மாயக்கூத்தன் கோவில் - திருக்குளந்தை

    கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன்
    கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
    பாடற்றொழிய இழிந்து வைகல்
    பல்வளையார் முன் பரிசழிந்தேன்
    மாடக்கொடி மதிள் தென்குளந்தை
    வண்குட பால் நின்ற மாயக் கூத்தன்
    ஆடற் பறவை யுயர்த்த வல்போர்
    ஆழி வளவனை யாதரித்தே
            (3561) திருவாய்மொழி 8-2-4

என்று     நம்மாழ்வாரால்     பாடப்பட்ட     இத்திருத்தலம்
திருப்புளிங்குடியிலிருந்து. நேராகச் செல்லும் சாலையில் சுமார் 6 மைல்
தொலைவில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து வடகிழக்கு திசையில்
சுமார் 7 மைல் தூரம் ஏரல் செல்லும் பேருந்தில் சென்றும் இறங்கலாம்.

திருக்குளந்தை யென்றால் யாருக்கும் தெரியாது பெருங்குளம் என்று
சொன்னால்தான் எல்லோருக்கும் எளிதில் விளங்கும்.

பெருங்குளம் பெருமாள் கோவில் என்றே இங்குரைவோர்
கூறுகின்றார்.

பின்