விசயாசனப்பெருமாள் கோவில் நத்தம் வரகுணமங்கை 1


    புளிங்குடி கிடந்து வரகுண மங்கை
     யிருந்து வைகுந்தத்துள் நின்று
    தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே
     என்னையாள்வாய் எனக்கருளி
    நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப
     நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
    பனிங்கு நீர் முகிலின் பவளம் போல்
     கனிவாய் சிவப்ப நீ காண வாராயே
             (3571) திருவாய்மொழி (9-2-4)

என்று     நம்மாழ்வாரால் பாடப்பட்ட இத்திவ்ய தேசம்
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில்
உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து நடந்தே செல்லலாம். வரகுண
மங்கையென்று சொன்னால் யாருக்கும் தெரியாது. நத்தம் என்று
சொன்னால் எல்லோரும் அடையாளம் காட்டிடுவர். தற்போது நத்தம்
என்னும் பெயரே பிரதானமாக உள்ளது.

பின்