சொல்
|
அருஞ்சொற்பொருள் |
இக்கரை | இந்தக் கரை ; இந்துப்பு . |
இக்கவம் | கரும்பு . |
இக்கன் | கரும்பு ; வில்லை உடையவனான மன்மதன் . |
இக்கிடைஞ்சல் | இடையூறு . |
இக்கிரி | முட்செடிவகை . |
இக்கு | இடை ; சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு ; ஆபத்து ; கரும்பு ; கள் ; கூட்டில் வைத்த தேன் ; ஒரு சாரியை . |
இக்குக்கந்தை | நீர்முள்ளி ; நெருஞ்சி ; நாணல் ; வெள்ளிருளிச் செடி . |
இக்குக்கொட்டுதல் | ஒலிக்குறிப்பினால் ஒன்றை அறிவித்தல் . |
இக்குதம் | கருப்பஞ்சாற்றுக் கடல் . |
இக்குமுடிச்சு | சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு . |
இக்குரம் | நீர்முள்ளி . |
இக்குவாகு | குந்துருக்கம் பிசின் ; சூரியகுலத்து முதலரசன் . |
இக்குவிகாரம் | சருக்கரை . |
இக்குவில்லி | கரும்பை வில்லாகவுடைய மன்மதன் . |
இக்குவில்லோன் | கரும்பை வில்லாகவுடைய மன்மதன் . |
இக்கெனல் | விரைவுக் குறிப்பு . |
இக்கோ | வியப்பு இரக்கச்சொல் . |
இக | முன்னிலை அசைச்சொல் . |
இகசுக்கு | காண்க : நீர்முள்ளி . |
இகணை | ஒரு மரம் . |
இகத்தல் | தாண்டுதல் ; கடத்தல் ; அடக்குதல் ; கைப்பற்றுதல் ; பிரிதல் ; பொறுத்தல் ; போதல் ; நீங்குதல் ; புடைத்தல் ; காழ்த்தல் ; நெருங்குதல் . |
இகத்தாளம் | பரிகாசம் , கிண்டல் . |
இகந்துழி | தூரமான இடம் . |
இகந்துபடுதல் | விதியைக் கடத்தல் . |
இகபரம் | இம்மை மறுமை . |
இகபோகம் | இவ்வுலக இன்பம் . |
இகம் | இம்மை . |
இகமலர் | விரிமலர் . |
இகரக்குறுக்கம் | குற்றியலிகரம் . |
இகரம் | 'இ'என்னும் எழுத்து . |
இகல் | பகை ; போர் ; வலிமை ; சிக்கு ; அளவு ; புலவி . |
இகல | ஒருவமைச் சொல் . |
இகலன் | பகைவன் ; படைவீரன் ; நரி ; கிழநரி . |
இகலாட்டம் | வாதாட்டம் ; போட்டி . |
இகாலான் | பகைவன் . |
இகாலோன் | பகைவன் . |
இகலி | காண்க : பெருமருந்து . |
இகலியார் | பகைவர் . |
இகலுதல் | மாறுபடுதல் ; போட்டிபோடுதல் ; ஒத்தல் . |
இகலோகம் | இவ்வுலகம் . |
இகழ் | இகழ்ச்சி . |
இகழ்ச்சி | அவமதிப்பு ; குற்றம் ; விழிப்பின்மை ; வெறுப்பு . |
இகழ்ந்துரை | இகழ்ச்சிச் சொல் . |
இகழ்வார் | அவமதிப்பவர் . |
இகழ்வு | நிந்தை . |
இகழற்பாடு | இகழப்படுகை . |
இகழாஇகழ்ச்சி | புகழ்வதுபோலப் பழித்துக் கூறும் அணி . |
இகழுநர் | எள்ளி நகையாடுபவர் ; பகைவர் . |
இகளை | வெண்ணெய் . |
இகன்மகள் | துர்க்கை . |
இகன்றவர் | பகைவர் . |
இகனி | காண்க : வெற்றிலை . |
இகா | முன்னிலையசை . |
இகாமுத்திரபலபோகவிராகம் | இம்மை மறுமை இனபங்களில் அவாவற்றிருத்தல் . |
இகுசு | காண்க : மூங்கில் . |
இகுடி | காண்க : காற்றோட்டி |
இகுத்தல் | கொல்லுதல் ; வீழ்த்துதல் ; தாழ்த்துதல் ; சொரிதல் ; ஓடச்செய்தல் ; அறைதல் ; வாத்தியம் வாசித்தல் ; அழைத்தல் ; கொடுத்தல் ; விரித்தல் ; ஒலித்தல் ; மறித்தல் ; தாண்டுதல் ; எறிதல் ; துன்புறுத்துதல் ; துடைத்தல் . |
இகுதல் | கரைந்து விழுதல் ; தாழ்ந்து விழுதல் . |
இகுப்பம் | திரட்சி ; தாழ்வு . |
இகும் | முன்னிலையசை . |
இகுரி | மரக்கலம் ; வழக்கு . |
இகுவை | வழி . |
இகுள் | இகுளை ; இடி ; ஆரால்மீன் . |
இகுளி | இடி ; கொன்றை . |
இகுளை | தோழி ; சுற்றம் ; நட்பு . |
இகூஉ | (வி) இகுத்து ,வீழ்த்தி . |
இங்கண் | இவ்விடம் . |
இங்கம் | குறிப்பு ; அங்கசேட்டை ; சங்கமப் பொருள் ; அறிவு . |
இங்கலம் | கரி . |
இங்கிட்டு | இங்கு . |
இங்கித்தை | இவ்விடத்தில் . |
இ | மூன்றாம் உயிரெழத்து ; பஞ்ச பட்சிகளுள் ஆந்தையைக் குறிக்கும் எழுத்து ; அண்மைச்சுட்டு ; இருதிணை முக்கூற்று ஒருமை விகுதி ; வினைமுதல் பொருள் விகுதி ; செயப்படுபொருள் விகுதி ; கருவிப்பொருள் விகுதி ; எதிர்கால முன்னிலை ஒருமை விகுதி ; ஏவல் ஒருமை விகுதி ; வியங்கோள் விகுதி ; வினையெச்ச விகுதி ; தொழிற்பெயர் விகுதி ; பகுதிப்பொருள் விகுதி . |
இஃது | இது ; அஃறிணை ஒருமை அண்மைச் சுட்டு |
இக்கட்டு | இடுக்கண் ; நெருக்கடி ; வெல்லக்கட்டி . |
இக்கணம் | இப்பொழுது . |
![]() |
![]() |