தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

தரவுப் பகுப்பாய்வுக் கருவிகள்

தமிழ்த் தரவுகளை ஆய்வு செய்வதற்குக் கீழ்க் கண்ட தரவுப் பகுப்பாய்வுக் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
1. சொல் எண்ணிக்கை கண்டறியும் கருவி:
 

இக்கருவி ஒரு கோப்பில் எத்தனைச் சொற்கள் இருக்கின்றன என்பதை அறிந்து அளிக்கும். இக்கருவியில் கூடுதலாகச் சொற்களைத் தமிழில் அகர வரிசை படுத்தவும் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்டுக் காணப்பட்டால் அவற்றை நீக்கவும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

 
2. சொற்களை வகைப்படுத்தும் கருவி
 

இக்கருவி ஓரெழுத்துச் சொற்கள், ஈர்ரெழுத்துச் சொற்கள், மூவெழுத்துச் சொற்கள் எனப் பிரித்து அவற்றை வகைப்படுத்தி அளிக்கும்.

 
3. வரிவடிவக் கணிப்புக் கருவி
 

இக்கருவியானது ஒரு சொல் தமிழ் எழுத்துகளில் தொடங்குகிறதா அல்லது ஆங்கிலத்தில் (ரோம வரிவடிவம்) தொடங்குகிறதா அல்லது அரேபிய எண்களில் தொடங்குகிறதா என்று கணித்து அவற்றை வரிசைப்படுத்தி அளிக்கும் திறனுடையது.

 
4. முன்பின் சொற்களைக் கண்டறியும் கருவி
 

இக்கருவியானது கொடுக்கப்பட்ட சொற்களின் முன்னும் பின்னும் என்ன சொற்கள் இடம்பெற்று வருகின்றன என்பதைக் கண்டறியும்.

 
5. கோப்பின் பெயர் மாற்றி
 

இக்கருவி பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகளின் பெயர்களை எங்கிருந்தாலும் கண்டறிந்து அதன் விரிவாக்கத் தொடச்சியை மாற்றி அமைக்கும்.

 
6. துறைப் பகுப்பி
 

இக்கருவியானது கொடுக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள் எத்துறைகளைச் சார்ந்த்து என்று கண்டறிந்து அளிக்கும். தேவைப்படின் ஒரே கோப்பாகவும் அளிக்கும்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 28-08-2017 17:11:47(இந்திய நேரம்)