முதல் - ஈடுபடுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஈசன் எப்பொருட்கும் இறைவன் ; சிவன் ; தகப்பன் ; அரி ; குரு ; அரசன் ; தலைவன் ; மூத்தோன் ; பச்சைக் கருப்பூரம் ; கௌரி பாடாணம் .
ஈசன்மைந்தன் முருகன் ; விநாயகன் ; வீரபத்திரன் ; வைரவன் .
ஈசன்றார் கொன்றைமாலை .
ஈசனாள் திருவாதிரை நாள் .
ஈசானகோணம் காண்க : ஈசானியம் .
ஈசானதிசை காண்க : ஈசானியம் .
ஈசானம் வடகீழ்த்திசை ; சிவனுடைய ஐந்து முகங்களுள் ஒன்று ; ஒரு சைவ மந்திரம் .
ஈசானன் சிவன் ; வடகீழ்த்திசைப் பாலகன் .
ஈசானியம் வடகீழ்த்திசை , சனிமூலை .
ஈசானியமூலை வடகீழ்த்திசை , சனிமூலை .
ஈசி ஓர் இகழ்ச்சிக் குறிப்பு .
ஈசிதை காண்க : ஈசத்துவம் .
ஈசுரமூலி பெருமருந்துக் கொடி , தராசுகொடி ; பெருங்கிழங்கு .
ஈசுரல¦லை கடவுள் திருவிளையாடல் .
ஈசுரன் காண்க : ஈச்சுரன் .
ஈசுரார்ப்பணம் கடவுளுக்கு உரியதாக்குகை .
ஈசுவர அறுபதாண்டுக் கணக்கில் பதினோராம் ஆண்டு .
ஈசுவரத்துவம் ஈசுவரனாயிருக்கும் தன்மை .
ஈசுவரவிந்து பாதரசம் .
ஈசுவரன் காண்க : ஈச்சுவரன் .
ஈசுவரி பார்வதி , உமை .
ஈசுவரிநாதம் கந்தகம் .
ஈசுவரிவிந்து கந்தகம் ; பாதரசம் .
ஈசை ஏர்க்கால் ; பார்வதி .
ஈஞ்சு ஈச்சமரம் ; பேரீந்து ; காட்டீஞ்சு ; சிற்றீஞ்சு .
ஈஞ்சை கொலை ; இம்சை ; இகழ்ச்சி .
ஈட்டம் மிகுதி ; திரள் ; கூட்டம் ; தேட்டம் ; பொருளீட்டுகை ; வலிமை .
ஈட்டி குந்தம் , வேல் , ஈட்டி ; தோதகத்திமரம் ; சவளம் ; கழுக்கடை ; கழுமுள் ; சலாகை .
ஈட்டுக்கீடு சரிக்குச்சரி .
ஈட்டுத்தொகை உதவித்தொகை .
ஈட்டுதல் கூட்டுதல் ; சம்பாதித்தல் .
ஈட்டுப்பத்திரம் அடைமான சாசனம் .
ஈடகம் மனத்தைத் கவர்வது .
ஈடணம் புகழ் .
ஈடணாத்திரயம் ஆசை ; புதல்வன் , மனைவி , பொன் மூன்றிலும் விருப்புறுகை ; துன்பம் .
ஈடணை ஆசை ; புதல்வன் , மனைவி , பொன் மூன்றிலும் விருப்புறுகை ; துன்பம் .
ஈடழிதல் வலிமை பெருமைகள் கெடுதல் .
ஈடறவு பெருமைக்கேடு , மேன்மைக்கேடு .
ஈடன் பெருமையுடைவன் ; ஆற்றலுடையவன் ; வலிமை பொருந்தியவன் .
ஈடாட்டம் போட்டி ; பணப்புழக்கம் ; நெகிழ்ச்சி ; ஏழைமை நிலை .
ஈடாதண்டம் ஏர்க்கால் .
ஈடிகை அம்பு ; தூரிகை , எழதுகோல் .
ஈடு ஒப்பு ; உவமை ; வலி ; பெருமை ; பிரதி ; கைம்மாறு ; அடகு ; தகுதி ; நேராகுகை .
ஈடுகட்டுதல் பிணை கொடுத்தல் , பிணையாதல் ; பொருளிழப்பிற்கு ஈடுசெய்தல் ; பேரன்பு கொள்ளுதல் .
ஈடுகொடுத்தல் எதிர்நிற்றல் ; நிகராதல் ; மனநிறைவு செய்வித்தல் ; போட்டி போடுதல் ; பதிலளித்தல் .
ஈடுகொள்ளுதல் மனங்கனிதல் .
ஈடுபடுதல் அகப்படுதல் ; துன்பப்படுதல் ; மனங்கவிதல் ; வலியழிதல் .
நான்காம் உயிரெழுத்து ; துத்த இசையின் எழுத்து ; ஈ என்னும் பறவை ; தேனீ ; வண்டு ; முன்னிலை அசைச்சொல் ; சிறகு ; அழிவு ; அம்பு ; அரைஞாண் ; இந்திர வில் ; குகை ; கொசு ; தாமரை ; நரி ; பாம்பு ; பார்வதி ; திருமகள் ; வியப்புக்குறிப்பு .
(வி) ஈயென் ஏவல் ; பகிர்ந்து கொடு ; தா ; சொரி .
ஈக்குடி சாவிக் கதிர் .
ஈக்கை புலிதொடக்கிக் கொடி ; உப்பிலி .
ஈகம் விருப்பம் ; சந்தனமரம் ; தியாகம் .
ஈகாமிருகம் செந்நாய் .
ஈகுதல் கொடுத்தல் ; படைத்தல் .
ஈகை கொடை ; பொன் ; கற்பகம் ; இண்டு ; புலிதொடக்கி ; காடை ; காற்று ; மேகம் ; கற்பகமரம் ; இல்லாமை ; ஈதல் ; கொடுத்தல் .
ஈகையன் கொடையாளன் .
ஈகையாளன் கொடையாளன் .
ஈங்கண் இவ்விடம் .
ஈங்கம் சந்தனமரம் .
ஈங்கன் இங்கனம் ; இவ்விடம் ; இவ்வாறு .
ஈங்கனம் இங்கனம் ; இவ்விடம் ; இவ்வாறு .
ஈங்கிசை கொலை ; வருத்தம் ; இகழ்ச்சி .
ஈங்கு இவ்விடம் ; இண்டங்கொடி ; இவ்வுலகம் ; இப்படியே ; சந்தனம் .
ஈங்கை இண்டங்கொடி ; இணடம்பூ ; உப்பிலி .
ஈச்சப்பி கடும்பற்றுள்ளன் , ஈயாதவன் .
ஈச்சு ஈந்து , ஈச்சமரம் .
ஈச்சுக்கொட்டுதல் சீழ்க்கையடித்தல் .
ஈச்சுர காண்க : ஈசுவர .
ஈச்சுரம் சிவதத்துவம் ஐந்தனுள் ஒன்று , அது ஞானங்குன்றிக் கிரியை உயர்ந்தது .
ஈச்சுரன் ஈசுவரன் , கடவுள் ; சிவன் .
ஈச்சுவரன் தலைவன் ; கடவுள் ; சிவன் .
ஈச்சோப்பி ஈப்பிணி ; ஈயோட்டி ; சிலந்தி .
ஈசத்துவம் எண்வகைச் சித்திகளுள் ஒன்று ; செலுத்துகை ; யாவர்க்கும் தேவனாகுதல் .
ஈசதேசாத்தி பெருமருந்துக் கொடி .
ஈசல் சீழ்க்கை ; செட்டைக் கறையான் , சிறகு முளைத்த கறையான் .