காளமேகப் பெருமாள் கோவில் - திருமோகூர்

மூலவர்

காளமேகப் பெருமாள் (நீருண்ட கருமேகம் போன்ற திருமேனியுடன்
கருணைமழை பொழிவதால் காளமேகப் பெருமாள் என்ற திருநாமம்
வரலாயிற்று) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

உற்சவர்

திருமோகூர் ஆப்தன் (பஞ்சாயயுதங்களுடன் கூடின திருக்கோலம்)
குடமாடு கூத்தன் என்றும் தயரதன் பெற்ற மரகதமணித்தடம் என்றும்
சுடர்கொள் ஜோதியென்றும் உற்சவ மூர்த்திக்கு பல திருநாமங்கள்
உண்டு.

தாயார்

மோஹனவல்லி, திருமோகூர் வல்லி, மோகவல்லி என்ற
திருநாமங்கள்.

விமானம்

கேதச விமானம்

தீர்த்தம்

சீராப்தி புஷ்கரணி (திருப்பாற்கடல் தீர்த்தம்) ப்ரஹம்ம தீர்த்தம்
(பிரம்மனால் உண்டாக்கப்பட்டது) இதற்கு தெற்கே பாபநாச தீர்த்தமும்,
வடக்கே ஸ்வர்க்கத்வாரா தீர்த்தமும், மேற்கே நரகாசுர தீர்த்தமும்,
கிழக்கே பரமன் தீர்த்தமும் உண்டு.

காட்சி கண்டவர்கள்

பிரம்மா, இந்திரன், புலஸ்தியர், தேவர்கள்.

முன் பின்