒத்த நாகரிகமற்றவன் . |
|
|