பாண்டவநூதப்பெருமாள் கோவில் - திருப்பாடகம்
வரலாறு

எம்பெருமான் கிருஷ்ணவதாரத்தில் பாண்டவர்கள் பொருட்டு
துரியோதனன் சபைக்கு தூது சென்றான். இந்தக் கண்ணன்தான்
பாண்டவர்களின் பெரிய பலம். இவனை அழித்துவிட்டால்
பாண்டவர்களை எளிதில் வென்றுவிடலாம். என்று எண்ணிய
துரியோதனன், கண்ணன் அமரக்கூடிய இடத்திற் கருகில் ஒரு
நிலவறையை உண்டாக்கி அதன்மீது பசுந்தலைகள் இட்டு மூடி அதன்
மீது ஒரு ஆசனத்தை அமைத்தான். இதில் கண்ணன் அமர்ந்தவுடன்
இந்த ஆசனம் நிலவறைக்குள் விழுக அங்கிருக்கும் மல்லர்கள்
கண்ணனை கொன்றுவிட வேண்டும் என்பது துரியோதனன் திட்டம்.
துரியோதனன் திட்டப்படி நிலவறை சரிந்துவிழ உள்ளே விழுந்த
கண்ணன் நொடிப்பொழுதில் மல்லர்களை மாய்த்து விஸ்வரூபனாய்
நின்றார்.

பாரத யுத்தம் முடிந்த பிறகு வெகுகாலத்திற்குப் பின் ஜெனமேஜெய
மகராசன் வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக்கேட்டு
வரும்போது ஸ்ரீகிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில் இருந்து தூது
சென்றவிடத்து எடுத்த பிரம்மாண்ட திருக்கோலத்தை மாபாராதம் கை
செய்த மாவுருவத்தை தானும் சேவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு
அதற்குபாயம் கேட்க சத்தியவிரத ஷேத்ரமான காஞ்சிக்கு சென்று
அஸ்வமேதயாகம் செய்து யாகத்தின் முடிவில் நீ விரும்பிய
திருக்கோலத்தைக் காணலாமென்று முனிவர்கள் கூற மன்னன்
அவ்விதமே செய்தான்.

யாகத்தின் திரண்ட பயனாக பிரம்மாண்டமான கண்ணன் யாக
வேள்வியில் தோன்றி மன்னருக்கும் ஹாரித முனிவர்க்கும் காட்சி
கொடுத்தார் என்பது வரலாறு.

முன் பின்