தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

தமிழ்
இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வியின் பாடத் திட்டமும் விதிமுறைகளும்
 

1. சேர்க்கைத் தகுதி

பட்டய, மேற்பட்டயப் பாடங்களை ஒருங்கிணைத்துப் பட்டப் படிப்பின் பாடத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பட்டய, மேற்பட்டய, பட்ட வகுப்புகளில் முறையே சேர விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய தகுதி நிலை :

பாடத் திட்டம்
தகுதி நிலை (தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்)
 பட்டயம் /  
மேற்பட்டயம் /  
பட்டம்
 10+2 (அல்லது)  
த.இ.க. மேற்சான்றிதழ் நிலை 3 (அல்லது)  
அதற்கு ஈடான கல்வி நிலையில் தேர்ச்சி
  • இப்பட்டப் படிப்பில் சேர வயது வரம்பு இல்லை.

2. பாடத் திட்டத்தின் கால அளவும் பிரிவுகளும்

இளநிலைத் தமிழியல் பட்டக்கல்வி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது

பகுதி-1 தமிழ் மொழிப் பாடங்கள்.

பகுதி-2 தமிழ் அல்லது ஆங்கிலம் (மொழிப் பாடங்கள்).

பகுதி-3 தமிழியல் தொடர்பான பாடங்கள். (தமிழ் மொழியும், இலக்கியமும்)

மேற்குறிப்பிட்ட இந்த 3 பகுதிகளுக்கான பாடங்களும் 3 ஆண்டுகளில் பயிலுவதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வுகளில் விலக்கு

ஏற்கப்பட்ட உள்நாட்டு/வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் இளங்கலைப் பட்டம் பெற்றவர்க்கும், மற்றும் இளங்கலைப் பட்டப் பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றில் தேர்ச்சித் தகுதி பெற்றவர்களுக்கும், த.இ.க.-வின் இளநிலைத் தமிழியல் பட்டக் கல்விக்கான பகுதி-1, பகுதி-2 இவற்றிற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வியில் சேரும் மாணவர்கள் பதிவு செய்த நாளில் இருந்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே பட்டம் பெறத் தகுதி பெறுவர்.

பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றில் விலக்குப் பெற்ற மாணவர்கள், மற்ற 16 தாள்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்னர் பட்டம் பெறுவர்.

3. பாடத் திட்டம்

i. பட்டயம் (தமிழியல்)

பட்டயப் (தமிழியல்) படிப்பிற்கான பாடத் திட்டம் :

தாள் குறியீடு
(Paper Code)

தாள்கள்
(Papers)

C011
 இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் இருவர்
C012
 இடைக்கால இலக்கியம்
C021
 இலக்கணம் - 1 (எழுத்து)
C031
 தமிழகப் பண்பாட்டு வரலாறு

ii. மேற்பட்டயம் (தமிழியல்)

மேற்பட்டயப் (தமிழியல்) படிப்பிற்கான பாடத் திட்டம் :

 பட்டயத்திற்கான C011 முதல் C031 வரையுள்ள 4 தாள்களுடன்,

தாள் குறியீடு
(Paper Code)
தாள்கள்
(Papers)

A011
 காப்பிய இலக்கியம்
A021
 இலக்கணம் - 2 (சொல்)
A031
 தமிழக வரலாறு
A041
 இலக்கிய வரலாறு
A051
 மொழி வரலாறு - 1
A061
 நாட்டுப்புறவியல்

iii. இளநிலைத் தமிழியல் பட்டம் :

   பட்டப் படிப்பிற்கான பாடத் திட்டம் :

தாள் குறியீடு
(Paper Code)

தாள்கள்
(Papers)
 
 
பகுதி 1 - முதல் மொழிப் பாடம் (தமிழ்)
 
 
P101
 சிறுகதையும் புதினமும்
P102
 உரைநடையும் நாடகமும்
P103
 இக்காலக் கவிதையும் சிற்றிலக்கியமும்
P104
 காப்பியங்களும் சங்க இலக்கியமும்
 
 

பகுதி 2 - இரண்டாம் மொழிப் பாடம் (தமிழ் அல்லது ஆங்கிலம்)

 தமிழ்
 
 
P201
 மொழிபெயர்ப்பியல்
P202
 சமயத்தமிழ் இலக்கியம்
P203
 படைப்பிலக்கியம்
P204
 இதழியல்
(அல்லது)
 ஆங்கிலம்
- Foundation Course in English I& II of Indira Gandhi National Open University (IGNOU) Level
 
 
P301
 FEG-1 (1 - 12 Units)
P302
 FEG-1 (13 - 24 Units)
P303
 FEG-2 (1 - 12 Units)
P304
 FEG-2 (13 - 24 Units)
 
 

பகுதி 3 - தமிழியல் பாடங்கள்

பட்டயம்,  மேற்பட்டயம் இவற்றிற்கான C0, A0 தாள்களுடன், 

D011
 பண்டைய இலக்கியம்
D021
 இலக்கணம் - 3 (பொருள்)
D031
 இலக்கணம் - 4 (யாப்பு, அணி)
D041
 மொழி வரலாறு - 2
D051
 தமிழகக் கலைகள்
D061
 இலக்கியத் திறனாய்வு

மேற்குறித்த பாடங்கள் இணைய வழிப் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன.

பட்டயம் மற்றும் மேற்பட்டயம் பெற்றவர்கள் அவர்கள் ஏற்கெனவே முடித்த பாடங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுவர்.

4. தேர்வு முறை

ஒவ்வொரு தாளுக்கும் தொடர் மதிப்பீடும், இறுதித் தேர்வும் நடத்தப்படும். தொடர் மதிப்பீட்டுத் தேர்வுகள் இணைய வழியாக 12 கிழமைக் காலப் பிரிவில் நடத்தப்படும். இறுதித் தேர்வு எழுத்துத் தேர்வாகத் த.இ.க.-வின் தொடர்பு மையங்களில் நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும் சூன், திசம்பர் ஆகிய இரு திங்கள்களில் த.இ.க. குறிக்கும் கால அட்டவணைப்படி இத்தேர்வு நிகழும். இறுதித் தேர்வு ஒவ்வொன்றும் 3 மணி நேரக் கால அளவைக் கொண்டதாக இருக்கும்.

ஒவ்வொரு தாளுக்கும் மொத்த மதிப்பெண் 100. ஒவ்வொரு தாளுக்கும் தொடர் மதிப்பீட்டுத் தேர்வு மதிப்பெண் 25, இறுதித் தேர்வு மதிப்பெண் 75, ஆக மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தாளும் 4 மதிப்பிலக்கைக் கொண்டது.

ஒவ்வொரு தாளுக்கும்

தேர்வு முறை
தேர்வுகளின் எண்ணிக்கை
மதிப்பெண்
தேர்வு நேரம்
கால இடைவேளை
தொடர்  மதிப்பீடு
 2
 25
30 நிமிடங்கள்
12 கிழமைகளுக்கு ஒரு முறை
இறுதித் தேர்வு
 1
 75
 3 மணி
 6 திங்களுக்கு ஒரு முறை சூன் , திசம்பர்
 
மொத்தம்
100
 
 

அட்டவணை - இளநிலைத் தமிழியல் பட்டம்

(பருவமுறைத் தேர்வுத் திட்டம்)

பருவம்

(Semester)

 

பகுதி
(Part)

தாள் பொருள்
(Paper Content)
தாள்கள்
(Papers)

முதற்பருவம் (I st Semester)

 பகுதி - 1 (தமிழ்)
 பகுதி - 2 (தமிழ் /  ஆங்கிலம்)

 

 பகுதி - 3 ( தமிழியல்  பாடங்கள் ) 

  P101 - சிறுகதையும் புதினமும்

  P201 - மொழிபெயர்ப்பியல்

 


(தமிழ்)      (அல்லது )


  P301 - FEG-1 (1 - 12 Units) (ஆங்கிலம்)

  C011 - இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் இருவர்
  C012 - இடைக்கால இலக்கியம்

4
இரண்டாம் பருவம் (II nd Semester)
 பகுதி - 1 (தமிழ்)
 பகுதி - 2 (தமிழ் /  ஆங்கிலம்)
 பகுதி - 3 ( தமிழியல்  பாடங்கள் )
  P102 - உரைநடையும் நாடகமும்  

  P202 - சமயத்தமிழ் இலக்கியம்

 

(தமிழ்)     (அல்லது )


  P302 - FEG-1 (13 - 24 Units) (ஆங்கிலம்)


  C021 - இலக்கணம் - 1 (எழுத்து)

  C031 - தமிழகப் பண்பாட்டு வரலாறு

4
மூன்றாம் பருவம் (III rd Semester)
 பகுதி - 1 (தமிழ்)
 பகுதி - 2 (தமிழ் /  ஆங்கிலம்)

 

 பகுதி - 3 ( தமிழியல்  பாடங்கள் )

 

  P103 - இக்காலக் கவிதையும் சிற்றிலக்கியமும்

 


  P203 - படைப்பிலக்கியம்

 

(தமிழ்)     (அல்லது )


  P303 - FEG-2 (1 - 12 Units) (ஆங்கிலம்)

 

  A011 - காப்பிய இலக்கியம்

  A021 - இலக்கணம் - 2 (சொல்)

  A031 - தமிழக வரலாறு
 

5
நான்காம் பருவம் (IV th Semester)
 பகுதி - 1 (தமிழ்) 
பகுதி - 2 (தமிழ் /  ஆங்கிலம்)

 

 பகுதி - 3 ( தமிழியல்  பாடங்கள் )

 

  P104 - காப்பியங்களும் சங்க இலக்கியமும்

  P204 - இதழியல்

 

(தமிழ்)     (அல்லது )


  P304 - FEG-2 (13 - 24 Units) (ஆங்கிலம்)

 

  A041 - இலக்கிய வரலாறு

  A051 - மொழி வரலாறு - 1

  A061 - நாட்டுப்புறவியல்  

5
ஐந்தாம் பருவம் (V th Semester)
 பகுதி - 3 ( தமிழியல்  பாடங்கள் ) 
  D011 - பண்டைய இலக்கியம்
  D021 - இலக்கணம் - 3 (பொருள்)

  D031 - இலக்கணம் - 4 (யாப்பு, அணி)
3
ஆறாம்பருவம் (VI th Semester)
 பகுதி - 3 ( தமிழியல்  பாடங்கள் )

 

  D041 - மொழி வரலாறு - 2

 

  D051 - தமிழகக் கலைகள்

 

  D061 - இலக்கியத் திறனாய்வு

 

3
 
 

மொத்தத் தாள்கள்

24

பட்டயம், மேற்பட்டயம், இளநிலைத் தமிழியல் பட்டம் ஆகியவற்றில் சேரும் மாணவர்கள் மற்றும் இளநிலைத் தமிழியலில் சேர்வதற்குப் பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றில் விலக்குப் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மேலே குறித்த அட்டவணைப்படி மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும். முதற்பருவம், மூன்றாம் பருவம், ஐந்தாம் பருவம் ஆகியவற்றிற்கான தேர்வுகள் ஒவ்வோராண்டும் திசம்பர்த் திங்களிலும், இரண்டாம் பருவம், நான்காம் பருவம், ஆறாம் பருவம் ஆகியவற்றிற்கான தேர்வுகள் ஒவ்வோராண்டும் சூன் திங்களிலும் நடைபெறும்.

5. கட்டண விவரம்

பட்டயம், மேற்பட்டயம், மற்றும் பட்டப் பாடங்களின் பதிவு மற்றும் தேர்வுக் கட்டணம் பற்றிய விவரம் அறிய  இங்கே சுட்டுக

6. இறுதித் தேர்வுக்கான வினாத்தாள் அமைப்பு

இறுதித் தேர்வின் வினாத்தாள்கள் கீழ்க்காணும் வகையில் அமையும்.

ஒவ்வொரு வினாத்தாளும் மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும்.

பிரிவு - 1
ஒரு சொல்/தொடர் விடை வினாக்கள் (15 வினாக்களுக்கும் விடை அளிக்க வேண்டும்)
15x1=15
பிரிவு - 2
ஒரு பத்தி விடை வினாக்கள்(8 வினாக்களில் எவையேனும் 5)
5x3=15
பிரிவு - 3

பெருவிடை வினாக்கள்(3 வினாக்களுக்கு ஒவ்வொரு வினாவுக்கும் மூன்று பக்க அளவுக்குள் விடை அளிக்க வேண்டும்) (ஒவ்வொரு வினா எண்ணின் கீழும் ‘அ’ மற்றும் ‘ஆ’ எனக் கொடுத்திருக்கும் இரு பிரிவுகளில் ஒன்றனுக்கு விடை அளிக்க வேண்டும்)

3x15=45
 
 
-------
 
மொத்த மதிப்பெண்கள்
75
 
 

7. தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்படும்; தனித்தனியே ஒவ்வொரு மாணவருக்கும் மின் அஞ்சல் மூலமும் முடிவுகள் தெரிவிக்கப்படும். பட்டப் படிப்பிற்கான பட்டங்கள் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும். அப்பட்டங்கள் மாணவர்களுக்கு அவர்களது தொடர்பு மையங்கள் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

8. தேர்ச்சியும் தேர்ச்சித் தர மதிப்பீடும்

ஒவ்வொரு தாளுக்கும் 5 தரப் புள்ளி மதிப்பீட்டு முறையில் தேர்வு முடிவுகள் வழங்கப்படும். தரக் குறியீடும், தரப் புள்ளிகளும், அவற்றிற்கு இணையான மதிப்பெண்களும் கீழ்க்காணும் அட்டவணையில் உள்ளவாறு அமையும் :

தரக் குறீயிடு
தரப் புள்ளி
100-க்கான மதிப்பெண்கள்

O

4.5 - 5.0

90 முதல் 100

 A+

4.0 - 4.45

80 முதல் 89

A

3.5 - 3.95

70 முதல் 79

 B+

3.0 - 3.45

60 முதல் 69

B

2.5 - 2.95

50 முதல் 59

 C+

2.25 - 2.45

45 முதல் 49

C

2.0 - 2.2

40 முதல் 44

ஒவ்வொரு தாளிலும் தேர்ச்சி பெறக் குறைந்த அளவு 2 தரப் புள்ளிகள் எடுக்க வேண்டும். பட்டயம்/மேற்பட்டயம்/பட்டம் பெறச் சராசரியாக 2.5 தரப் புள்ளிகள் எடுக்க வேண்டும். சராசரித் தரப் புள்ளிகள் 2.5-க்குக் குறைவாகப் பெற்றவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ள தாள்களில் மீண்டும் தேர்வு எழுதிச் சராசரித் தரப் புள்ளிகளை 2.5க்கு உயர்த்திப் பட்டயம்/மேற்பட்டயம்/பட்டம் பெறலாம்.

9. தேர்ச்சி ஒப்புமை

இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவால்(UGC) அங்கீகரிக்கப்பட்ட தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்பட்டத்தை வழங்குவதால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவோர் இந்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டத்திற்கும் இது நிகரானது ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-04-2018 14:39:58(இந்திய நேரம்)