1

Word

English & Tamil Meaning
பொருள்

1 a
n.
First letter and vowel of the alphabet;
நெடுங்கணக்கில் முதலுயிரெழுத்து.

2 a
n.
Symbol for the number 8, printed without the loop at the top (அ);
எட்டென்னும் எண்ணின் குறி. அ உ அறியா(யாப்.வி.37, உரை)

3 a
part.
1. Demonst.: (a) base of the demonst. pron. expressing the remoter person or thing; (b) pref. to nouns, expressing remoteness; (c) pref. expressing world-wide eminence;
ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி.போ.1); ஓர் புறச்சுட்டு. அக்கொற்றன்; உலகறிசுட்டு. அத்தம்பெருமான் (சீவக.221).

2. A euphonic augment, as in தமிழப்பிள்ளை;
ஒரு சாரியை.

3. Neut. pl. noun suff., as in பல;
ஒரு பலவின்பாற் பெயர் விகுதி.

4. A gen. ending, followed by a neut. pl., as in என கைகள்;
ஆறாம்வேற்றுமை யுருபுகளுளொன்று.

5. Verb ending: (a) neut. pl., as in வந்தன; (b) opt.; (c) vbl. pple., as in வர; (d) rel. pple., as in வந்த;
ஒரு பலவின்பால் வினைமுற்று விகுதி; ஒரு வியங்கோள் விகுதி. அறங்க வோங்க (கந்தபு.வாழ்த்.); ஒரு வினையெச்ச விகுதி; ஒரு பெயரெச்ச விகுதி.

6. An expletive, generally in poetry;
ஓர் அசைச்சொல். தன்வழிய காளை (சீவக.494).

7. Euphonic prothesis of Sanskritic words beginning with ர, as in அரங்கம்.
(நன்.448.)

4 a (before a vowel aṉ)
part. <a. Skt. pref.
implying negation (as in அரூபம்), privation (as in அப்பிராமணன்), or contrariety (as in அதர்மம்);
இன்மை யன்மை மறுதலைப் பொருள்களில் வரும் ந என்னும் அவ்வியயத்தின் திரிபு.

5 a
n.<a.
1. Viṣṇu;
திருமால். அவ்வென் சொற் பொருளாவான் (பாகவ.சிசுபா.20)

2. Siva;
சிவன். (திருமந்.1751.)

அஆ aā
int.
Ah expressing pity;
ஓர் இரக்கக் குறிப்பு. (நாலடி.9.)

அஃகம் 1 aḵkam
n. [K.akki.] cf.argha.
Grain;
தானியம். (சினேந்.425.)

அஃகம் 2 aḵkam
n.
Course of action.
முறைமை ஒரூ ரிரண்டஃக மாயிற்று (சீவக. 2087.)

அஃகரம் aḵkaram
n. cf.alarka.
White madar. See வெள்ளெருக்கு. (W.)
.

அஃகல் aḵkal
n. <அஃகு-.
1. Becoming small, being reduced;
சிறிதாகை. (திவா.)

2. Poverty, destitution;
வறுமை. (திவா.)

அஃகான் aḵkāṉ
n. <அ+கான்.
The letter அ;
அகரம். அஃகா னடைவு மாகும் (நன்.212).

அஃகு 1 - தல் aḵku-
5v. intr. [K. akkudisu.] prob. அல்கு-.
1 To be shortened, as a vowel;
அளவிற் குறுகுதல். (நன்.60)

2. To be reduced, to shrink;
சுருங்குதல். கற்பக் கழிமட மஃகும் (நான்மணி.29).

3. To be dejected;
மனங் குன்றுதல்.

4. To be acute, refined;
நுண்ணிதாதல். அஃகி யகன்ற வறிவு (குறள்,175).

5. To pass away;
கழிந்து போதல். அல்லாயிர மாயிர மஃகினவால் (கம்பரா. அதிகா.69).

6. To become closed, compressed, as a flower;
குவிதல். ஆம்பல் . . . மீட்டஃகுதலும்(காஞ்சிப்பு.திருக்கண்.104).

அஃகு 2 aḵku
n. <அஃகு-.
Oozing water;
ஊறுநீர். (திவா.)

அஃகுல்லி aḵkulli
n. cf. saṣkulī.
A steamed meal-cake;
உக்காரி யென்னும் சிற்றுண்டி. (பிங்.)

அஃகேனம் aḵkēṉam
n. <அ + ஃ + ஏனம்.
The letter ஃ;
ஆயுதவெழுத்து. அஃகேனமாய்தம் (காரிகை.உறுப். 4,உரை).

அஃதான்று aḵtāṉṟu
adv. <அஃது+அன்று.
Besides. See அதான்று.
(திருவாச.3,28).

அஃது aḵtu
pron. <அ.
That, used before words commencing with a vowel, as in அஃதாவது;
அது. (தொல்.எழுத். 423, உரை).

அஃதே aḵtē
int. <id.+.
1. Indeed!
அப்படியா! அஃதே யடிகளு முளரோ(சீவக.1884).

2. All right!
நீ கூறியது அமையுமென்னுங் குறிப்புச் சொல். (நன்.59, மயிலை.)

அஃதை aḵtai
n.
Name of the daughter of a Cōḻā king;
சோழனொருவன் மகள். (அகநா.96).

1