திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)

    வஞ்சனையால் வந்தவதனுயிருண்டு வாய்த்த
    தயிருண்டு வெண்ணெயமுதுண்டு வலிமிக்க
    கஞ்சனுயிரது வுண்டிவ் வுலகுண்ட காளை
    கருதுமிடம் காவிரிசந் தகில் கனக முந்தி
    மஞ்சுலவும் பொழிலாடும் வயலாடும் வந்து
    வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி
    அஞ்சலித்தங் கரிசரனென் றிரைஞ்சு நாங்கூர்
    அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
        - (1246) பெரிய திருமொழி 3-10-9

ஹரி வந்து மேவியிருக்கும் (தங்கியிருக்கும்) விண்ணகரம்
இதுதான் என்று திருமங்கை அறுதியிட்டுக் கூறுகிறார். மாமறையோர்
மாமலர்கள் தூவி அஞ்சலித்து ஹரியே சரணம் என்று வணங்கும்
விண்ணகர் என்று புகழ்கிறார்.

உள்ளத்துட கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து
ஹரியென்ற - என்னும் ஆண்டாளின் திருப்பாவையை மங்கை மன்னன்
குறிப்பால் உணர்த்துகிறார்.

இது நாங்கூரிலேயே அமைந்துள்ள திவ்ய தேசமாகும்.
சீர்காழியிலிருந்து கிழக்கே 5 மைல். அரிமேய விண்ணகரம்என்றால்
அனைவருக்கும் தெரியாது. குடமாடு கூத்தர் கோவில் என்றால்
யாவருங் கூறுவர். கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தாடிய
ஹரியே இங்கு வந்துள்ளான் என்பது ஐதீஹம்.

பின்