சொல்
அருஞ்சொற்பொருள்
படி கற்படி ; ஏணிப்படி ; நிலை ; தன்மை ; அங்கவடி ; தராசின் படிக்கல் ; நூறு பலங் கொண்ட நிறையளவு ; நாட்கட்டளை ; நாழி ; அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள் ; உபாயம் ; உதவி ; நிலைமை ; விதம் ; வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை ; உடம்பு ; மரபுவழி ; தகுதி ; முறைமை ; வேதிகை ; தாழ்வாரம் ; நீர்நீலை ; ஒத்த பிரதி ; பகை ; பூமி ; உவமை ; ஓர் உவமவுருபு .
சொல்
அருஞ்சொற்பொருள்
படி (வி) வாசி , படியென் ஏவல் .